உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

53


உடங்கு-வருந்திய. உயங்கு-வருந்தும். கடும்தாம் பதி பாங்கு-விரைவாகப் பதித்த விடத்து. தெறப்பட்டு-சுடப்பட்டு. வெறிநிரை-வெறிகொண்ட யானை வரிசை. நிரம்பா-வழிக்குரிய இயல்புகளைப் பெறாத; அல்லது அவ்வியல்புகளை இழந்த. நின் பாணி-நீ கூறுமாறு நின் ஆணைக்குள். கழிதல் உறா அமைக்காண்டை-பயன் இன்றிக் கழிந்து போகாவாறு பார்த்துக்கொள். கடைநாள்-வாழ்க்கையின் இறுதிநாள். புகர்பட-பயனற்றுப் போகுமாறு. வேற்றுமைக் கொண்டு-அக்காமத்தோடு வேறுபட்டு. ஓராஅங்கு-ஒருபடிப்பட.


12. எழில் வாடுவை!

ணவன் பொருள் தேடி வரப்போக வேண்டும் என்றான். 'அவ்வாறாயின் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்' என்றாள் மனைவி. 'காட்டு வழி கொடுமைகள் மலிந்தது; உன் மென்மைக்கு அது இடம் தராது' எனக் கூறி அவள் வேண்டுகோளை மறுத்தான் கணவன். உடனே அவள் கண்கள் கலங்கி விட்டன. அதைக் கண்ட அவள் தோழி. 'காதலர் வேடிக்கைக்காக அவ்வாறு கூறினாரேயல்லது உண்மையில் உன்னைத் தனியே விடுத்துச் செல்லார்' எனக் கூறி ஆற்றுவித்தாள்.

"செருமிகு சினவேந்தன் சிவந்து இறுத்த புலம்போல
எரிவெந்த கரிவறல் வாய்புகுவ காணாவாய்ப்
பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான்,
திரிமருப்பு ஏறொடு தேர்அல்தேர்க்கு ஓட,
மரல்சாய, மலை வெம்ப, மந்தி உயங்க, 5

உரல்போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறுநீர் அடங்கலின், உண் கயம் காணாது,
சேறு சுவைத்துத் தம் செல்லுயிர் தாங்கும்
புயல்துளி மாறிய போக்கரு வெஞ்சுரம்;
எல்வளை! எம்மொடு நீவரின், யாழ நின் 10

மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை
அல்லிசேர் ஆய்இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக்
கல்லுறின், அவ்வடி கறுக்குந அல்லவோ?
நலம்பெறு சுடர்நுதால்! எம்மொடு நீவரின்
இலங்குமாண் அவிர்தூவி யன்ன மென் சேக்கையுள் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/54&oldid=1737225" இலிருந்து மீள்விக்கப்பட்டது