உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு -- தல்

மாட

மாளிகைகள் செம்பொனால் அரும்பும் (கருவூர். திருவிசை. 1, 10). குறுவியர்ப்புத் துளி அரும்ப (பெரியபு. 28,52). காதல் அரும்பும் பருவத்தவர் (மதுரைச்,உலா 190). முலைதாம் அரும்பி (சங்கரலிங்க உலா 176). 3. புளகம் கொள்ளுதல். மெய் அரும்பி தொழும் அடியார் (தேவா. 6,61, 7). மெய் அரும்ப வைத்தேன் (சேரமான். பொன். 92). மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து (திருவாச. 5, 1).

...

அரும்பு-தல் 5 வி. வீசுதல். சிறுகால் அரும்பத் தீ அரும்பும் (மீனா. பிள். 24).

அரும்பு*(அருப்பு1, அரும்பர்) பெ. 1. மொட்டு.அலர் அரும்பு ஊழ்ப்பவும் (அகநா. 273, 17). அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கை (நற். 257, 5). புன்னை அரும்பு மலிகானல் இவ்வூர் (ஐங். 132). அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை (சிலப். 2, 15). அரும்பு அவிழ் தண் பொழில் (தேவா. 4, 102, 5). அரும்பு கொங்கையார் (கம்பரா. 1, 6,23). 2. (அரும்பு போன்ற) பிறைச்சந்திரன். முயற் கறை யின் அரும்பு அர நேர்வைத்து அணிந்தாய் (திருவாச. 6,35). 3. அணிகளின் அரும்பு வேலை. (வின்.) 4. முகத்தில் தோன்றும் இளமீசை. இவனுக்கு முகத்தில் அரும்பு இறங்குகிறது (பே.வ.).

அரும்பு பெ. அரிசி. அரும்புக்கும் கொத்துக்கும் வந் தார் (தனிப்பா. 1,87, 171).

அரும்புகட்டி பெ. இராமநாதபுரம் மாவட்டத்தில் பூ மாலை கட்டும் வேளாளர் வகை. (பே.வ.)

அரும்புச்சரம் பெ. ஒரு சரட்டில் முல்லை அரும்புகளைக் கோவையாக அமைத்துக் கழுத்தில் அணிவது போன்ற அணி. (சிற். செந்.ப.93)

அரும்புண் பெ. 1. விரைவில் ஆறாத புண். ஒய்யென அரும்புண் உறுநரின் வருந்தி (நற். 47, 5). 2. விழுப் புண். ஞாட்பின் அரும்புண் உறுநரின் (அகநா. 57,

17).

அரும்புபல்

பெ. கூர்மையான பல். அரும்புபல் அரவை (குசே. 685)

அரும்புமணி பெ. பொன் அரும்பால் செய்யப்பட்ட கழுத்தணிவகை. (வின்.)

அரும்புவளையம் பெ. தாழ்வடமணிகளின் இடையில் கோக்கும் வளையம்.

(சங். அக.)

3

77

அருமணம்1

அரும்புனவர் பெ. குறிஞ்சி நிலமாக்கள். அரும்புனவர்... குறிஞ்சித் தன்னில மாக்கள் (கயா. நி. 120).

அரும்பூட்டு பெ. 1. வருந்திப்பூட்டுவது.

(இலங். வ.) 2. இணக்கக்கூடாதது. (முன்.) 3. சிக்கிக்கொள்கை. (முன்.) 4. இயல்பிலாத் தொடர்ச்சி. (கதிரை. அக.) அரும்பூது-தல் 5 வி. பொன்மணியை ஊதிச் செய்தல்.

(all cir.)

அரும்பெறல் பெ. பெறுதற்கரியது. உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம் (பதிற்றுப். 30,35). அரும் பெறல் தவ்வை செய்தது பொறு (பெருங். 4,14,148). அரும்பெறற் குரிசில் (சீவக. 1076). அரும் பெறல் அன்பினன் (கம்பரா. 2, 9, 49). அரும் பெறல் காட்சி எஃகின் (செ.பாகவத. 1, 7, 3).

அரும்பை பெ. கவுதும்பை. (வாகட அக.)

அரும்பைத்தொள்ளாயிரம்

(அரும்பகைத் தொள்ளா

யிரம்) பெ. ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்று மறைந்து போன நூல் அரும்பைத்தொள்ளாயிரம் முதலியன

(இலக். வி. 848 உரை).

அரும்பொட்டு பெ. மயிரிழை. (இலங்.வ.)

அரும்பொருட்காட்சியகம் பெ. கிடைத்தற்கரிய கலைப் பொருள்களைப் பார்வைக்குத் தொகுத்து வைத் திருக்கும் இடம். (புதிய வ.)

அரும்பொருள் பெ. 1. பெறுதற்கரிய பொருள். அரும் பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு (சிலப். 15, 127). 2. பிசி. அரும்பொருள் பிசியும் ஆமே (சூடா.நி.10,28).

அரும்பொருள்வினைநிலை

என்பது

பெ. அசுரமணம். அசுரம்

...

...

அரும்பொருள்வினை நிலை

அக. 1 உரை).

(இறை.

அருமகம் பெ. அரிய யாகம். அருமகம் முறை இயற்றி (செ. பாகவத. 11, 2, 31).

...

முத

அருமணம்1 (அருமணவன்1) பெ. கீழ்க்கடல் தீவுகளில் ஒன்று. அருமணம் காம்போசம் ஈழம் லானவை (நன். 272 மயிலை.). சாவகம் எறிந்து அரு மணம் பொருது (குலோத். பிள்.92).