76
பாலஸ்தீனம்
தார், வருவாயை உத்தேசித்து, இந்த மாதிரியான பல ‘கண்டிராக்டு’களையும் எடுத்து வேலை செய்து வந்தனர். அரசாங்கத்தாருடைய வேலைகள் பல, இந்த ஸ்தாபனத்திற்கே ‘கண்டிராக்டாக’க் கொடுக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே, அராபியர்களுக்கு இஃது ஆத்திரமாயிருந்தது. இப்பொழுது, இந்த ‘டெகார்ட் சுவரை’க் கட்டும் வேலையையும் யூதர்களிடம் ஒப்புவித்தது, அராபியர்களுக்கு அதிகமான ஆத்திரத்தை மூட்டி விட்டதென்பதை விஸ்தரித்துச் சொல்ல வேண்டியதில்லையல்லவா?
1938ம் வருஷத் தொடக்கத்தில், பாலஸ்தீனத்தின் புதிய ஹை கமிஷனராக ஸர் ஹாரோல்ட் மக் மைக்கேல்[1] நியமிக்கப்பட்டிருப்பதாகவும், பிரிவினை விஷயத்தில் அநுபவ சாத்தியமான பிரச்னைகள் என்னென்ன தோன்றும், அவற்றைச் சமாளிப்பதெப்படி என்பவைகளைப் பற்றி விசாரிக்க, ஸர் ஜான் வுட்ஹெட்[2]டின் தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப்படுமென்றும், இந்தக் கமிஷனுடைய அறிக்கை வெளியாகும் வரையில், பாலஸ்தீன சம்பந்தமாக இது காறும் அநுஷ்டிக்கப் பட்டு வந்த கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இராதென்றும், பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தெரிவித்தனர்.
இதன்படியே, வுட்ஹெட் கமிஷனார், 1988ம் வருஷம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி பாலஸ்தீனத்திற்கு வந்து விசாரணை தொடங்கி, நவம்பர்