தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
117
5. ஐந்து
ஐந்து என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய் கெடும். வருமொழி முதல் உயிராக இருந்தால் நின்ற நகர மெய்யும்(ந்) கெடும். வருமொழி முதல் வல்லெழுத்தாக இருந்தால் அதன் இனமெல்லெழுத்தாகத் திரியும். வருமொழி இடையெழுத்தாகவோ
இருந்தால் வந்த எழுத்தாகத் திரியும்.
ஐந்து + ஆயிரம்
மெல்லெழுத்தாகவோ
=
ஐயாயிரம்
ஐந்து + நூறு
=
= ஐந்நூறு
ஐந்து + பத்து
=
= ஐம்பது
ஐந்து + கலம்
=
6.ஆறு
ஐந்து + பொறி
ஐங்கலம்
= ஐம்பொறி
று என்னும் எண் உயிர் வரின் பொதுவிதிப்படி (நிலையீற்று உகரம் கெட்டு வருமொழியோடு புணரும்) முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.
7. ஏழு
ஆறு + ஆயிரம் = ஆறாயிரம்
ஆறு + மணி = அருமணி
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்று உகரம் கெடும்: மெய்வரின் முதல்
குறுகும்.
8. எட்டு
ஏழு + ஆயிரம் = ஏழாயிரம்
கடையேழு+ வள்ளல் = கடையெழு வள்ளல்
எட்டு என்னும் எண்ணின் ஈற்று உயிர்மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத் திரியும்.
எட்டு + ஆயிரம் = எண்ணாயிரம்
எட்டு + வளை = எண்வளை
(இத்திரிபுகளின்றிப் பொது விதிப்படி இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வரும் என்பதை அறிக).