உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

45






(எ.கா) உலகம் வியந்தது


இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக் குறிக்காமல், அதில் வாழும் மக்களைக் குறித்தது (மக்களுக்கு ஆகி வந்தது). இது இடவாகு பெயர்.

3. காலவாகு பெயர்

காலப்பெயர் அதனுடன் தொடர்புடைய ஒன்றிற்குப் பெயராக ஆகிவருவது காலவாகு

பெயராகும்.

(எ.கா)

கார் அறுத்தான் இங்கு, 'கார்' என்ற மழைக்காலத்தின் பெயர், அக்காலத்தில் விளையும் நெல்லுக்கு ஆகிவருவதை உணர்த்துகிறது.

திசம்பர் சூடினாள்- திசம்பர் என்பது மாதத்தைக் குறிக்காமல் திசம்பர் மாதத்தில் பூக்கும் பூக்களைக் குறிக்கிறது.

4. சினையாகு பெயர்

ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.

(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு.

இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர்,பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.

5. பண்பாகு பெயர்

ஒரு பண்பின் பெயர், அப்பண்பையுடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர். (எ.கா) வீட்டிற்கு வெள்ளை அடித்தான்:

'வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு 'வெள்ளை' என்பது ஆகுபெயர். இதனைப் பண்பாகுபெயர் என்பர்.

6. தொழிலாகு பெயர்

தொழிற்பெயர்கள் செயல் அல்லது தொழிலைக் குறிக்காமல் தொடர்புடைய ஒன்றிற்குப் பெயராக ஆகிவருவது தொழிலாகு பெயராகும்.

(எ.கா) புழுங்கல் வெந்தது

அதனுடன்

இங்குப் 'புழுங்கல்' என்று புழுங்குதலாகிய தொழிலைக் குறிக்காமல் அரிசிச்சோறு என்னும் பெயரைக் குறித்ததால் தொழிலாகுபெயர்.