உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமை1-தல்

அமை1-தல் 4 வி. 1. அடங்குதல். அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் (இயற். முதல்திருவந். 32). உமையுள் குவார் அமைகிலராகிலர் அன்பே (தேவா. 3.95,5). நின் சேவடி சேர்ந்து அமைந்து பழுத்த மனத்து அடியர் (திருவாச. 24, 1). அமையாவென்றி அரத்த நெடு வேலோய் (கல்லாடம் கடவுள். 6,15). 2. தங்கு தல். துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே (ஐங். 164). மறந்து அவண் அமையா ராயினும் (அகநா. 37, 1). நீர் அமையும் மாற்றெனக் கருப்புயல் (கச்சி. காஞ்சி. கழு.148).

அமை2 - தல் 4 69.

1.நிறைதல். அஞ்சேறு அமைந்த முண்டை விளைபழம் (பதிற்றுப். 60,6). தம்மின் றமையா நம் நயந்தருளி (நற். 1, 7). உறுப்பமைந்து ஊறு அஞ்சா வெல்படை வேந்தன் (குறள்.761). சிறந்து அமைந்த கேள்வியர் (இனி. நாற்.31). அனைத்துடன் கொண்டு வந்தங்கு அன்பினால் அமைய ஆட்டி (தேவா. 4,55, 6). அமைந்த தன் ஆற்றல் காட்ட... தாவும் கலுழன் (கம்பரா. 5,1,31). சான்றாண்மையாவது நற்குணங்கள் பலவற்றா லும் அமைந்தார் இலக்கணம் கூறுதல் (குறள். 99 மணக்.). முன் கொண்டு அமைந்த நிலவும் உணர் வின் (பெரியபு. 20,15). 2. செறிதல். வழை அமை சாரல் (மலைபடு. 181). 3.நிரம்புதல். நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம் (புறநா. 18,18). பிரிந் துறை வாழ்க்கை புரிந்து அமையலையே (நற். 52, 7). நீர் இன்று அமையாது உலகு (குறள்.20). தூர்த்து அமைந்தனர் வானவர் தூய்மலர் (கம்பரா. 3,6,186).

4 வி.

...

ஆள்

அமை3-தல் 1. உடன்படுதல், இசைதல். அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே (நற். 239.9). கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை- (குறள். 803). போமாறமைமின் வான் பொன்னடிக்கே (திருவாச. 45,3). அம்மை யும் உதவுதற்கு அமைய வேண்டுமால் (கம்பரா. 2, 1,23). 2. பொருந்துதல், ஏற்புடையதாதல். வணர் அமை நல்யாழ் இளையர் பொறுப்ப (பதிற்றுப். 41, 2). அணிவனப்பு அமைந்த பூந்துகில் (பரிபா. 13, 2). ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்தமாக (தேவா. 6, 45, 5) தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் (திருவாச. 4,53). அழகு அமைந்த மேனியான் (கம்பரா. 2, 12, 26). மாதவம் புரிந் தருளுதற்கு அமைந்த வளத்தொடும் விடுத்தான் (பெரியபு. 19, 54). பாங்கமை பதலை (கந்தபு.5, 1, 9). 3. (இலக்.) வழுவாயினும் ஏற்கலாம் எனக்கொள்ளுதல், வழுவமைதி. பொருள் வேறு பட்டு வழீஇ அமையுமாறு (தொல். பொ. 196 நச்.). பெ. சொ . அ.1-19 அ

...

291

அமை- தல்

4. போதியதாதல். அடியார்படுவது இதுவேயா கில் அன்பே அமையும் (தேவா. 4, 1,9). கற்பன வும் இனி அமையும் (திருவாச. 39,3). ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் (கம்பரா. 6,13,9). அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும் (குறள். 165 மணக்.). போர்புரியும் வீரர் ஒரு பதினாயிரந்தேருற்றன அமையும் (திருவால. பு. 46, 5). 5. செய்யக் கூடியதாதல். என்னால் அமை தவம் எலாம் கொளத் தக்கனை (கம்பரா. 3, 3, 31). காரியம்...அமையுமாயினும் (சேதுபு. அவை. 2).

அமை4 - தல் 4 வி. 1. இயற்கையாக வாய்த்திருத்தல். கடித்தமைந்த பாக்கினுள் கல்படுதல் இன்னா (இன். நாற்.39). இயற்கையின் அமைந்தவும் (பெருங். 1, 52, 34). ஆனமென் சொல்லும் அனம்போல் நடையும் அமைந்தவரே (சங்கர. கோவை 7). 2. உண் டாதல். ஆரா அமுதாய் அமைந்தன்றே (திருவாச. 47,7). உடம்பு தூயதாதல் நீரினாலே அமைந்து விடும் (குறள்.298 மணக்) 3.கிடைக்கப்பெறுதல்.

இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே (காரை. அந்.91).

அமை5-தல் 4 வி. ஆயத்தமாதல். செருச் செய்வான் அமைந்தீர் ஆயின் (கம்பரா. 3, 5, 139). அமைதிர் போருக்கு (கந்தபு. 3, 17, 14).

அமை - தல்

4வி. தகுதியாதல். அறனறிந்து ஆன் றமைந்த சொல்லான் (குறள். 635). வெங்கதிரோன் வழியே போவதற்கமைந்து கொள்மின் (தேவா. 4,41,8). திருமார்பற்கு அமைந்ததோர் தாரம்

தான் அலளேனும் (கம்பரா.5,5,30).

அமை7-தல் 4 வி. 1. முடிதல். அமைந்தது இனி நின் தொழில் (கலித். 82,35). மன்னற்கு அமைச் சன் அஃது அமைந்தது என்றான் (சீவக. 1341). 2. இல்லையாதல். துணை அமைவடிவும் சொல் லினிற்பொறி ஒற்றிக்கொண்டான்: அமைதல்-இல் லையாதல் (சீவக. 1721 உ. வே. சா. அடிக்குறிப்பு). 3. நீங்கியிருத்தல். நன்றிமறந்து அமையாய் ஆயின் (குறுந். 225). விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141, 12). நாகம் பதி அமைபருதி தன்

...

.

மேல் ஓடியாங்கு (சீவக. 982 நச்.).

...

அமை 8 - தல் 4 வி. பொறுத்திருத்தல். இமைப்புவரை அமையா நம்வயின் (குறுந்.218).

அமை-தல் 4 வி. (கண்) மூடுதல். புனல் தூவத் தூமலர்க்கண்கள் அமைந்தன (பரிபா. 7,52-53).