உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னகந்தி

அன்னகந்தி பெ. வயிற்றுளைவு. ( கதிரை. அக.)

அன்னகோட்டகம் பெ. நெற்களஞ்சியம். (முன்.)

அன்னகோட்டகன்1 பெ. திருமால். (முன்.)

அன்னகோட்டகன் " பெ. சூரியன், (முன்.)

அன்னகோட்டம் பெ. தானியம் வைக்கும் வீடு. (சங். அக.)

அன்னங்கட்டு-தல் 5 வி. நெல்மணி பால் பற்றுதல், கதிரில் மணி பிடித்தல். (தஞ். வ.)

அன்னங்கோர்(ரு)-தல் 4 வி. நெல்லில் பால்பிடித்தல். (செ.ப.அக. அனு.)

அன்னச்சேவல் பெ. ஆண் அன்னப்புள்.

சேவல் அன்னச்சேவல் (புறநா. 67,1).

அன்னச்

அன்னச்

7).

சேவல் அயர்ந்து விளையாடிய (மணிமே.5,123). அன்னச்சேவலோடு கூடி (தேவா. 7,35,

அன்னசத்திரம் பெ. உணவு அளிப்பதற்கான அறச் சாலை. அன்னசத்திரங்கட்டி (குற்றா. குற.90,1). அன்ன சத்திரங்களன்ன நன்மடங்கள் (செங்கோட் டுப்பு.3,20,23). அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் (பாரதி. தோத்திரம். 62, 9).

அன்னசாரம் பெ. (சோற்றின் வடி) கஞ்சி. (யாழ். அக.)

அன்னசாலை பெ. உணவளிக்குமிடம். அன்னசாலை யறம்புரி சாலைகள் (சீவல. கதை 21).

அன்னசி' (அன்னாசி, அன்னாசு, அனாசி1) பெ. 1. பறங்கித்தாழை. (வைத். விரி. அக. ப. 26) 2. அன்னாசிப்பழம். (பே.வ.)

அன்னசி 2 பெ. சிறுமரவகை. (மரஇன. தொ.)

அன்னசிராத்தம் பெ. சமைத்த உணவு கொண்டு நீத் தார்க்குச் செய்யும் கடன். (செ. ப. அக.)

அன்னசுத்தி பெ. 1.நெய். (சங். அக.) 2. வடித்த சோற்றின் மீது சுத்திக்காகச் சிறிது நெய் விடுகை. (செ. ப. அக.)

அன்னணம் வி. அ. அவ்விதம். கற்றாரைக் கற்றது உணரார் என மதியார் உற்றாரை அன்னணம்

5

22

அன்னதானம்

ஓராமல் (ஏலாதி 9). அன்னம் என அன்னணம் நடந்தார் (சூளா. 449). அண்ணல் அற (யசோதர.67).

அல்ல

என

அன்னணம்

அன்னத்தவன் (அன்னத்தான்) பெ. (அன்னத்தை ஊர்தியாகவுடைய) நான்முகன். (கதிரை. அக.)

அன்னத்தான் (அன்னத்தவன்) பெ. (அன்னத்தை ஊர்தியாகவுடைய) நான்முகன். அன்னத்தான் அத் தானாம் அநத்தான் மாமனாம் (பத்ம. தென்றல்.

தூது காப்பு).

அன்னத்தியாகி பெ. ஒரு பட்டப்பெயர். அன்னம் அளித்த அன்னத் தியாகி (கார். கொங்கு. சத. 77 மேற்.).

அன்னத்துரோகம் பெ. உணவு உண்ட வீட்டிற்குத் தீங்கு பண்ணுகை. (செ. ப. அக.)

அன்னத்துவேடம் பெ. உணவில் வெறுப்பு. (பே.வ)

அன்னத்தூவி பெ. அன்னப்புள்ளின் மெல்லிறகு. துணைபுணர் அன்னத்தூவியிற் செறித்த (சிலப். 4, 66). அன்னத்தூவியும் அனிச்சம்தானும் நெருஞ்சிப்பழம் ஒக்கும் (இராசநா. கனவு. 10).

அன்னதாதா பெ. உணவு கொடுத்து ஆதரிக்கும் வள்ளல். அன்னதாதாவும் முதலான தயாவினோர் வீற் றிருந்த தன்மை கண்டான் (உத்தர. திக்குவி.51). உல கெலாம் அன்னதாதா என்பதும் மேழியர் பெருமை காண் (கயிலாச. சத. 6).

...

அன்னதாழை பெ. அன்னாசிச் செடி. (கதிரை. அக.)

அன்னதானக்குறுவை பெ. மூன்று மூன்று மாதத்தில் விளை யும் நெல்வகை. (செ.ப. அக.)

அன்னதானச்சம்பா பெ. சம்பா நெல்வகை. (முன்.) அன்னதானம்1 பெ. (முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றான) வறியவர்க்கு உணவளிக்கை. அன்ன தானம் அகில நற்றானங்கள் (கம்பரா. 1, மிகை.20). அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை சீதக்காதி (பெரும்.1306). அன்னதானம் தன்னிலும் ஓர் அதிக தான மில்லை (அறப்பளீ. சத.55). மறையவருக்கு அன்னதானஞ் செய்தவருக்குண்டா மிகுபலன் (செங்கோட்டுப்பு.3, 2, 24). ஞானத்திலே பரமோனத்