உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுதி2

காடுமன்னு நின் புதல்வருக்கு அறுதி செய்காலமோ

கழிந்தன்று 5, 1, பாரதம். 5, அறுதியை அடைந்தது

1, 16).

2.

முடிவு. 4,

அப்பருவம் (கம்பரா. 9, 103). அவையினில் தோற்றாள் சுமக்கவென்று பேசி அறுதி இசைத்திட (கடம்ப. பு. 457). 3. நிலம், ஆடுமாடு போன்றவற்றின் முடிவான விற்பனை விலை. அறுதியீதென்று கொண்டு (திருவால. பு. 46, 32). 4. அழிவு. அறுதியில் அரனே (சி. சி. 1, 35 சிவாக்.).

அறுதி பெ. உரிமை. அறுதிபெறு மாதர் பெயல் செம் தருதல் தானும் (நம்பியாண். திருக்கலம். 39). மகள் கரியோற்கு அறுதியாக (கல்லாடம் 18,11).

.

அறுதி' பெ. நிச்சயம். அறுதி உடையள் அல்லள் என்று கருதி (கலித்.69, 10 நச்.). அப்பகைவர் உயிர்க்கும் மாத்திரத்திலே அறுதியாகச் சாவர் (குறள். 880 மணக்.).

அறுதி' பெ. இல்லாமை. (பே.வ.)

அறுதி' பெ. உறுதி செய்யாத குத்தகைப் பேச்சு.

(முன்.)

அறுதி" வி. அ. இதுவரை. அன்றுமுதல் இன்று அறு தியா (பெரியாழ். தி. 4, 10,9).

அறுதிக்கரை பெ. நிலங்களைச் சமுதாயத்தில் வைக் காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித் துக் கொடுக்கப்பெறும் முறை. (செ .ப . அக.)

அறுதிக்களநடை பெ. வருடாந்தர நெற்கணக்கு.(வட்.

வ.)

அறுதிக்காணி பெ. அடமானம் வைத்ததனை மீட்க முடியாத நிலையில் அடமானம் பெற்றவருக்கு உரிமை யாகும் காணி. (இலங்.வ.)

அறுதிக்கிரயம் பெ. நிலம் ஆடு மாடு போன்றவற்றின் இறுதியான விற்பனை. (பே.வ.)

அறுதிச்சாதனம் பெ. நிலம் போன்றவற்றை விற்ற தற்கான விலைப்பத்திரம். (வின்.)

அறுதிச்சீட்டு பெ.

அறுதிச்சாதனம். (முன்.)

அறுதிப்பங்கு

பெ.

சமுதாய

நிலமல்லாத சொந்த

நிலம். (செ. ப. அக.)

50

06

அறுதுறும்பு

அறுதிப்பங்கு பெ. கடன் தீர்ப்பதிற் கடைசித் தவணை யாகக் கொடுக்கும் தொகை. (வின்.)

அறுதிப்பட்டு பெ. கோயில் மரியாதையாகத் தலையிற் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு (வைணவ.)

அறுதிப்பரியட்டம் பெ. வைணவ வழக்கப்படி கோயில் மரியாதையாகத் தெய்வச்சிலையின் அருகிலிருந்தெடுத் துப் பெருந்தகை மக்களின் தலையில் போலக் கட்டப்படும் பட்டுத்துணி. (முன்.)

திருக்குடை

அறுதிப்பரிவட்டம் பெ. அறுதிப்பரியட்டம் (முன்.)

அறுதிப்பரிவர்த்தனை பெ. முடிவாக எழுதிக்கொடுத்து நிலம் பொருள் போன்றவற்றை மாற்றிக்கொள்ளுகை. இப்பரிசு அறுதிப்பரிவர்த்தனை ஓலை செய்து

குடுத்தோம் (தெ.இ.க. 19, 222).

அறுதிப்பாடு பெ. முடிவுபேறு. (சங். அக.)

அறுதிப்பெரும்பான்மை

பெ. (இக்.) பொதுத் தேர்த லில் ஓர் அரசியல் கட்சி ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் இடங்களைப் பெறும் அளவு. சட்ட மன்றத் தேர்த லில் எந்த கட்சிக்கும் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை (செய்தி.வ.).

அறுதிமுறி பெ. தீர்ந்த கணக்குச் சீட்டு. ஆண்டு தோறும் அறுதிமுறி பெறவும் (தெ.இ.க. 8,251).

அறுதியிடு-தல் 6வி. 1. முடிவு செய்தல். செங்கன கத்தோடும் அமர்வம் என்றறுதியிட்டு (திருவால். பு. 27, 41). 2. முடிவுக்குக்கொண்டு வருதல். கூடி யிருந்து காரியம் அறுதியிட்டு (புது. கல். 340). கர்த்தாவினுடைய சுபாவம் ... அறுதியிட்டுச்சொல் லுதற்கு எளிதல்ல (சி. சி சுப. 49 நிரம்ப.). 3. காலங் குறித்தல். (செ.ப.அக.)

அறுதியுறுதி பெ. ஒரு பொருளை விலைக்குக் கொடுத் தலை எழுத்தில் அமைக்கும் ஆவணம். (சங். அக.)

அறுதுவர்ப்பு பெ.

(சைனம்) சிரித்தல் (ஆசியம்), வேண்டுதல் (இரதி), வேண்டாமை (அரதி), அசைவு (சோகம்), அச்சம் (பயம்), அருவருப்பு (சுகுச்சை) என்ற ஆறுவகைப் பண்பு வேறுபாடுகள். (சீவக.3076 நச்.)

அறுதுறும்பு பெ. முறைகேடான சேட்டை. (இலங்.வ.)