உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னதானம்'

...

திலே அன்னதானத்திலே உயர்நாடு (பாரதி. தேசியம். 4,1).

அன்னதானம் 2 பெ. அன்னதானக் குறுவைநெல்.

(செ . ப . அக.)

அன்னதீபம் பெ. (அன்னவடிவக்) கோயில்விளக்கு. (பரத. 4, 41)

அன்னது' கு. வி. 1. (அஃறிணை ஒருமைக் குறிப்பு வினைமுற்று) அத்தன்மைத்து. அன்னதேல் ஆற் றல் (கலித். 91,18). அம்பு அன கண்ணவள் உள் ளம் அன்னதேயால் (கம்பரா. 2,3,20).2. ஒத்தது, போன்றது. விறகொய் மாக்கள் பொன் பெற்றன்ன தோர் தலைப்பாடன்று அவன் ஈகை (புறநா. 70, 17).கூற்றம் அன்னதொர் கொள்கை (திருவாச. 5,

45).

அன்னது2 பெ. 1. அத்தன்மையது. பெருங்களிறு நல் கியோனே அன்னது ஓர் தேற்றா ஈகையும் உளது கொல் (புறநா. 140, 8). அன்னதே கருமம் ஐய (கம்ப ரா. 6, 30, 62). 2.(முன்னர் ஒன்றின் தன்மை எதுவும் கூறப்படாதபோது) அது என்னும் சுட்டு. அன்னதே அமைவது ஆனார் (கம்பரா.3,12,55).

அன்னநீர் பெ. பழைய சோற்று நீர், நீராகாரம். (சித். பரி. அக. ப. 156)

அன்னப்பறவை பெ. சீவன்.

(முன். ப. 25)

அன்னப்பாகு பெ. கஞ்சி. (கதிரை. அக.)

அன்னப்பால் பெ. அரிசி கொதிக்கும்பொழுது எடுக் கும் கஞ்சி. அன்னப்பால் சிறிதல்லாமல் மற்றோர் நற்பால் இல்லை (குசே. 78). அன்னப்பால் காணாத ஏழைகட்கு ஆவின்பால் எங்கே கிடைக்கும்

(மலரும். 819).

...

அன்னப்பிராசனம்

பெ. குழந்தைக்கு

முதன்முதல்

சோறூட்டும் சடங்கு. நாமகரணம் அன்னப்பிராசனம் (ஆனைக்காப்பு. கோச். 14). இரு மூன்று திங்கள் தனில் அன்னப் பிராசனம் செய்து (அழகிய. குருபரம். ஆளவந்தார். 8).

அன்னப்பூ பெ பெண்கள் தலையில் சூடும் அணிகலன். (நாட். வ.)

52

3

அன்னம்!

அன்னபக்கம் பெ. (நாட்டியம்) அவிநயம் காட்டும்

பெண்

குறிப்பு)

கைவகை. (சிலப். 3, 18 உ. வே. சா. அடிக்

அன்னபம்

பெ. ஆலமரம். ( வைத். விரி. அக.ப. 25)

அன்னபலி

பெ. உணவுப்படையல். அன்னபலிக்கு

அரிசி ஐயுழக்கு (புது. கல். 20).

அன்னபானம் பெ. பெ. சோறும் நீரும். அவருக்கு அன்ன பானம் இறங்கவில்லை (பே.வ.).

அன்னபானாதி பெ. உணவு, நீர் முதலியன. அன்ன பானாதி வர்ச்சிதராய் (குருபரம். ஆறா. ப. 11). அன்ன பானாதி வத்துக்களே மரணமாக்கும் (சீவசம். 52 உரை).

அன்னபிட்சை பெ. சோறாகப் பெறும் பிச்சை. (மீனா. சரித். 1,19)

அன்னபூமி பெ. சோற்றுக் கும்பம். (கதிரை. அக.)

அன்னபூரணி (அன்னபூரணை2 ) பெ. 1. உயிர்களுக்கு உணவு நல்கும் பராசக்தியின் அருட்கோலங்களில் ஒன்று. (செ.ப. அக.) 2. காசியிலுள்ள சத்தியின் பெயர். அகண்ட பூரணி எனும் அன்னபூரணி அம்மையே (சிவஞானதேசி. திருவருட். 7, 1).

அன்னபூரணை1 பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (அபி. சிந்.)

அன்னபூரணை'

(அன்னபூரணி) பெ. உயிர்களுக்கு

உணவு நல்குபவள், உமை.

(பே.வ.)

அன்னபேதி (அன்னவேதி) பெ. 1. ஒரு மருந்துச் சரக்கு. (போகர் நி. 13) 2. களிம்பு. (முன்.)

அன்னபேதி பெ. மலைமருது. (முன்.)

அன்னபேதி' (அன்னவேதி') பெ. ஒரு பூடு. (வைத்.

விரி . அக. ப.11)

அன்னபோதம் பெ. பாதரசம். (செ.ப.அக.அனு.)

அன்னம்' (அனம்!) பெ. 1. (பாலிலிருந்து நீரைப் பிரித்து உண்ணும் இயல்புடையதாகவும் அழகிய