உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிமாடு

அடிமாடு பெ. இறைச்சிக்காகக் கொல்லப்படும் மாடு. நாள்தோறும் வெளிமாநிலங்களுக்கு அடிமாடுகள் செல்வதைத் தடுக்கவேண்டும் (செய்தி.வ.).

அடிமாண்டுபோ-தல் 4 வி / 5வி. அடியோடு அழிதல்.

(செ. ப. அக.)

அடிமுகனை பெ. (கதை முதலியவற்றின்) தொடக்கம். (வின்.)

அடிமுட்டாள் பெ. முழுமடையன். அந்த அடிமுட்டா ளுக்கு என்ன தெரியும் (நாட். வ.).

அடிமுடி பெ. 1. காலுந் தலையும். அடிமுடி காண் கிலர் ஓரிருவர் (தேவா. 1, 111, 9). அடிமுடி அறியும் ஆதரவு (திருவாச. 4, 5). அச்சுதம் கொண்டு மன்னன் அடிமுடித் தெளித்து (சீவக. 2494). அடிமுடி முன் காண்பதற்கு (தனிச். சிந். காளமேகம் 146). அடிமுடி கள் உணர்ந்தேம் (திருவாரூர் நான். 16). 2. தொடக்க மும் முடிவும். முடிவும். அடிமுடியொன் றில்லாத அகண்ட வாழ்வே (தாயுமா. 16,3).3. வரலாறு. (யாழ். அக.)

அடிமுண்டம் பெ. 1. வெட்டியமரத்தின் அடிப்பாகம் (செ. ப. அக. அனு.) 2. பயனற்றவன். (பே. வ.) 3. முழுமுட்டாள். (செ. ப. அக. அனு.)

அடிமுதல் பெ. அடிப்படை நிதி. (இராமநாத.வ.)

அடிமுந்தி பெ. சேலையின் உள்தலைப்பு. (செ. ப. அக.)

அடிமுரண்டொடை பெ. (யாப்.) செய்யுளில் ஓரடியில் முதலில் வரும் சொல்லாவது பொருளாவது அடுத்த அடியின் சொல்லோடும் பொருளோடும் மாறுபடத் தொடுக்கும் தொடுப்புவகை. அடிதோறும் மறு தலைப்படத் தொடுத்தமையான் அடிமுரண் தொடை (யாப். காரிகை 18 உரை).

அடிமுன்றானை பெ. சேலையின் உள்தலைப்பு.(பே.வ.) அடிமை (அடுமை 2) பெ. 1. தொண்டுபடுந் தன்மை. ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் (குறள். 608). அடிமை கொண்டாடப் பெற்றோம் (காரை அந். 69). தனக்கடிமைபட்டது ( இயற். இரண்டாந் திருவந். 16). அடியார் அடிமை உகப்பார் போலும் (தேவா. 6, 28,7). அழகிது என் அடிமை என்றான் (கம்பரா. 2, 12, 43). நித்தியசூரிகள் செய்யும் அடிமை (பெரியதி. 1, 2, 2 வியாக்.). அடிமை செயுமக்காலம் எக்காலந்தான் (திருவரங். கலம். 99). நினக்கு வழிவழி

1.

36

யடிமையேம் (தக்க. 308 பு. உரை).

அடிமையாக்கு-தல்

பரர்க் கடிமை

அடியேமை ஓட சுற்றம் அடிமை

செய்தே துஞ்சிடோம் (பாரதி. தேசியம். 39, 1). 2.அடிமையாள். நீ அடிமையாதல் சாதிப்பன் (பெரி யபு. 5, 49) உனக்கு அடிமை பாராய் (கலிங். 217). மக்கள் (சிலையெழு. 64). அடிமைக்கு நேற்றிராவெல்லாம் உறக்கமில்லை (முக்கூடற். 59, 7). தஞ்சம் அற்று அடி மையாய்ச் சார்ந்த பேர் (சீறாப்பு. 1 அலிமா. 66). அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாவ (தனிப்பா. இராம. 24). புல்லடிமைத் தொழில் பேணி (பாரதி. தேசியம். 1, 6). 3. தொண்டன். எனக்கு உன் குடி முழுதும் அடிமை (நம்பியாண். திருத்தொண்டர். 8). அஞ்சல் அஞ்சல் என்றடிமைக்கு... நெஞ்சில் உணர்த்தும் (தாயுமா. 43, 124).

அடிமைக்காசு பெ. கோயில்

வேலைக்காரரிடமிருந்து

பெறும் வரிவகை. (செ. ப. அக. அனு.)

அடிமைச்சி பெ. அடிமைப்பெண். இவளை ஓர் அடி மைச்சியாக ஆக்கிவிட்டார்கள் (பே.வ.).

அடிமைச்சீட்டு பெ. அடிமையோலை (பத்திரம்). (செ.

ப. அக. அனு.)

அடிமைசெய்-தல் 1வி. தொண்டு புரிதல். பிரகிருதிக்கு அடிமைசெய்து போந்த என்னை (அமலனாதி. 1 பெரி.). நான் அடிமை செய்ய விடாய் (நூற்றெட். அந்

39 ).

அடிமைப்படு-தல் அடைந்தவர்க்கு

(தேவா. 7,15,5).

6வி. அடிமையாதல்.

அடிமைப்பட்டேன்

உம் அடி

ஆகிலும்

அடிமைப்படுத்து-தல் 5 வி. அடிமையாக்குதல். பெண் குலத்தை முழு அடிமைப்படுத்தலாமோ (பாரதி. சுய

சரிதை 2, 46).

அடிமைப்பத்திரம் பெ. அடிமையோலை. (சங். அக.)

அடிமைப்பள்ளன் பெ. பள்ளரில் அடிமைப்பணி செய்ம

வன். (செ. ப. அக. அனு.)

அடிமைபூண்(ணு)-தல்

7 வி. தொண்டனாதல். நான்

அடிமைபூண்டேன் (பெரியதி. 7, 2, 5).

அடிமையாக்கு-தல் 5 வி. அடிமைப்படுத்துதல். மெய்

யடிமையாக்குதற்கு தாமதம்

930

(குணங்குடி. பாடற்.

றகுமான். 84).