உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமை10தல்

அமை10 - தல் 4 வி. விரும்புதல். யானை... நெடுஞ்சுனை அமைந்து வார்ந்து உறைந்து (நற். 273, 6-7).

அமை11-தல் 4 வி. ஒத்திருத்தல். துறைவன் இவட்கு அமைந்தனன் (ஐங். 103). பறவையும் பல்வகை விலங்கும் பாடு அமைந்து உறைவன (கம்பரா. 4,

13, 13).

அமை12-தல் 4 வி. மாட்சிமையுடையதாதல். (நாநார்த்த.

522)

அமை13-தல் 4 வி. 1. கலத்தல். அமைதற்கு அமைந்த நம் காதலர் (குறுந். 4). 2. கோத்தல். வகை அமை மேகலை (பரிபா. 22, 30).

...

800

அமை14-த்தல் 11 வி. 1. செய்தல். யாத்தமைப்பதுவே (தொல். பொ. 481 பேரா.). அருவிலை நன்கலம் அமைக்குங்காலை (புறநா. 218, 4). கூந்தல் கதுப்பு அமைப்போரும் (பரிபா. 12,15). நாண் ஆக மேல் மிளிர நன்கு அமைத்து (காரை. அந் 28). அன்பு அமைத்து என்னுடைய சிந்தையே ஊரா கக் கொண்டான் (திருவாச. 47, 11). கீறு கோவ ணம் அன்று நெய்து அமைத்தது (பெரியபு. 7, 24). 2.ஏற்படுத்துதல். தண்நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து இருங்காழ் அகிலொடு (நெடுநல். 55-56). தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையன் (தேவா. 5, 97, 22). எனக்கு அள்ளூறு ஆக்கை அமைத்தனன் (திருவாச. 3, 177). 3. (தெப் பம் முதலியன ) கட்டுதல். வையமும் தேரும் அமைப் போரும் (பரிபா. திர. 2, 17). மாணையின் கொடி யால் ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து (கம்பரா. 2, 8,36). இந்திரவிமானம் இனிது அமைத்து (மதுரைச், உலா 18). சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப் போம் (பாரதி. தேசியம். 5,2). 4. படைத்தல். அரன் அயனென உலகழித்து அமைத்துளனே (திருவாய். 1, 1,8). உலகேழும் அமை எனின் உந்தியின் உதவிடு தொழல் வல்லோன் (சும்பரா. 2, 8, 22). அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்து (திருவரங் கலம். 1). நாலு குலங்கள் அமைத்தான் அதை நாசமுறப்புரிந்தனர் மூடமனிதர் (பாரதி. கண்ணன்.

...

3, 8).

...

www

அமை 15 -த்தல் 11 வி. பதித்தல், பொருத்துதல். நெடுங் கதவு அமைத்து (கலித். 135,3). சிலை அமைத்த சிந்தையாலே (தேவா. 7, 5, 8). பொற்குட முகட் டுக் கருமணி அமைத்தென (கல்லாடம் 5).

அமை16-த்தல் 11 வி. நியமித்தல். நாடொறும் அருக் கனில் சோதி அமைத்தோன் (திருவாச. 3,20).

292

அமை 24 - த்தல்

அமைத்தநாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு (சீவக. 2617). நாள் அமைத்து அழைக்க (கல்லாடம்

15, 19).

அமை17-த்தல் 11 வி. நிறுத்துதல். எழுந்து போயபின் அமைப்பது என் பிறிது? (கம்பரா. 6, 4, 38).திரு வடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (பெரியாழ். தி. 1,9.8 வியாக்.).

அமை18-த்தல் 11 வி. (படை, உணவு முதலியன) ஆயத்தம் செய்தல். புள் ஓர்த்துப் படை அமைத்து (அகநா. 207, 3-4). கணக்கருந் திணைகளும் அமைக்குமுறை பிழையாது (பெருங். 4, 2,45). வேள் விக்குரிய எலாம் கடிது அமைப்ப (கம்பரா. 1, 11, 18). ஐந்து பல்வகையிற் கறிகளும் அமைப் பேன் (பாரதம். 4, 1, 15).

.

...

அமை19-த்தல் 11வி. (இலக்.) வழுவாயினும் அமையு மென்று கொள்ளுதல். வழுப்படக் கூறினும் அமைக்க வென்றவாறாம் (தொல். பொ. 210 நச்.).

...

அமை20-த்தல் 11 வி. சேர்த்தல், வைத்தல். வாள் தோள் கோத்த காளை சுவல் மிசை அமைத்த கையன் (நெடுநல்182). அனாதியாதி அமைக்க வேண்டும் (சி. சி. பர. லோகா. மறு. 18).

அமை21-த்தல் 11 வி. 1. பொறுத்தல். என்னை இகழ்ந் தனிர் என்று சீற அமைத்து நின் அழகு கோலம் ஆரவுண்டு (சீவக. 2839). குற்றம் அமைத்தருள் (சேதுபு. துத்தம். 10). 2. ஆறியிருத்தல். அமைக்கும் பொழுதுண்டே ஆராயில் நெஞ்சே (இயற். பெரிய திருவந். 38). 3. அமைதிபெறச்செய்தல். பாரிடக் கணங்களைப் பாணியாலமைத்து (கந்தபு. 4, 8, 67).

அமை22-த்தல் 11 வி. ஆசைப்படுதல். விண்ணாட்டுக்கு உச்சமதாம் வீட்டை அமைத்திருந்தோம் (இயற் பெரியதிருவந் 48).

அமை23-த்தல் 11வி. மீட்டுதல். நரி யாழ் அமைப்ப (காரை. பதி. 1, 11).

அமை 24 - த்தல் 11 வி. அடக்குதல். வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப (அகநா. 224, 2). கண்ட மரகதக் கோவை கூடு அமைத்த ஒண்டொடி மெல்விரல்கள் ஒத்து இலங்க (மதுரைச். உலா 60). புலனைந்தும் விடயங்களிற் செலாது அமைத்து (வைராக். சத. 37). சாவேற்றின் திண் செருக்கை செருக்கை அன்றமைத்தான்

(பெருந்.1110).