உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருப்பு2

ஆக்கம் (குறள். 522). அருப்புறு மெய்க்காதல் புரி அடியவர்கள் (பெரியபு.28,882).

அருப்பு' (அருப்பம்1) பெ. 1. காட்டரண். மண் கொள் புற்றத்து அருப்புழை திறப்பின் (அகநா. 342,5). 2. திண்மை. அருப்பு அறப் பிறந்த கோபம் ஆறினான் (சம்பரா. 6, 6, 71).

அருப்புச்சரிக்கடுக்கன் பெ. (முகை போன்ற) கடுக் கன் வகை. (செ. ப. அக.)

அருப்புத்தொழில் பெ. அணிகட்கு அரும்பு (பூவேலை)

கட்டும் வேலை. வீரக்கழல் அருப்புத்

பறைந்தவை (புறநா. 4,3 ப. உரை).

தொழில்

அருப்புத்

தொழில் என்றது ஆபரணங்களில் நுண்ணிதாகச் செய்யும் சிறிய அரும்பு போன்ற வேலைகளை (கலித். 104,23 அனந்தராமையர் அடிக்குறிப்பு).

அருப்புவாய் பெ நெல் அறுக்க ஆரம்பிக்கும் இடம். வடபாற் கெல்லை அருப்பு வாய்க்குத்தெற்கும்

(தெ.இ.க.23,363).

அருபரம் பெ. ஒப்பற்ற பரம்பொருள் நிலை. அருபரத் தொருவன் அவனியில் வந்து (திருவாச. 4, 75).

அருபருத்தம் பெ. வாழை. (வைத். விரி. அக. ப. 10) அருபாகம் பெ. கரிசலாங்கண்ணி. (மரஇன. தொ )

அருபாரம் பெ. கையாந்தகரை. (சங். அக.)

அருபி பெ. விண்ணுலகத் தூதுவர். காட்சி மோட்ச அருபிகள்தான் சூழ (அந்தோனி. அண். 18).

அரும்பகைத்தொள்ளாயிரம்

(அரும்பைத்தொள்ளா

யிரம்) பெ. ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்று மறைந்து போன ஒருநூல். (தமிழ்நா. 117)

அரும்பண்டம் பெ. கடலிலும் மலையிலும் தோன்றும் அரிய பொருள்கள். தாரம் என் கிளவி அரும்பண்டம் ஆகும் (பிங்.1151).

அரும்பதம் 1 பெ. 1. சிறந்த உணவு. அழிவு நன்கு அகல அரும்பதம் ஊட்டா (பெருங். 4,3,20). 2. சிறந்த பதவி. ஆற்றலின் மிகுந்தனை அரும் பதம் கூட்டுவை (பாரதி. தேசியம். 19,3). 3.பிரம லோகம், வைகுந்தம் போன்ற உயர்ந்த உலகம். ஆங்க வர் மேவும் அரும்பதம் ஆமே (கந்தபு. திருநகர.2).

37

6

அரும்பு 1- தல்

அரும்பதம் ' பெ. அரியசொல். சிலப்பதிகாரத்துக்கு அரும்பதவுரை என்றும் அடியார்க்கு நல்லார் உரை என்றும் இரண்டு பழைய உரைகள் உள்ளன

(சிலப். உ. வே. சா. முகவுரை).

அரும்பதவுரை பெ. ( அரிய சொற்களுக்கு உரை ) சிலப்பதிகாரத்துக்குப் பெயர் தெரியாத ஆசிரியர் செய்த அரும்பதவுரை. இவ்வரும்பதவுரையையே பெருங் கருவியாகக்கொண்டு இந்நூலுக்கு அடியார்க்கு நல்லார் உரை செய்தனர். (சிலப். அரும்பத. வர.).

அரும்பர் (அருப்பு', அரும்பு3) பெ. மொட்டு. அணி திகழும் மணி முறுவல் அரும்பர் அவை (பெரியபு. தடுத்தாட். 148). பரப்புவ தாமரை அரும்பர் (தணிகைப்பு.நாட்டு. 86). ஒத்தெழு சண் பகம் மொய்த்த அரும்பர் (திருவிளை. பு. 52,5).

அரும்பாடு பெ. கடினமான உழைப்பு. (பே.வ.)

அரும்பாலை பெ. பாலைப்பண்

வகை. உழை குரல் ஆன அரும்பாலை (பரிபா. 11, 127 பரிமே.). படு மலை செவ்வழி பகர் அரும்பாலை (சிலப். 3, 84). உழையே குரல் ஆகில் அரும்பாலை என்ப (பிங்.

1406).

அரும்பாவி பெ. பெரும்பாவம் செய்தவன். அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் (பெருமாள்தி. 9,5).

அரும்பி 1-த்தல் 11வி. தோன்றுதல். அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி (தேவா. 6, 6, 4).

அரும்பி' பெ. குங்குமபாடாணம். (வைத். விரி. அக. ப.

22)

அரும்பிஞ்சு பெ. பூம்பிஞ்சு, மிக்க இளங்காய்.(பே.வ.) அரும்பு 1-தல் 5 வி. 1. முகிழ்த்தல். கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே (நற். 224,3). காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள். 1227). கண்ணீர் அரும்பா நிற்கும் மனத்து அடி யார் (தேவா. 7, 23, 4). குருந்தம் நின்று அரும் பின முருந்தம் (கம்பரா. 2, 8, 45). கலை அரும்புறு கதிர் இளமதி (செ. பாகவத. 1, 1, 6). 2. தோன்று தல். அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலை (குறுந். 71). தளிர்ப்புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் (மதுரைக். 707-708). வெண்முத்து அரும்பி (நம்.திருவிருத்.9). அரும்பிய முலையி னாளுக்கு அணிமுகம் நான்குதோன்ற (சீவக. 207). பொடித்து அரும்பாத சின்முலைக் கொடி மடந்தை யள் (கல்லாடம் 7, 1).

.