தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
5
(6T.JIT.)
LO
'கு' என்னும் எழுத்தைத் தனித்துச் சொல்லும்போது, 'ku' என ஒலிக்கும். ஆனால், இவ்வெழுத்து, 'பங்'கு' என்னும் சொல்லில் 'ங்' என்னும் மெல்லொலியுடன் சேரும்போது, 'gu' என ஒலிக்கும்.
இவ்வாறே, அகம் என்ற சொல்லில் 'க' எனும் எழுத்து 'ka' என ஒலிக்காமல் 'ha' என
ஒலிக்கும்.
பஞ்சு எனும் சொல்லில் 'சு' எனும் எழுத்து 'su' என ஒலிக்காமல் 'ju' என ஒலிக்கும். 1.5 உருவ வேறுபாடு
எழுத்துகள் சொற்களாக மாறும்போது சிறிது ஒலி மாற்றம் பெறும் எனப் பார்த்தோம். ஏனெனில், தமிழில் அழுத்தி ஒலிக்கக்கூடிய எழுத்துகள் என்று எவையும் இல்லை. அவை, தமக்கு அருகிலுள்ள எழுத்துகளின் ஒலிக்கேற்ப சிறிது மாற்றம் பெறுகின்றன.
பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் போது அவற்றின் ஒலிகளை ஈடுசெய்ய தனி எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஷ,ஜ,ஹ, ஸ என்பன சமஸ்கிருத எழுத்துகள் ஆகும்.
பெரும்பாலும் சமஸ்கிருதச் சொற்களை எழுதும்போதே இவ்வெழுத்துகள் பயன்படுகின்றன. தற்போது பல்வேறு ஆங்கிலமொழிச் சொற்களை எழுதுவதற்கும் இவ்வெழுத்துகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. பிறமொழிச் சொற்களை எழுதும்போது எந்த ஒலி மாற்றமும் வராமல் இருக்க, இந்த எழுத்துகள் துணை செய்கின்றன.
வெளியான ஒரு செய்தி
கீழே
எடுத்துக்காட்டாக, இந்து தமிழ் நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பிறமொழிச் சொற்கள் கலந்து வருவதைக் காணலாம்.
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்காக விளையாடி இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும், 28 டி 20 ஆட்டங்களில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
1.6 சுட்டெழுத்துகள்
பிறவற்றைச் சுட்டுவதற்காகச் சுட்டுப்பொருள் தந்து நிற்கும் எழுத்துகள், சுட்டெழுத்துகள் எனப்படும். அவை, அ, இ, உ என்பன.