தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
115
நிலம் + பரப்பு = நிலப்பரப்பு (வேற்றுமையில்)
வட்டம் + கல் = வட்டக்கல் (அல்வழியில்)
2. எழுவாய்த் தொடர், உம்மைத்தொகை, பெயரெச்ச, வினைமுற்றுத் தொடர், இடைச்சொற்றொடர்
எழுவாய்த் தொடரிலும், உம்மைத் தொகையிலும், செய்யும் என்னும் பெயரெச்சத் தொடரிலும், வினைமுற்றுத் தொடரிலும், இடைச்சொற்றொடரிலும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
மரம் + சிறிது
நிலம் + தீ
செய்யும் + செயல்
தின்றனம் + குறியேம்
இராமனும் + சீதையும்
3. மகர மெய்யின் முன் மெல்லினம்
= மரஞ்சிறிது (எழுவாய்த்தொடர்)
= நிலந்தீ (உம்மைத்தொகை)
=
செய்யுஞ்செயல் (பெயரெச்சம்)
= தின்றனங்குறியேம் (வினைமுற்று)
=
இராமனுஞ்சீதையும் ('உம்' இடைச்சொல்)
மகர மெய்யின் முன் வருமொழியில் மெல்லினம் வந்தால் அல்வழி, வேற்றுமை ஆகிய இருவழியிலும் நிலைமொழி இறுதியிலுள்ள மகரம் கெடும்.
மரம் + நீண்டது = மரநீண்டது (அல்வழியில்)
மரம் + மாட்சி = மரமாட்சி (வேற்றுமையில்)
4. மகரத்தின் முன் உயிரும் இடையினமும்
மகரத்தின்முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியில் பண்புத்தொகை, உவமைத்தொகையிலும் மகரம் கெடும். உம்மைத் தொகையிலும், செய்யும் என்னும் பெயரெச்சத் தொடரிலும், வினைமுற்றுத் தொடரிலும், இடைச் சொற்றொடரிலும் இறுதி மகரம் கெடாது நிற்கும்.
மரம் + வேர்
புலியும் + யானையும்
வட்டம் + ஆழி
=
மரவேர்
= புலியும் யானையும்
= வட்டவாழி
=
= பவளவிதழ்
பவளம் + இதழ்
மரம் + வலிது
= மரம்வலிது
நிலம் + வானம்
ஆளும் + வளவன்
= நிலம் வானம்
= ஆளும்வளவன்
அரசனும் + அமைச்சனும்
=
அரசனுமமைச்சனும்