உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

37


-என்று நான் பலப்பல கூறித்தடை செய்யவும், ஏற்றுக்கொள்ளாத நீ, இவள்பால் பொய்யன்பு காட்டி, கைவிட்டுவிட்டுப் போகத் துணிந்துவிட்டாய்! பெரியோய்! இவளை விட்டு என்று பிரிவையோ, அன்றே பெறுதற்கரிய இவள் உயிர் இவளை விட்டுப் பிரிந்து போய்விடும். இது உறுதி!"

பால்-பகுதி. மால்-மதமயக்கம். தூறு-புதர். அதர்பட்ட-வழியாகிய. முந்நீர்-கடல். வளி-புயல். ஆள்வினைக்கு அழிந்தோர்-முயற்சி பாழாதல் கண்டு உடைந்தவர். தகைத்தல்-தடுத்தல். தகைமே-தகையும். கல் என-கல் என்னும் பேரொலி எழ. ஆற்றுப்படுத்தபின்-நடந்து கழிந்த பின்னர். புல் என்ற-பொலிவு இழந்த, அலைபெற்ற-அழிந்த. பைதல்-துன்பம். பொய்ந்நல்கல் புரிந்தனை-அன்புகாட்டுவான் போல் பொய்யே நடித்தனை. புறந்தால்-பாதுகாத்தல்.

5. இன்பமும் உண்டோ?

ணவன் பொருளீட்டி வரப் போகக் கருதியுள்ளான் என்பதை அறிந்துகொண்ட மனைவி 'காட்டின் கொடுமையால் துன்புறுமாறு உனக்குத் துணைபுரிவான் வேண்டி என்னையும் உடன்கொண்டு செல்க' என வேண்டிக்கொண்டது இது:

"மரைஆ மரல்கவர, மாரி வறப்ப
வரைஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற்றத்து அருந்துயரம் 5

கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என்நீர் அறியாதீர்போல, இவைகூறின்
நின்நீர அல்ல நெடுந்தகாய்! எம்மையும்
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடின், அதுவல்லது 10

இன்பமும் உண்டோ எமக்கு?"

'காட்டுப் பசு தன் வயிறாரத் தின்பதற்கு எதையும் பெற இயலாமையால், தனக்கு உணவாகாத மலரைத் தேடித் தின்னுமாறு மழை வறண்டு போனதால், மலைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/38&oldid=1737218" இலிருந்து மீள்விக்கப்பட்டது