உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிகுறி

அறிகுறி பெ. 1. அடையாளம், குறிப்பு. அவ்விருவகைக் கும் அறிகுறி காண்டலான் என்றவாறு (தொல். பொ. 595 இளம்.). உறுசுடர்ச்சூடைக்காசுக்கு அர சினை உயிர்ஒப்பானுக்கு அறிகுறியாக விட்டாள் (கம்பரா. 5, 6, 45). அவயவத்தினில் எழுதிய அறி குறி (கலிங்.353). திங்கள் மாட்டு அறிகுறி ஒன்று செய்து வைத்தனர் (சிவஞா, காஞ்சி. நகரப். 85). மைதீட்டு அறிகுறியை (குசே. 17). பழங்கோட்டை அகழ் என்னும் அறிகுறிகள் குலைந்தும் (குமண சரித். 16).2. சுவடு, தடயம். திருடன் வந்ததற் கான அறிகுறியே இல்லை (பே.வ.). 3. சகுனம். கோயில் மணி அடிக்கிறது நல்ல அறிகுறி 4. அடையாளவில்லை. (ஆட்சி. அக.)

...

(முன்.).

அறிசலம் பெ. நெஞ்சறிந்த குற்றம். விரதத்தோடு அறிசலம் (நீல. 242).

அனையவவ்

அறிசா பெ. ஒரு மீன்வகை. (செ.ப.அக. அனு.)

அறிஞன்' பெ. 1. அறிபவர். வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை (நற். 314, 2). 2. அறிவுடை யொன். ஆன்று அடங்கு அறிஞர் (மதுரைக். 481). அறிஞர் சொல் கொளான் (கம்பரா. 5, 2, 43). முன்னே அறிஞர் மொழியுங் கலைகள் முழு துணர்ந்தும் (அம்பி. கோ. 48).

அன்னகாலையில்

4.

வீரவாகுப் பெயர் அறிஞன் (கந்தபு. 3, 17, 61). முட்டரை அறிஞராக்கும் (சிலையெழு. 5). கூரறி வினால் அறிஞர் ஆவலொடு காண (திருமலைமுரு. பிள். 62). 3 முனிவன். திருந்து மாதவத்து அறி ஞன் ஆண்டு இருக்குநன் (கம்பரா. 1, 5, 55). புலவன். அறிஞரும் சளுக்கியர் பெயரும் (பிங்.3862). ஆன சொல் தமிழ் வல்ல முன் (கந்தபு. அவையடக். 2). அறிஞர் குழாம் மாற்றகற்றி (கலைமகள் பிள். 13). 5. புத்தன். (சங். அக.) 6. புதன். அருணன் கணக்கன் அறிஞன் ...புதனே (பிங்.231).

அறிஞன்' பெ.

...

புலவர் அறிஞர் தடு

....

கொல்லன். கம்மியர் கொல்லர்

...

அறிஞர் கண்ணாளர்க்கு அடுத்த பொது நாம் மாமே (ஆசி.நி. 57).

அறிஞை பெ. மருந்து. (கதிரை. தொடையக.)

அறிட்டம்' பெ. கடுகுரோகிணி. (மரஇன.தொ.)

அறிட்டம் 2 பெ. மிளகு. (சங். அக.)

அறிட்டம்' பெ. வேம்பு. (முன்.)

பெ. சொ. அ.1-32

4

97

அறிப்பு

அறிதற்கருவி பெ. ஞாபகக் கருவி. (நன். 297 சங்கரநமச்.)

...

அறிதுயில் ' பெ. 1. (தத்துவம்) எல்லாம் அறிந்த படியே உறங்கல், யோக நித்திரை. துளவம் சூடிய அறிதுயிலோனும் (பரிபா.13,29). அணி கிளர் அர வின் அறிதுயில் (சிலப். 10, 9). எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து (இயற். திருவாசி. 1, 11). ஆழி யில் அறிதுயில் அவன் என மகிழ்வான் (கம்பரா. 3, 2, 34). அரவணை விரும்பி அறிதுயில் அமர்ந்த அழகிய மணவாளர் (திருவரங். கலம். 7). வண்ணத் திருமாலும் அறிதுயில் போய் மற்றாங்கே ஆழ்ந்த துயில் எய்திவிட (பாரதி. பாஞ்சாலி. 252, 10-11). அலை கடலின் மீதில் அறிதுயில் கொள் ஆதி (கலை மகள் பிள். 14). பயோததிக்கண் அறிதுயில் கூரும் அம்மாயோன் (குணசீலத், பு. கடவுள். 3). 2. (உளவி யல்) தன்னுணர்வு இழந்து மற்றொருவன் ஏவலுக் குப் பணியும் உறக்க நிலை. (ஆசிரியர் க. க. சொ.)

அறிதுயில்' பெ. விழிப்பொடு தூங்கும் ஒரு நோய் நிலை. (சாம்ப. அக.)

அறிதுயிலமர்ந்தோன் பெ. (யோகநித்திரை செய்யும்) திருமால். ஆடகமாடத்தறிதுயிலமர்ந்தோன் (சிலப்.

26, 62).

அறிதூங்கு-தல் 5 வி. யோக நித்திரை கொள்ளுதல். இரவு பகல் ஒருவிட நின்று அறிதூங்கும் முநி வீர்கள் இறைவர் தாமே (ஞான. உபதேசகா.914).

அறிநர் பெ. 1. அறிபவர். நோய் மருங்கு அறிநரும் (தொல். பொ. 492 இளம்.). அறிநர் கண்டு (புறநா.373, 23). கோடியர்தலைவ கொண்டதறிந (பொருந. 57). 2. அறிஞர். அறிநர்தானத்து (பெருங்.1, 39, 17 அறிஞர்க்குச் செய்யும் தானத்துடன் - உ. வே. சா. அடிக் குறிப்பு).

அறிப்பலம் பெ. திப்பிலி. (வைத், விரி, அக. ப. 24)

அறிப்பிதம் (அர்ப்பிதம்) பெ. உரியதாக்குகை, காணிக்கை. முழுதும் வைத்தியநாத சுவாமிக்கு அக்காலமும் அறிப்பிதமாகக் குடுத்தோம் (தஞ். மரா. செப். 14,89).

அறிப்பு பெ. உணர்கை. அறிப்புறும் அமுதாயவன் (தேவா. 5, 48, 4). அறிப்புறு காட்சி அமரரும் ஆமே (திருமந். 1794).