உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகின்மாறு

கவிவகை. விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டு என்று சிறப்பித்த அதனால் நிரோட்டிபாடுதலும் அலகிருக்கை வெண்பாப் பாடுதலும் அறிந்து கொள்க (யாப். வி. 96 உரை).

...

அலகின்மாறு பெ. துடைப்பம். அலகின் மாறுமாறாத கலதி (திருப்பு. 77).

கண்ட சீர்

அலகு1 பெ. 1. எண். அலகு அளவு கண்ட

ஆழியாய் (இயற். முதல்திருவந். 10). 2. அளவு. அலகு இல் மாலை ஆர்ப்ப வட்டித்து (புறநா.399,25). அலகுஇல் பல்லுயிர் (மணிமே. 24. 116). அலகில் ஆற்றல் அருச்சுனன் (சேரமான். மும். 4, 14). அல் கிலா விளையாட்டுடையார் (கம்பரா. கடவுள். 1). அலகு இலாத அனந்த குணக்கடல் (யசோதர. 1). அலகு இல் வெற்றியும் உரிமையும் இவை என (கலிங். 353). அலகு இலா மறை விளங்கும் (ஏரெழு.20). அலகு இலா மகிமை வாய்ந்த அருட்குறி (கருவைப் 4. 5, 5). அலகு இலாதவன் பால் அலது இலை (செ. பாகவத.1,1,22). அலகு இல் வலி இச்சிறு வன் அப்பெருமானாவான் (பாலசரிதம் 3, 4).3. (இசை) சுருதியளவு. (செ. ப. அக. அனு.) 4. அளவு கருவி. வாழ்நாட்கு அலகாய் வயங்கொளி மண்டி லம் (நாலடி. 22).5. (யாப்.) அசை அளவு. ஆரும் அறிவர் அலகு பெறாமை (யாப். காரிகை 51).

அலகு பெ. பலகறை. அலகையன்ன வெள்வேர்ப் பீலிக்கலவ மஞ்ஞை (மலைபடு. 234). அலகின் அன்ன அரிநிறத்து ஆலி (அகநா. 335, 21). பறை அலகு அனைய வெண்பல் நரகர் (சீவக. 2773). பிற நிமித்தமான அலகு முதலாயின (தொல். பொ. 153 இளம்.).

அலகு 3

...

பெ. (சோதிடக் கணக்கில் பயன்படும்) மகிழம் விதை. மகிழ் அலகுஒன்றே போல் (இயற். முதல்திருவந். 49).

அலகு பெ. இலட்சம் பாக்கு.(செ.ப.அக.)

அலகு5 பெ. 1.நெல்மணி. (முன்.) 2. நெற்கதிர். அலகுடை நீழலவர் (குறள். 1034).

அலகு பெ. 1. சில உயிர்களின் கீழ்வாய். அரணை அலகு திறக்கிறதில்லை (வின்.). 2. தாடை. அவன் அலகைப் பேர்த்து விட்டான் (பே.வ.).

அலகு பெ. 1. பறவையின் மூக்கு. மாரிக் கொக் கின் கூர் அலகு அன்ன ஆம்பல் (நற்.100, 2-3).

000

02

2.

அலகு15

அம்பின் முன்பகுதியில் உள்ள இலைபோன்ற வடி வம். வில்வாங்கி அலகு அம்பு விசை நாணில் சந்தித்து (பெரியபு. 37, 167). குயில் அலகால் பல்ல வங்கள் கோதுமாலோ (பாரதம். 1, 8, 2). துணை யன்றில் வாயலகு வாங்கி (குலோத். உலா 270). ஆதரவுடனே கூடி அயிலுவான் அலகு அங்காந்து (திருவால.பு.63, 16). 3. போர்க்கருவி. அலகினொடு அலகுகள் கலகல எனும் ஒலி (கலிங்.398). 4.கூர்மை. வள்வாய் அலகால் புள்நந்து உழாமே பொருநீர்த் திருவரங்கா அருளாய் (நம். திருவிருத். 28). அலகு அம்பையும் அளவா நஞ்சங்களை வெல வாகிய நயனங்கள் (கம்பரா. 2, 6, 3). அலகு அம்பு அன கண் இவள் (தஞ்சைவா. கோ. 234). 5. துடைப்பம். ஆப்பி நீரோடு அலகு கைக்கொண்டிலர் (தேவா. 5, 95,3). திருவலகு முதலாம் அவையேந்தி (பெரியபு. 21, 320). அலகைத் திருவலகு என்றும் வழங்கும் இத்தொடக்கத்தன (திருக்கோ. 1 உரை). முழுமணி யின் திரளை அடியார் அலகினால் திரட்டும் (கண்டராதி. திருவிசை. 9). விடியற் காலத்தே கையிற் பிடித்த அலகாலே (கலித். 96,22 நச்.). 6. பக்கம். தகட்டலகில் வேல்பாய (கூளப்ப. காதல் 84).

அலகு பெ. வீட்டுக்கூரையில் கட்டப்படும் சாத்துக்கழி. காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்றுள (திருமந். 146). அடிமனை பவளமாக அரும்பொனால் அலகு சேர்த்தி (சீவக. 837).

அலகு பெ. நூல் பாவின் அலகு. (வின்.)

அலகு10 பெ. 1. ஒளிக்கதிர். அலகுடன் விளங்கும் அம்பொன் குடைநிழல் (சூளா. 1844). 2. மின்மினி.

(சங். அக.)

.

அலகு 11 பெ. நுளம்பு (கொசு). பலகறையும் நுளம் பும் அளவும் அலகு எனல் (பிங்.3091)

அலகு 12 பெ. பொன்னாங்காணி. (இராசவைத்./செ.ப.

அக.)

அலகு 13 பெ. அறுகு. (பச்சிலை. அக.)

அலகு1 பெ. ஆண்பனை. (திருநெல்.வ.)

அலகு1

பெ. பெ. அகலம், பரப்பு, எல்லை. எழுகதிர்ப் பருதி ஒன்று நூறாயிரகோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்பு (கருவூர். திருவிசை. 9, 1). உமையாள் கற்பு அலகை நீக்கி நின்ற மடவாள் (தில். கலம். 61).