உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியயனவிருத்தி

வலமாத்திரிந்து (நல். பாரதம் தருமசா. 177). சிறுவர் அத்தியயனம் செய்வித்தல்

இங்குள்ளார்க்கு

வேண்டும் (மீனா. பெருந்துறைப்பு. பெருந்துறை. 30).

அத்தியயனவிருத்தி

பெ. கோவிலில் வேதமோதற்கு

விடப்பட்ட மானியம். (செ. ப. அக. அனு.)

அத்தியவசாயம்1 பெ. உறுதிப்பாடு. இப்படி இருக்க ஒருதலை அத்தியவசாயமேயாக நீர் சொல்லு வான் என் (பெரியதி. 1 பிர. 7, 1 வியாக்.).

அத்தியவசாயம்' பெ. ஒரு பொருளோடு மற்றொரு பொருளின் பேதத்தை ஐயத்துடன் அறிகை. (அணி.

12).

அத்தியவசாயம்' பெ. விடாமுயற்சி. (சங். அக.) அத்தியவசாயம் + பெ. மனப்பாடம் செய்கை. (முன்.)

அத்தியவசாயம்' பெ. மனப்போக்கு. (செ.ப. அக.)

அத்தியற்பம் பெ. மிகச்சொற்பம். (கதிரை. அக.)

அத்தியற்புதம் பெ. பெருவியப்பு. (செ.ப. அக.)

அத்தியாகாரம்1 பெ. (இலக்.) அவாய் நிலையால் சொல்லை வருவித்து முடிக்கை. (பிர. வி.50 உரை). அத்தியாகாரம்' பெ. மிகுந்த உணவு. (சாம்ப. அக.) அத்தியாகினம் பெ. கருஞ்சீரகம். (முன்.)

...

அத்தியாச்சிரமம் பெ. 1. நான்கு ஆசிரமங்களையும் கடந்த நிலை. நைட்டிகம் அத்தியாச்சிரமம் .. இவைகள் முதலான விரதங்களைப் பண்ணவேண் டுவதுமில்லை (சி. சி. 8,32 சிவாக்.). 2. 2. துறவறம். (சேந். செந். 73)

அத்தியாத்துமசாத்திரம்

பெ. சாங்கியம் பாதஞ்சலம் வேதாந்தம் என மூவகைப்பட்ட ஆத்தும விசார சாத் திரம். (வேதாந்த பரிச்.15)

அத்தியாத்துமம் பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (செ.ப.அக.)

அத்தியாத்துமமதம் பெ. பாற்கரியம், மாயாவாதம், சத் தப்பிரமவாதம், கிரீடாப்பிரமவாதம் என நால்வகைப் பட்டு ஆத்துமாவின் சொரூபத்தை விளக்கும் மதம். (விவேகசிந். வேதாந்தபரிச். 16/செ.ப.அக . அனு.)

18

82

அத்தியானம்

அத்தியாத்துமிகம் (அத்தியான்மிகம்) பெ. மங்களுள் ஒரு பகுதி. (செ. ப. அக. அனு.)

சைவாக

அத்தியாபகன் பெ. வேதம் ஓதச் செய்பவன். வேதபட் டனவன் அத்தியாபகனென்று

11, 5).

...

சிலர் (பிரபோத.

அத்தியாபனம் பெ. வேதம் ஓதச் செய்கை. (கதிரை.

அக.)

அத்தியாயம் 1 பெ. நூலினுள் பொருள் அடிப்படையில் செய்யப்படும் பாகுபாடு படலம், இலம்பகம், சருக் கம், காண்டம், பரிச்சேதம் அத்தியாயமாகும் (பிங். 2068).

அத்தியாயம் 2 பெ. வேதம். (யாழ். அக.அனு.) அத்தியாயனம் பெ. வேதம் ஒதுகை. (யாழ். அக.) அத்தியாரோபம் பெ. ஒன்றன் தன்மையை மற்றொன் றில் ஏற்றிக்கூறுகை. அத்தியாரோபம் என்றும். அப வாதம் என்றும் சொல்லும் உத்தி (கைவல்ய. 1,19). அத்தியாரோபம் உள்ளசுத்தியூடு இலாத இரசி தம் விளைத்தல்

(வேதா. சூ. 28).

அத்தியாவசியகம் பெ.

அக.)

இன்றியமையாதது.

(கதிரை.

அத்தியாவாகனிகம் பெ. பெண் கணவன் வீட்டுக்குச் செல்லுங்காற் பெறுஞ்சீதனம். (யாழ். அக.அனு .)

அத்தியாளி பெ. சிங்கக்குட்டி. ஆளி என்பது அத்தி யாளி எனினும் அமையும் (பாரிகாதை 132 உரை).

அத்தியான்மிகம் (அத்தியாத்துமிகம்) பெ. சைவாக 1

மங்களுள் ஒரு பகுதி. வைதிகம் அத்தியான்மிகம் அதிமார்க்கம் ...என நூல்களை ஐவகைப்படுத்து

(சி. போ. பா. சிறப். 17).

அத்தியான்மிகம்2

பெ. 1.ஆன்மா பிறரால் அடையும் (மூவகைத்) துக்கங்களுள் ஒன்று. (சி. சி. 2, 39 சிவாக்.) 2.ஆன்மாவிற்குரியது. (செ.ப.அக .அனு.)

அத்தியான்மிகம்3 பெ. அகம் புறம் என்னும் அறிவு. அத்தியான்மிகமாவது அகம் புறம் என்னும் அறிவு (சதாசிவ. 43 உரை).

அத்தியான் மிகவினை பெ. சிவபூசை முதலியன செய் கை. (சி. போ. 1 உரை)

அத்தியானம் பெ. வேதம் ஓதுகை. அத்தியான மாமி னையர் கத்துவதும் (பிரபோத.11,4).