உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்புக்கண்டுமுதல்

அடிப்புக்கண்டுமுதல் பெ. மொத்த நெல் விளைவு.

(ராட். அக.)

அடிப்புக்கூலி பெ. கதிரடிக்குங் கூலி. (செ. ப. அக.)

அடிப்புல் பெ. நிலத்தினடியில் எறும்புகள் சேர்த்து வைக்கும் தானியம். (செ. ப.அக. அனு.)

அடிப்பூச்சு பெ. இரும்புக்கம்பி முதலியவற்றில் முத லில் பூசப்படும் மட்டிப்பூச்சு. (பொறி. பொது. க. சொ.

ப. 55)

அடிப்பெருங்கடவுள் பெ. எல்லாவற்றிற்கும் மூலமான முழுமுதல்இறைவன். அடிப்பெருங்கடவுள் ஊழி யீறுதொறும் (தக்க. 656).

அடிப்பொடி பெ. கால்தூசு, பாததூளி. இத்தன்மம் ரட்சிப்பார் அடிப்பொடி என்தலைமேலது (தெ. இ.க.12,54).

அடிப்போடு- தல் 6 69. 1. தொடங்குதல். (வின்.) 2. காரிய நிறைவேற்றத்திற்காகத் தக்க சூழ்நிலையை மறைமுகமாக உருவாக்குதல். இவன் பணத்திற்கு

அடிப்போடுகிறான் (நாட். வ.).

அடிபட்டவன்1 பெ. 1. காயம்பட்டவன். வண்டியில் அடிபட்டவன் (நாட். வ.). 2. விளையாட்டில் தோற்றவன். (செ. ப. அக.)

2

அடிபட்டவன் 2 பெ. பழகினவன். (முன்.)

அடிபடு-தல் 6 வி. 1. அடிக்கப்படுதல். பிட்டு அமு துக்கு அடிபடுவோன் (திருப்பு. 451). விண்ணிலுறை வானவரில் யாரடிபடாதவர் (பாரதம்.31,107). 2. தாக்குண்ணுதல். அவசமாகி அடிபட்டு

வா.மனத்.6).

அடிபடு2 -தல் 6வி.

(ஞான

நீக்கப்படுதல், நீங்குதல். உன் பேர் அடிபட்டுப்போயிற்று (நாட். வ.). இந்த மருந்தால் பல நோய்கள் அடிபடும் (தொ.வ.).

அடிபடு -தல் 6வி. பலர் அறியப் பேசப்படுதல். அவர் பெயர் நாடெங்கும் அடிபடுகிறது (செய்தி.வ.). அப்படி ஒரு செய்தி அடிபட்டது (நாட். வ.).

அடிபடு + - தல் 6 வி. செலவழிதல். எத்தனை கலம் நெல்லாயினும் இந்தக் குடும்பத்தில் அடிபட்டு விடும் (நாட்.வ.)

13

4

அடிபிழை -த்தல்

அடிபடு -தல் 6வி. அனுபவம் பெறுதல். இன்ப துன்பங்களில் அடிபட்டவன் (முன்.).

அடிபடு-தல் 6 வி. கொல்லப்படுதல். இந்த ஊரில் ஒரு நாளைக்கு நூறு ஆடுகள் அடிபடும் (முன்.). அடிபணி- தல் 4 வி. காலில்விழுந்து வணங்குதல், தண்டனிடுதல். அடிபணிந்தேன் விண்ணப்பம் (பெரியாழ். தி. 3, 10, 2). எண்ணிலா அரசர் அடி பணிந்து இறைஞ்ச (சீறாப்பு. 1 தலைமுறை. 57).

அடிபதறு - தல் 5 வி.. 1. கால் நடுங்குதல். (al Gir.) 2. மனங்கலங்குதல். (இலங்.வ.)

அடிபதை - த்தல் 11 வி. (வலியால்) கால் உதறுதல். அடிபதைத்து அரற்றிய அரக்கி (கம்பரா. 3, 5, 97). அடிபறி - தல் 4 வி. வேரொடு பெயர்தல். ஊசிவேர் அடிபறிய (தக்க. 144 ப. உரை).

அடிபாடு பெ. 1. மாடு, குதிரை முதலியவற்றின் உழைப்பு. (செ. ப. அக.) 2. மிகுதியாகப் பயன்படுத் துகை. அறவையாலைக்கு அடிபாடு அதிகம் (நாட்.

வ.).

அடிபார் - த்தல் 11 வி. 1. நிழல் அளந்து பொழுது குறித்தல். (பே.வ.) 2. வாய்ப்பு

(செ. ப. அக.)

அடிபிடி பெ. சண்டை. (நாட். வ.)

அடிபிடி1-த்தல்

எதிர்பார்த்தல்.

11 வி.

காய்ச்சும்

போது பொருள் தீய்ந்து சட்டியுடன் ஒட்டிக்கொள்ளு தல். (நாட். வ.)

அடிபிடி'-த்தல் (அடிப்பிடித்தல்)11 வி. 1. ஒருவனுடைய அடிச்சுவட்டைத் தொடர்தல். (செ. ப. அக. அனு.) 2. துப்பறிதல். (வின்.) 3. ஒருவரைப்பின்பற்றுதல். (செ.ப.அக. அனு.)

அடிபிடி3 - த்தல் 11 வி. அணை அல்லது கரைகட்டுதல். அண்டகடாகம் வெடித்து அடிபிடிக்க வேண்டும் படி (அமலனாதி. 2 வியாக்.).

அடிபிடிசண்டை பெ. ஒருவரையொருவர்

அடித்துக்

கொண்டு செய்யுஞ் சண்டை. அண்ணன் தம்பி இரு வருக்கும் காலையில் அடிபிடிசண்டை (நாட். வ.).

அடிபிழை -த்தல் 11 வி. 11 வி. நெறிதவறி நடத்தல், அதிர் கழல் வேந்தன் அடிபிழைத்தாரை (மணிமே. 19,42).