உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமணம்'

அருமணம் 2 பெ. எட்டு ஆடகம் கொண்ட ஒரு நிறை.

(சுக்கிரநீதி 2,386).

அருமணர் பெ. அருமணத்தீவில் உள்ளோர். அருமண ரும் சோனகரும் அவந்தியரும் முதலாய வேந்தர் (மெய்க். பாண்டியர் 17, 18).

800

முடி

அருமணவன்1 (அருமணம்!) பெ. 1. கீழ்க்கடல் தீவுகளுள் ஒன்று. அருமணவன் ஆனை

(திருமங்கை.

திருநெடுந். 14 வியாக்.). 2. அருமணத்தீவின் யானை. இவ்வியானை அருமணவன் சாத்தன் கொற்றன்

(நன். 275 மயிலை.).

அருமணவன் பெ. அகில் வகை. (சிலப். 14, 108 அடி

வார்க்.)

அருமதாளம் பெ.

நவதாளத்தொன்று. (திவா. 2693)

அருமந்த (அருமந்தன்ன, அருமருந்தன்ன, அருமாந்த) அருமையான. அருமந்த போகமும் ஞான

பெ.அ.

மும் ஆகும் (திருமந்.979),அருமந்த நன்மையெலாம்

அடியார்க்கீவர் (தேவா. 6,83,7).

அருமந்த தேவர் (திருவாச. 11, 5). அருமந்த அரசாட்சி அரிதோ மற்று எளிதோதான் (பெரியபு. திருக்கூட்ட. 44). அருமந்ததேவர் (குளத்தூர். பதிற். அந். 27).

அயன் திருமாற்கு அரிய சிவம்

அருமந்தன்ன (அருமந்த, அருமருந்தன்ன, அருமாந்த) பெ. அ. கிடைத்தற்கரிய மருந்தாகிய அமுதம் போன்ற. அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ

97, 21).

(தேவா. 5.

அருமருந்தன்ன (அருமந்த, அருமந்தன்ன, அருமாந்த) பெ.அ. அருமையான. அருமருந்தன்ன பிள்ளை

(நன். 267 சங்கர நமச்.).

அருமருந்தான் பெ. அரிய மருந்து போன்றவன். அரு மருந்தான் (முன்.239 மயிலை.).

அருமருந்து பெ. கிடைத்தற்கரிய மருந்தாகிய அமுதம் அரனே அருமருந்தே எனது அரசே (திருவாச. 34,8). அருமருந்து அனைய ஐயா (கம்பரா. 4,7,128) அருமருந்து அனைய நினை அடையாத அறிவிலார் பவப்பிணி அறுமோ (சோண. மாலை 37).

அருமவதி பெ. பண்வகை. நட்டபாடை அருமவதி பிறவும் பண்ணே (திவா.2161).

...

அருமறை ! பெ. (அறிதற்கு அரிய) வேதம். நாவல் அந்தணீர் அருமறைப் பொருளே (பரிபா.2, 57).

78

அருமை

அருமறை அந்தணர் (சிலப். 26, 102). ஆடிய அழகா அருமறைப் பொருளே (தேவா. 7,69, 2). அரு மறைக்கு உணர்வரும் அவனை (கம்பரா. 1,5,103). அருமறையின் நெறிகாட்ட (கலிங்.2).

அருமறை 2 பெ. 1. அகப்பாடல்களில் வரும் களவொ ழுக்கம். அணைக்குங் கறங்கும் அருவி வெற்பா நின் அருமறை போய் (அம்பி. கோ.261). 2. மந்தணம், இரகசியம். அறைபறை அனையநீரார் அருமறைக்கு ஆவரோ (கம்பரா. 1, 18. 56).

அருமறைக்கொடியோன் பெ. துரோணாசாரியன். (ராட்.

அக.)

அருமாந்த (அருமந்த, அருமந்தன்ன, அருமருந்தன்ன பெ. அ. அருமையான. (செ. ப. அக.)

அருமாமணை (அருவாமணை) பெ. அரிவாள்மணை. (பே.வ.)

அருமால் பெ. போக்குவதற்கு அரிய மாலுற்றுப் பின்னை நீர்

8).

மயக்கம். அரு

அழுங்கி (திருவாச. 45,

அருமிதம் பெ. அளவின்மை. சேணுயர் அருமித நிலையவர் தமக்கும் ஆகுமே (இரகு. இரகுவுற். 29).

அருமிதி பெ. மிகுதி. அருமிதியான மணத்தை வாங்கிக்கொண்டு (தொண்டரடி. திருப்பள்ளி. 2

வியாக்.).

அருமுகத்தகனி

பெ. அழகிய

தோற்றத்தையுடைய பழங்கள். அருமுகத்த கனியாயின வெல்லாம் (சூளா.

1583).

அருமேனி பெ. கடவுளின் அரூப வடிவம். உரு இறந்த அருமேனி (சி. சி. 1, 55).

அருமை பெ. (அரியர், அரியள், அரிது) 1. உயர்வு, சிறப்பு, பெருமை. பாரியது அருமை அறியார் (புறநா. 116, 17). அருமை நற்கு அறியினும் (பரிபா. 1,33). அருமையாம் புகழாற்கு அருள்செயும் (தேவா. 7,14,11). அருமை நோன்புகள் (கம்பரா. 2,4,20). 2. செய்ய இயலாமை,கடினம். ஆறினது அருமை யும் அழிவும் அச்சமும் ஊறும் உளப்பட அதனோ ரற்றே (தொல். பொ. 134 இளம்.). நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு அருமையின் (முருகு. 278).