உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்






4.9 எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி


எண்ணுப்பெயர்கள் தம்முடன் தாமும் தம்முடன் பிறவும் சேரும்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பின்வருமாறு காண்போம்.

1. ஒன்று

ஒன்று என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய் கெட்டு, னகர ஒற்று ரகரமாகத் திரியும். வருமொழி முதல் மெய்யெழுத்தாயின் ரகர ஒற்று உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதல் நீளும்.

ஒன்று + கோடி ஒன்று + ஆயிரம்

=

ஒருகோடி

= ஓராயிரம்

2. இரண்டு

இரண்டு என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய்யும், ணகர ஒற்றும், ரகரத்தின் மேல் நின்ற அகர உயிரும் கெடும். வருமொழி முதல் மெய்யெழுத்தாக இருந்தால் ரகரம் உகரம் பெறும்; உயிரெழுத்தாக இருந்தால் உகரம் பெறாது முதல் நீளும்.

இரண்டு + கோடி

=

இருகோடி

=

ஈராயிரம்

இரண்டு + ஆயிரம்

3. மூன்று

மூன்று என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய் கெடும். வருமொழி முதல் உயிராயின் னகரமெய்யும் கெடும். வருமொழி முதல் மெய்யாயின் நிலைமொழியின் முதல் குறுகி, னகரமெய் வருமொழியின் மெய்யாகத் திரியும்.

மூன்று + ஆயிரம்

=

மூவாயிரம்

மூன்று + நாழி

4. நான்கு

=

= முந்நாழி

நான்கு என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய் கெடும். நின்ற னகரம், வருமொழி முதல் உயிராகவோ அல்லது இடையின எழுத்தாகவோ இருந்தால் லகரமாகத் திரியும்; வருமொழி வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்; மெல்லெழுத்தாயின் இயல்பாகும்.

நான்கு + ஆயிரம்

=

நாலாயிரம்

நான்கு + வகை

=

= நால்வகை

நான்கு + திசை நான்கு + மணி

= நாற்றிசை = நான்மணி