உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபிறக்கிடு-தல்

அடிபிறக்கிடு-தல் 6 வி. பின்வாங்குதல், பின்னிடுதல். பொ. 65 5.). அடிபிறக்கிட்டோனையும் (தொல்.

அடிபுதையரணம் பெ. காலைச்சூழ்ந்து பாதுகாக்கும் செருப்பு. அடிபுதையரணம் எய்தி (பெரும்பாண். 69).

அடிபுனைதோல் பெ. செருப்பு. அடிபுனைதோலின் அரண் சேர்ந்து (பெருந். 437).

அடிபெயர்'-தல் 4 வி. காலெடுத்து வைத்து நகர்தல். பிளந்து தின்பென் என்று உடன்று நின்றனன் அடிபெயரான் (கம்பரா. 5, 3, 138 பா. பே.).

அடிபெயர்'-த்தல் 11 வி. ஆட்டத்தில்

கால்மாறுதல். துடியின் அடிபெயர்த்து . ஆடுவாள் (பரிபா. 21,

19).

அடிபொலி பெ. நெல் கண்டுமுதல் செய்யும் களத்

தில், முடிவில், இறைந்து கிடக்கும் நெல்லைக் கூட்டி எடுத்துக் கொள்ளுமாறு ஆட்களுக்கு விட்டுவிடுதல். (நாட்.வ.)

அடிபோடியெனல் பெ. ஒரு பெண்ணை மதிப்பின்றிப் பேசுதல். அவன் மரியாதையில்லாமல்

என்னை அடிபோடி என்று பேசுகிறான் என்றாள் (முன்.).

அடிபோடுதல் 6 வி. அடித்தல் அவனுக்கு இரண்டு அடிபோட்டால்தான் அறிவு வரும் (பே.வ.).

அடிம்பு பெ. சிவதைச் செடி. (சாம்ப. அக.)

அடிமட்டம்1 பெ. 1. கீழ்மட்டம் கிணற்றின்

அடி

மட்டம் நிலத்திலிருந்து நாற்பதாவது அடியில் உள்ளது (நாட். வ.). 2. கீழ்த்தரம். இது அடிமட்ட மான செயல் (பே.வ.).

அடிமட்டம்' பெ. அளத்தற் கருவி. (இலங்.வ.)

அடிமடக்கு பெ. (அணி.) பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டும் வருவதா கிய சொல்லணிவகை. நடுவடி மடக்காய் நான்கடி யாகி (யாப். வி. 74). கொச்சமெலாம் அடி மடக்கு (பெருந். 1793).

அடிமடி பெ. ஆடையின் உள்மடிப்பு. (பே.வ.)

அடிமடை பெ. முதன்மடை. (தொ.வ.)

அடிமடையன் பெ. முழுமுட்டாள். அந்த அடிமடைய னோடு நமக்கு என்ன பேச்சு (பே.வ.).

13

Сл

5

அடிமனை

அடிமண் பெ. 1.கீழ்மண். (நாட். வ.) 2. செய்வினை யோ கண்ணேறோ கழிப்பதற்காக எடுக்கப் பெறும், எதிரியின் காலடி மண். (முன்.)

அடிமண்டி பெ. கலத்தின் அடியில் அடியில் தங்கும் கசடு. தாம் தந்த மயர்வறு மதிநலமெல்லாம் அடிமண்டி யோடே கலங்கிற்று என்னுங்கோள் (திருவாய். 1, 43

3 ஈடு).

அடிமணியிடு-தல் 6 வி. தொடக்கம் செய்தல். இனி முடிக்கும் வென்றிக்கு அடிமணியிட்டாய் (கம்பரா.

6, 11, 47).

அடிமணை பெ. நிலைக்களம். எல்லாப்பண்ணிற்கும் இஃது அடிமணையாதலின் (சிலப். 3,63 அடியார்க்.). அடிமயக்கு பெ. பொருளில் திரிப்பின்றி அடிகளை முன் பின்னாக மாற்றும்படி அமைந்த பாடல். (வின்.) அடிமரம் பெ. பாய்மரத்தின் அடிப்பகுதி. (செ. ப. அக.

அனு.)

அடிமறி பெ. (இலக்.)

பொருள்கோள்வகை.

என்னும்

அடிமறிமாற்று அடிமறிச்செய்தி...தடுமாறும்

மே (தொல். சொல். 407 சேனா.). கூட்டுறும் அடியவும் பொருள் இசை மாட்சியும் மாறா அடியவும்

...

அடிமறி (நன். 419).

அடிமறிமண்டிலம் பெ. (யாப்.) அடிகளை முதல் இடை, கடையாக எப்படி மாற்றிக்கொண்டாலும் பொருள் சிதையாமல் அமையும் ஆசிரியப்பாவகை. நடுவாதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே (யாப். காரிகை 34).

அடிமறிமண்டிலவாசிரியம்

பெ.

வி. 73

(யாப்.) அடிமறி மண்டில ஆசிரியப்பா. அடிமறிமண்டில ஆசிரியப்பா ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று (யாப். உரை). முதல் இடை கடையடிகளை மாற்றி மாற்றி உரைப்பினும் பொருள்திரியாமையின் அடிமறி மண்டில ஆசிரியம் (சிதம்பரச்செய்யுட். 45 குறிப்பு).

அடிமறிமாற்று பெ. (இலக்.) பொருளுக்கு ஏற்றவாறு அடிகளையெடுத்துக் கூட்டுவதும், எந்த அடியை எங்கு நிறுத்தினும் ஓசையும் பொருளும் வேறுபடாது வரு வதுமாகிய பொருள்கோள் முறை. யாற்றுநீர்... அடி மறிமாற்றெனப் பொருள்கோள் எட்டே (நன். 411).

பவளமாக

அடிமனை பெ. சுற்றுச்சுவர். அடிமனை அரும்பொனால் அலகு சேர்த்தி (சீவக. 837).