உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிவானம்1

அடிவானம்1 பெ. கீழ்வானம். அடிவானத்தே அங் குப் பரிதிக்கோளம் (பாரதி. பாஞ்சாலி. 150).

அடிவானம்2 பெ.

நிலத்தைத்

தோண்டியமைக்கும்

கட்டட அடிப்படை. (பே.வ.)

அடிவிடு-தல் 6 வி. மிகுதியாகப் பயன்படுத்தியதால் பாத்

திரத்தின் அடி விரிதல்.

(LAGOT.)

அடிவிரி-தல் 4 வி. பாத்திரத்தின் அடி, வீறல் கண்டு பழுதாதல் அல்லது இற்றுப்போதல். (முன்.)

அடிவிள் (ளு) - தல்

(முன்.)

2 வி. பாத்திரத்தின் அடி விரிதல்.

அடிவிளக்கு-தல் 5 வி. பெரியோரைக் கால்கழுவி உப சரித்தல். திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் (LDGCLD. 24, 96).

1. செய்வினை. அவனுக்கு அடி

அடிவினை பெ. 1 வினை வைக்கிறான்

(ராட். அக.)

அடிவினை 2

(நாட். வ.). 2. தீவினை.

பெ. மாறாட்டம். (செ. ப. அக. அனு.)

அடிவீக்கம் பெ. 1. தசையிலோ தசைநாரிலோ இரத் தம் கட்டுவதால் வரும் புடைப்பு. (நாட்.வ.) கால்கனத்து வீங்குகை. (சாம்ப. அக.)

2.

அடிவீழ்-தல் 4 வி. தண்டனிடுதல், வணங்குதல். அடி கள் முன்னர் யானடி வீழ்ந்தேன்

(சிலப். 13, 87).

தண் தமிழ் மாலைகள் கொண்டு அடிவீழவல்லார் தடுமாற்றிலரே (தேவா. 7, 4,1-0). அந்தணனும் தனைவணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் (கம்பரா. 2, 12, 32).

அடிவீழ்ச்சி பெ. காலில் விழுந்து வணங்குகை. செங் கண்மால் சேவடிக் கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் (நாச்சி. தி.8,7). மலரடிக் கீழ்ச் சிற்றடிச்சி தத்தை அடிவீழ்ச்சி (சீவக. 1873).

அடிவை-த்தல்

பல

11வி. 1.தொடங்குதல். அடிவைத்த காய அருட்சத்தியாலே (திருமந். 1698).2. திருவடி தீக்கை செய்தல். நொடியின் அடிவைத்து நுண்ணு வு ஆக்கி (திருமந். 1778). 3, காலடி வைத்தல். அன்னமும் துயர்க்கடல் அடிவைத்தாள் (கம்பரா. 2, 13, 87). 4. நடக்கப் பழகுதல். குழந்தை அடி. வைக்கத் தொடங்கிவிட்டது (பே.வ.).

ணர்

செயலில் தலையிடுதல். (செ. ப. அக.)

5.

6.

பிறர்

உள்

1

41

அடு3-த்தல்

நோக்கமாகக்

கொள்ளுதல். எதையோ அடி வைத்துக்கொண்டு பேசுகிறான் (நாட். வ.).

அடிவைக்கும் ஆலாத்து பெ. கப்பலில் பணியாளர் நின்று வேலைசெய்ய உதவும் பெருங்கயிறு. (செ. ப.

அக. அனு.)

அடு-த்தல்

11வி. ஏற்றதாதல், பொருந்தியதாதல். எம் உயிர் உடம்பு அடுவி (அகநா. 136, 19). அடுக் கும் ஈது அடாது என்று அறிவு காட்டி இடிக்கு நர் (கம்பரா.53,136). அடுத்த திருத்தொண்டு உலகறியச் செய்த அடலேறு அனையவர் (பெரியபு. 55, 6), இப்படிச் செய்திருக்கிறாயே இது உனக்கு அடுக்குமா? (நாட்.வ.).

அடு 2 -த்தல் 11வி. 1.சார்தல், சேர்தல். ஆண்மை அடுத்த மகனென் கிளவி (தொல். சொல். 163 சேனா.). பன்மாண் அடுக்க இறைஞ்சினெம் (பரிபா. 13, 62). அடுத்த உயிர் ஆறுதொழிலென்று (ஏலாதி 69). அடுத்து ஆனை உரித்தானை (தேவா. 4, 7, 10). நின்பால் இயைந்து அடுத்த பேரரசு (கம்பரா. 2,13,2). சினம் தன்னை அடுத்தாரைக்கொல் லும் (குறள். 306 மணக்.). மடவார் அடியிலூட் டும் குழம்பு அடுத்த செம்பஞ்சு (பெரியபு. 19, 97). முனிவர் யாரும் அடுத்திடும் அவைக்கண் எய்தி (கந்தபு. 6, 13, 39). 2. சேர்த்தல். தச்சன் அடுத் தெறி குறட்டின் (புறநா. 290, 5). வெண்துகில் அடுத்து (சீவக. 617). 3. அண்மையிலிருத்தல். அடுத்து இருந்தாய் (தேவா. 4, 87,10). அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் படுத்தவர் (கம்பரா. 6, 4, 79). மதீனப் பதி அடுத்த ஊர் (சீறாப்பு.1 நபி. 40). 4. செறிந்திருத்தல். மாவும் பலாவும் சூழ்அடுத்து ஓங்கிய மலை (சிலப். 11, 84-85). 5. கிட்டுதல், நெருங்குதல். அடுத்து வந்த இலங்கையர் மன்னனை நெரித்தான் (தேவா. 5,37,11). மயிலன்னாள் அடுத்து வயமா ருதியை (பாரதம். 3, 5, 3). அடுத்து வணங்கி வலஞ் செய்திட்டு (திருவிளை. பு. 31, 16). மகப்பேறு அடுத்திடும் சமயம் (சீறாப்பு. 1, 5, 84). 6. அடைதல். அடுத்தனம் சீபரிபூரண ஓங்கல் (தணிகைப்பு. 587). 7. தங்குதல். யாழ் நறை அடுத்த அசுண நன்மாச்செவி (கம்பரா. பாயி. 7).

...

...

களவு.

அடு3- த்தல் 11 வி. நிகழ்தல். அஞ்சல் என்று இரங் குவாய் அடுப்பது யாது (கம்பரா. 5, 3, 35). பாவி யேன் கண்டவண்ணம் பரமனார்க்கு அடுத்த தென்னோ (பெரியபு. 10, 174). மன்னாடி செல் வன் தேவன்மேல் அடுத்த (தெ.இ. க. 19, 132).