உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசிப்பல்

அரிசிப்பல் பெ. சிறுவடிவினவாய் ஒத்த அமைப்புடைய பல் வரிசை. (நாட். வ.)

அரிசிப்பிட்டு பெ. அரிசி மாவினாலான சிற்றுண்டி வகை. (LAGIT.)

அரிசிப்புல் பெ. மத்தங்காய்ப்புல். அரிசிப்புல் ஆர்ந்த மோட்டின (சீவக. 43).

அரிசிப்பொதி பெ. தானியவரி. அரிசிப்பொதி உள் ளிட்ட பல தானியவர்க்கத் தீர்வையும் (தெ.இ.க.

17, 264, 7).

அரிசிமது பெ.

அரைப்பாகமாக வெந்த அரிசியைப் புளிப்பேற்றிச் செய்த மதுவகை. (குண. 1 ப. 442)

அரிசியரக்கு பெ. பொடியரக்கு. (செ.ப.அக.)

அரிசியற்றுப்போ-தல் 5 வி. வாழ்நாள் இறுதியடைதல். (நாஞ்.வ.)

அரிசியாலை பெ. நெல்லை உமி நீக்கி அரிசியாக்கும் இயந்திரமுள்ள இடம். (தொ.வ.)

அரிசியிடு-தல் 6 வி. அடக்கச் சடங்கில்.

பிணத்தின்

வாயில் உறவினர் அரிசி இடுதல், வாய்க்கரிசி போடுதல். (செ.ப.அக. அனு.)

அரிசிரங்கு பெ. சொறிசிரங்கு.(நட்.வ.)

அரிசில் பெ. காவிரியின் கிளையாறுகளில் ஒன்று. அம்பர் சூழ்ந்த அரிசில் அம் தெள் அறல் (நற்.141, 10-11). செங்கயல் பாய்புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி (தேவா. 1, 118, 4). அரிசில் கரை இருமருங்கும் (சேந். திருவிசை. 1, 67).

அரிசில்கிழார் பெ. பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்துப் பாடிய சங்ககாலப் புலவர். மறுவில் வாய்மொழி அரிசில்கிழார் பாடினார் (பதிற்றுப். 8 பதிகம்).

அரிசிலைப்பஞ்சாயுதம்

(இலங்.வ.)

அரிசிற்கரைப்புத்தூர்

பெ. ஐம்படைக் காப்புவகை.

பெ. பாடல்பெற்ற ஒரு சிவத்

தலம். மாசில் பதிகம் பாடி அமர்ந்து அரிசிற் கரைப்புத்தூர் அணைந்தார் (பெரியபு.29,60).

அரிசு1 பெ. கிடைத்தற் கருமை. அரிசதான சோ பானம் (திருப்பு. 40).

3

51

அரிட்டம்19

அரிசு' பெ. மிளகு. (பச்சிலை. அக.)

அரிசு - பெ. வேம்பு. (முன்.)

அரிசேவை பெ. திருப்பதி யாத்திரை செய்வோர் நிகழ்த் தும் வழிபாடும் கூத்தும். (பே.வ.)

அரிஞர் பெ. நெல் அறுப்பவர். வெண்ணெல் அரிஞர் (புறநா.348,1). அரிஞர் யாத்த அலங்குதலை சூடு (அகநா. 84, 12).

அரிட்டநேமி பெ. (சைனம்) நேமி என்ற இருபத் திரண்டாவது தீர்த்தங்கரர். (தக்க. 375 ப. உரை)

அரிட்டம் 1 பெ. 1. கள். தொண்டி நனை மாலி அரிட்டம் ஆசபம்... கள்ளே (பிங். 1146). 2. மோர். சாமரைதான் அரிட்டம் திளைபுனலால் (தணிகைப்பு. அகத். 405). குதபாதி அரிட்டத்தைக் தண்ணீரால் (சிவதரு. 11, 33).

கலந்த

அரிட்டம் 2 பெ. காக்கை. எங்கும் சங்க

அரிட்ட

இரக்கமே (இரகு. திக்குவி, 185). தீதில் அரிட்டங்கள்

செய்ய உணவைக் கொள்ள (ஆத்தி. வெண். 15).

அரிட்டம்" பெ. நாரை. (சங். அக.)

அரிட்டம்* (அரிடம்3) பெ. வேம்பு. (வாகட அக.)

அரிட்டம் 5 பெ. வெள்ளுள்ளி. (முன்.)

அரிட்டம்' பெ. மிளகு. (பச்சிலை. அக.)

அரிட்டம்" (அரிட்டை, அரிடம்") பெ. கடுகுரோகிணி. (செ. ப. அக. அனு.)

அரிட்டம். பெ. காட்டு முருங்கை. (நாநார்த்த.705)

அரிட்டம்' (அரிட்டை1, அரிடம்!) பெ. 1. தீங்கு. அவர்க்கெல்லாம் அரிட்டம் செய்ய (விநாய. பு. 71, 186). சாடு நோயாதி அளவு இல்லாத பல்அரிட் டங்கள் அனுங்கவும் அனுங்கவும் (ஆனைக்காப்பு. நான. 1). 2. பிறவிக் குற்றம். காகமும் பிறவியின் குற்றமும்

அரிட்டம் (பிங்.3086).

...

அரிட்டம் 10 பெ. கெட்ட சகுனம். (சங். அக.)

அரிட்டம் 11 பெ. உரோமபுளகம் (முன்.)

அரிட்டம் 12 பெ. பிரசவ அறை. (நாநார்த்த. 705)