உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயித்திரம்1

அயித்திரம்' பெ. கருங்காணம், காட்டுக்கொள்ளு. (செ. ப.அக.அனு.)

அயித்திரம் ' பெ. காக்கட்டான் கொடி. (மரஇன. தொ.)

அயிதம்

(அகிதம்' அகுதம்) பெ. தீங்கு. இந்த

மானியத்துக்கு அயிதம் பண்ணினவன்

1, 138).

(தெ.இ.க.

அயிந்தா பெ. அ. வருகிற. அயிந்தா பசலி (செ. ப.

அக).

அயிந்தி பெ. ஒருவகை மீன். மயிந்தி உழுவை அயிந்தி கூனி (முக்கூடற். 51).

அயிந்திரதிசை பெ.

கிழக்கு. அயிந்திர திசையின்

(சீகாளத்திப்பு. தென்கை. 64).

அயிந்திரப்பரவை பெ. ஐந்திர வியாகரணமாகிய கடல். தாயினான் வேலையோடும் அயிந்திரப்பரவை

தன்னை (கம்பரா. 6,21,154).

அயிந்திரபுவனம் பெ. இந்திரலோகம். அயிந்திர புவ னத்தைச் சேர்ந்து ... போக விதங்களை அனுபவிப் பர் (சிவதரு. 5, 11 உரை).

அயிந்திரம் பெ. ஐந்திரம் என்னும் வியாகரணம். அயிந் திரம் நிறைந்தவன் ஆணை (கம்பரா. 6, 4, 39).

அயிநார் பெ. ஈளை (செ.ப. அக.)

அயிப்பை பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அயிம்சை (அகிஞ்சை, அகிம்சை, அயிங்கிசை, அயிங் கிதம், அயிங்கிதை, அயிஞ்சை) பெ.

(செ. ப. அக.)

கொல்லாமை.

அயிமாசு பெ. 1. பரிசோதனை. (சங். அக.) மதிப்பு. (முன்.)

2.புள்ளி

அயிர் 1 -த்தல் 11 வி. ஐயமுறுதல். பாணர் அயிர்ப்புக் கொண்டு (நற். 46, 5-6). அயிர்த்தன்று மன்னே நெஞ்சம் (அகநா. 315, 5). அருங்கடி வாயில் அயி ராது புகுமின் (மலைபடு. 491). இச்சரம் எய்தவன் ஆர்கொல் என்று அயிர்க்கும் (கம்பரா. 4, 7, 69). நண்பு கொண்டு அயிர்த்தல் தீய (பாரதம். 2, 2,163). ஆவலிற்படர்ந்த சேவல் கண்டு அயிர்த் பெ. சொ. அ.1-20

...

3

05

அயிர்ப்பு1

தது (பண்டாரமும். 29, 6). கருவிழி சிவந்த வளனை நோக்கிய செவிலியர் அயிர்த்தவர் (கச்சி. காஞ்சி. திருக்கண்.144).

அயிர்' பெ. ஐயவுணர்வு. உம்பர் நாட்டவர் அயிர் உற இமைப்பன (கம்பரா. 1,3,29). அயிரில் தீர்ந்த பேரறிஞரும் அனையர் தம் செல்வ (திரு விளை. பு. நகரச். 65).

அயிர்' பெ. 1. நுண்மை. அயிர் மணல் படுகரை போகி (அகநா. 113, 20). அயிர் மணல் தண்புற வின் ஆலிபுரள (கார்நாற். 3). அயிரா இமைப் பினை ஓர் ஆயிரம் கூறிட்ட (கம்பரா. 6,3, 167). 2. கூர்மை. அணங்கி எறிவன் அயிர் மன வாளால் (திருமந். 1493) 3. நுண்மணல். அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதை (நற். 163, 2). அயிர் செறியிலை காயா அஞ்சனம் மலர (முல்லைப். 92). அயிர் வரித்து அறல் வார (கலித். 35, 6). அயிரிடு நெடுவழி அரசிடை இருந்துழி (பெருங்.1, 36, 224). அயிர் கிடக்கும் கடல்வலயத்தவர் அறிய (கம்பரா 3, 4, 23). 4. கருமணல். அயிருறக்கலந்த நன்னீராழி (கம்பரா. 3, 7, 107). அயிர்நுண்குழல் அரமடநலார் (பாரதம். 10,1,31)

அயிர் பெ. சிறுநீர். (இராசவைத்./செ. ப. அக.)

அயிர்" பெ. காஞ்சொறிக்கொடி. (மரஇன. தொ.)

அயிர்' (அயிரம்1) பெ. 1. (புகைக்கும் பொரு ளான) கண்ட சருக்கரை. அகிலொடு வெள்ளயிர் புகைப்ப (நெடுநல். 56). குடதிசை மருங்கின் வெள் ளயிர் தன்னொடு (சிலப். 4, 35). வெள் அயிர்க் குறுமுறி அடுக்கிய (ஞானா. 43, 17). சுவை சால் அயிரே (குமரவேள் ப. அந். 97). 2. கற்கண்டு. அயி ரும் தேனும் பாகும் தலைமயங்குமே (கம்பரா.

1, 2, 55).

...

...

அயிர்க்கடு பெ. அங்குசம். (யாழ். அக. அனு.)

அயிர்த்துரை-த்தல்

11 வி. தலைமகளுடைய கண் சிவப்பு முதலியவற்றைக் கண்டு தோழி ஐயங்கொண்டு ரைத்தல் என்னும் அகத்துறை. (களவி. காரிகை 50.)

அயிர்ப்பு1 பெ. ஐயம், சந்தேகம். பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பின்றி (சிலப். 9,26). அயிர்ப்பின் றிக் காக்கை வளர்க்கின்றது போல் (திருமந். 488).