கலித்தொகை - பாலைக் கலி
51
கொம்பு. அசைஇய-வருந்திய. சிறகர்-சிறகு. புறவு-புறா. வேய்-மூங்கில். கனைகதிர்-நிறைந்த கதிர்கள். துன் அரும்தகைய-செல்லுமான். கலை-ஆண்மான். இனைநலம்-இவைபோலும் நன்மைகள். புனை நலம்-பண்ணிய அழகு. பாங்கு ஒத்து இசைத்தன-நல்ல இடத்தே இருந்து ஒலித்தன.
11. போற்றாய் பெரும!
அண்மையில் மணம் செய்து கொண்ட ஓர் இளைஞன், தன் இளம் மனைவியைத் தனியே விட்டுப் பொருள்தேடிப் போகத் துணிந்தான் என அறிந்த அவன் மனைவியின் தோழி, அவனுக்கு இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, அன்பின் அருமை ஆகிய அரிய பெரிய உண்மைகளை உரைத்துத் தடுத்து நிறுத்தியது இது:
"இடுமுள் நெடுவேலி போலக் கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடுநவையார் ஆற்று அறுசுனை முற்றி,
உடங்குநீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு,
5
வெறிநிரை வேறாகச் சாரச் சாரல் ஓடி
நெறி மயக்குற்ற நிரம்பா நீடுஅத்தம்,
சிறுநனி நீதுஞ்சி யேற்பினும் அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயின் செல்வோய்!
உரனுடை உள்ளத்தை! செய்பொருள் முற்றிய
10
வளமையான் ஆகும் பொருள்இது என்பாய்!
இளமையும் காமமும் நின்பாணி நில்லா;
இடைமுலைக் கோதை குழைய முயங்கும்
முறைநாள் கழிதல் உறாஅமைக் காண்டை:
கடைநாள் இது என்று அறிந்தாரும் இல்லை;
15
போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு பொருள்வயின் போகுவாய்!
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி."
அன்ப! துயில் கொள்ளும் காலத்தில் நீ சிறிது காலம் தாழ்ந்து எழுந்திருப்பினும், அதற்கும் ஒரு காரணம் கற்பித்துக் கலங்கி