54
மா. இராசமாணிக்கனார்
துலங்குமான்மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்றுஆண்டை
விலங்குமான் குரல்கேட்பின் வெருவுவை அல்லையோ?
கிளிபுரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,
தளிபொழி தளிரன்ன ஏழில்மேனி கவின்வாட
முளிஅரில் பொத்திய முழங்கு அழல் இடைபோழ்ந்த
20
வளிஉறின், அவ்வெழில் வாடுவை அல்லையோ?
எனவாங்கு,
அனையவை காதலர் கூறலின், வினைவயின்
பிரிகுவர் எனப் பெரிது அழியாதி; திரிபு உறீஇக்
கடுங்குரை அருமைய காடெனின் அல்லது,
25
கொடுங்குழாய்! துறக்குநர் அல்லர்,
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே.”
போர் வெறிகொண்டலையும் சினம் மிக்க அரசன் சென்று தங்கிய பகையரசன் நாடு, எரிந்து கரியாவது போல், கோடைத் தீயால் எரிந்து கரிபட்ட வறண்ட பாலை நிலத்தில் பொரி பொரிந்தாற் போன்ற புள்ளிகளையுடைய மடமான், உண்ணத்தக்க உணவு எதையும் காணமாட்டாமல், முறுக்கிய கொம்புகளைக் கொண்ட தன் கலைமானோடு கானல்நீரின்பின் ஓடி அலையும் வண்ணம், தன்கண் முளைத்துள்ள மரலும் வாடும்படி மலைகள் வெந்து பொடிபடவும், மந்திகள் ஊணும் உண்ணும் நீரும் பெறாது சோர்ந்து போகவும், உரல்போல் பருத்த கால்களைக் கொண்ட உடம்பு தளர்ந்த யானை, நீர் ஊறுவது அடங்கி விட்டமையால் நீர் நிலைகளைக் காணாது கலங்கிக் கடைசியில் சேற்றைச் சுவைத்து உண்டு, போகும் தம் உயிரைப் போக்காது காத்துக் கலங்கவும் மேகம் மழை பெய்ய மறந்து போனமையால் போவதற்கு இயலாத கொடிய காட்டு வழியில்,
'ஒளிவீசும் வளைகளை அணிந்தவளே! என்னோடு நீ வந்தால், மிக மிக மென்மையுடையனவாகிய உன் சின்னஞ் சிறு கால்கள் ஆங்குக் கிடக்கும் கல்லில்பட்டுக் கலங்கும்; அந்நிலையில் அவை, தாமரை மலரின் நடுவில் உள்ள கொட்டையைச் சூழ்ந்திருக்கும் சிவந்த மெல்லிய இதழ்களை இங்குலிகத்தில் தோய்த்தெடுத்தாற் போல் மிக மிகச் சிவந்து விடுமல்லவோ?
'நலம் மிக்க ஒளி வீசும் நெற்றியை உடையாய்! என்னோடு அக்காட்டு வழியில் வந்தால், சிங்க வடிவில் செதுக்கிச் செய்த