பிரிவினைப் பிரச்னை
77
மாதம் 9ந் தேதி தங்கள் அறிக்கையை வெளியிட்டனர். பீல் கமிஷன் அறிக்கையானது, அது நியமிக்கப் பெற்ற பன்னிரண்டாவது மாதத்தில்தான் வெளியாயிற்று. வுட்ஹெட் கமிஷன் அறிக்கையோ, எட்டு மாதங்கள் கழித்தே வெளி வந்தது. இந்தத் தாமதத்திற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. 1937ம் வருஷத் தொடக்கத்திலிருந்தே, பாலஸ்தீனப் பிரச்னையை விட இன்னும் முக்கியமான பிரச்னைகள் பல—பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கே பங்கம் ஏற்படக் கூடிய மாதிரி எழுந்த பிரச்னைகள் பல—பிரிட்டிஷ் ராஜதந்திரிகளின் கவனத்தை இழுத்து வந்தனவென்பது உண்மைதான். ஆனால், பாலஸ்தீன விஷயத்தில் இவர்கள் வேண்டுமென்றே தாமதங் காட்டினர் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், சிறிது காலம் சென்ற பிறகு ‘மப்டி’யைத் தலைமையாகக் கொண்ட அராபியத் தீவிரக் கட்சியினரின் செல்வாக்கு ஒடுங்கி விடுமென்றும், ட்ரான்ஸ் ஜார்டோனியா சிங்காதனத்தில் கொலு வீற்றிருக்கும் எமிர் அப்துல்லாவைத் தலைமையாகக் கொண்ட அராபிய மிதவாத கட்சியினர், அரசாங்கத்காரின் கொள்கைகளை ஆதரிக்கக் கூடுமென்றும், எதற்கும் சிறிது காலம் ஆக வேண்டுமென்றும் பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை, பிரிட்டிஷ் ராஜதந்திரிகளுக்கு மட்டுமல்ல, யூகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. அராபிய தேசீய இயக்கத்திற்குத் தலைமை வகித்த ‘கிராண்ட் மப்டி’ பாலஸ்தீனத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்டு விட்டபடியால், அராபிய தேசீய இயக்கமே நாளா வட்டத்தில் சீர்