பிரிவினைப் பிரச்னை
75
துக்குத் தப்பித்துச் சென்று விட்டது, அல்லது தப்பித்துச் செல்லுமாறு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது, அந்த ‘மப்டி’யின் செல்வாக்கையே புலப்படுத்துகிறது. நாளது வரையில், லெபனோன் பிரதேசத்திலிருந்து கொண்டு, பாலஸ்தீன விலகாரங்களை ‘மப்டி’ நடத்திக் கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.
இதற்குப் பிறகு, அதிகாரிகள் பல விதமான அடக்கு முறைகளை ஒன்றன் பின்னொன்றாகக் கையாண்டனர். கல்கத்தாவில், போலீஸ் கமிஷனராயிருந்து, வங்காளத்தில் நிலவியிருந்த பலாத்கார இயக்கத்தை அடக்கி விட்டதாகப் பெயர் பெற்ற ஸர் சார்லஸ் டெகார்ட்[1], விசேஷ உத்தியோகஸ்தனாக நியமிக்கப் பெற்றான். இவன், வடக்கிலுள்ள சிரியாவிலிருந்து பாலஸ்தீன அராபியர்களுக்கு ஆள் பலமும், ஆயுத உதவியும் கிடைக்கிறதென்று கருதி, இதனைத் தடுப்பதற்காக, பாலஸ்தீனத்தின் வடக்கெல்லை பூராவும் முட் கம்பிகளினாலாய வேலி போட்டான். இதற்கு ‘டெகார்ட் சுவர்’[2] என்று பெயர். இந்த ‘டெகார்ட் சுவர்’ அமைக்கப்பட்ட விஷயத்தில் ஒரு விசேஷம். அதாவது, இதனை அமைப்பதற்குரிய ‘கண்டிராக்ட்’ யூத தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு அளிக்கப் பட்டது! ‘ஹிஸ்தாத்ரூத்’ என்ற இந்த யூதத் தொழிலாளர் ஸ்தாபனத்-