78
பாலஸ்தீனம்
குலைந்து உருத் தெரியாமல் போய் விடும் என்று, மேற்படி இரு சாராரும் எதிர் பார்த்தனர். ஆனால், இவர்கள் எதிர்பார்த்தபடி, பாலஸ்தீன தேசீய இயக்கம் அடங்கி ஒடுங்கி விடவில்லை; மிதவாத அராபியர்களும், அரசாங்கத்தைத் தழுவி நிற்கவில்லை.
பாலஸ்தீனத்தில் செல்வாக்குள்ள குடும்பங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று ஹுஸேனி குடும்பம்; மற்றொன்று நாஷா ஷீபி குடும்பம். தற்போது ஹுஸேனி குடும்பத்தின் தலைவர், ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’யாகிய ஹாஜ் அமீன்—எல்—ஹுஸேனி; நாஷா ஷீபி குடும்பத்தின் தலைவர் ராகேப் பே நாஷா ஷீபி. இந்த இரு குடும்பத்தினருடைய செல்வாக்குக்குட்பட்ட அரசியல் வாதிகளும், மற்றப் பொது ஜனங்களும் சேர்ந்து, தனித் தனிக் கட்சியினராகப் பிரிந்திருக்கின்றனர். மேற்படி இரு குடும்பத்தினருக்கும் எப்பொழுதும் பகையுண்டு. சாதாரணமாக, ஹுஸேனி குடும்பத்தினரைத் தீவிரவாதிகளென்றும், நாஷா ஷீபி குடும்பத்தினரை மிதவாதிக ளென்றும் அழைப்பதுண்டு. தீவிரவாதிகளுக்கு, நாட்டிலே அதிகமான செல்வாக்கு இருப்பதைக் கண்டு, நாஷா ஷீபி குடும்பத்தினர், தங்கள் மிதவாத அபிப்பிராயங்களை வெளியில் சொல்லாமலும், அது சம்பந்தமான பிரசாரஞ் செய்யாமலும் சும்மாயிருந்தனர். ஹுஸேனி குடும்பத்தைச் சேர்ந்த ஜெருசலேம் ‘கிராண்ட் மப்டி’யாகிய ஹாஜ் அமீன்—ஹுஸேனி நாடு விட்டுச் சென்று விட்டமையாலும், ‘மப்டி’ கட்சியினரின் செல்வாக்கு ஒடுங்கி