உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்காரு 3

கனிமப் ள் கின்றன. குறிப்பாக இது பாலோனாசட் (bleonaste) வகைக் தாடுகை என்ற கனிமமாகத் படிவுகளில் காணப்படுகிறது. உலகில் இது போடி மாய்ஸ் பவேரியா ஆகிய இடங்களில் பெரும் படிவு களாகவும் காணப்படுகின்றது. ஸ்வீடன் நாட்டில், ஃபலுன் என்ற இடத்தில் தாள்படலப் பாறைகளில் மாக்கல் வகையும், கோப்பர்பெர்க் என்ற இடத்தில் அட்டுமலைட் வகைக் ககனைட்டும். கிடைக்கின்றன. இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் ககனைட் கிடைப்பதில்லை என்றாலும் ராஜஸ் தானில் உள்ள சாவார் என்ற காரீயத் துத்தநாகச் சுரங்கப் பகுதிகளிலும், பீகார் மாவட்டத்தில் சிங்பும் என்ற செம்புச் சுரங்கப் பகுதிகளிலும் மிகவும் குறைந்த அளவில் இது கிடைக்கிறது. நூலோதி W.E., Ford, Dana's Text Book of Mineralogy. Fourth Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1985; W.A. Deer, R.A. Howie, and J.A. Zussman, An Introduction to the Rock forming Minerals, Third edition, ELBS, London, 1983. கங்காரு 3 கங்காரு பாலூட்டி வகுப்பில் பைப்பாலூட்டி வகையைச் சேர்ந்த விலங்குகளில் கங்காரு மிகப்பெரியதாகும். இவ்விலங்கிற்கு அடிவயிற்றில் மதலைப்பை (marsu- pium) உண்டு. கங்காரு இதில் தன் குட்டிகளை வைத்துப் பேணி வளர்க்கும். இது மேக்ரோபோடிடே குடும்பத்தைச் சார்ந்தது. ஆஸ்திரேலியத் தேசியச் சின்னத்தில் கங்காரும் ஈமு பறவையும் இடம் பெற்றுள்ளன. வரலாறு. காப்டன் ஜேம்ஸ்குக் 1770 இல் முதன் முறையாக ஆஸ்திரேலியாவை அடைந்தபோது, தாவிக் குதித்து ஓடிவரும் விலங்குகளைக் கண்டு கங்காரு எனப் பெயரிட்டார். குக்குடன் சென்ற அவர் நண்பர்கள் குதித்தோடித் தாக்க வரும் கங்காருக்களை வலியுள்ள அரக்கர்கள் என அச்சங் கொண்டனர். கேப்டன் குக் அங்கு வாழ்ந்த ஆதிக் குடி மக்களிடம் இதன் பெயர் என்ன? என்று வின வினார். அவர்கள் தங்கள் மொழியில் காங்கரு என்றனர். காங்கரு என்றால் அவர்கள் மொழியில் தங்களுக்குத் தெரியாது என்று பொருள். இந்தப் பெயரையே இதற்குச் சூட்டி விட்டார். காருவைப்பற்றி அறிவதில் ஆங்கிலேயர் அதிக ஆர்வம் காட்டினர். 1790 ஆம் ஆண்டில் கங்காரு லண்டன் மாநகரில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குக் கங் கங்காருகளில் பல வகைகள் உள்ளன. இவற்றில் மிகச் சிறிய வகைக்கு வால்லபிகள் என்று பெயர். இரண்டு அடி உயரமுள்ள வால்லபிகள் பார்ப்பதற்குச் சிறுமுயலைப் போலளிருக்கும். ஆனால் பெரிய கங் காருகள் ஏழு அடி உயரம் வரை வளரும். நல்ல உடற்கட்டும், வலிமையும் பெற்றுள்ள இவற்றின் உடல் எடை 90 கிலோ இருக்கும். இவை சாம்பல் பழுப்பு நிறமுள்ளவை. உடல் உருவத் துடன் ஒப்பிடும்போது இதன் தலை சிறியது. மானின் தலையைப் போன்ற அமைப்புடையது. ஆரஞ்சு, கறுப்புக் கலந்த நிறமுள்ள இவ் விலங்கின் விழிகள் அழகானவை; இவற்றின் பெரிய காதுகள் வட்டமானவை. அவற்றை முன்னும் பின்னும் ஆட்ட முடியும். சில சுங்காருகள் மரம் ஏறும் ஆற்றலுடையவை. இதன் பின் கால்கள் இரண்டும் நீளமானவை: பலம் பொருந்தியவை. கால்கள் ஒவ்வொன்றிலும் நான்கு விரல்கள் உள்ளன. அவற்றுள் ஒரு விரலில் மட்டும் கூரிய நகமுண்டு. கங்காரு அஞ்சும் குணமுடைய விலங்கு. இது பொது வாக மற்ற விலங்குகளைத் தாக்குவதில்லை. சினம் கொள்ளும்போது பின்கால்களால் தரையை உதைத் துக் கொண்டு உறுமும்.எதிரிகளால் தாக்கப்படும் போது தீவிரமாகப் போராடித் தன் பின் கால்களால் உதைத்துத் தாக்கும். எதிரிகள் வலி தாங்காமல் ஓடி விடுகின்றன. மெதுவாக நகரும்போதும் புல் மேயும்போதும் பின்கால்களையும், வாலையும் சேர்த்து முக்காலியில் உட்காருவதுபோல் அமர்ந்து கொள்ளும். இவை நடப்பதோ, ஓடுவதோ இல்லை. தாவித்தாவியே செல்கின்றன, ஒரே தாவலில் இருபது