உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகு16

அலகு1 பெ. குற்றம். அலகின் மரகத முறிகளும் வயிரமும் (தக்க. 41).

அலகுக்கடுப்பு பெ. ஆண்பனையின் பாளையை இடுக்கும் இடுக்கி. (தொ.வ.)

அலகுகட்டுதல் 5 வி. 1. மந்திரத்தால் வாயைக் கட்டு தல். (ராட். அக.) 2. வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல். (வின்.)

அலகுகட்டு-தல் 5 வி. கணக்குத் தீர்த்தல். (முன்.)

அலகுகட்டு' பெ. வண்டிச்சக்கரத்தைச் சுற்றியமைக்கும் இருப்பு வளையம்.(தஞ.வ.)

அலகுகட்டை பெ. வண்டிச் சக்கரவட்டை. (நாட்.வ.)

அலகுகழி -த்தல் 11 வி. (கண க்கிடும்போது விதை முதலியவற்றைக் கொண்டு) தொகையைக் கழித் தல். (வின்.)

அலகுகிட்டுதல் 5 வி. சன்னிநோயால் பல்லுக்கிட்டுதல். (செ.ப.அக.)

அலகுகுத்து-தல் 5 வி. தெய்வத்திற்குரிய நேர்த்திக் கடனை நிறைவேற்ற நா கன்னம் முதலிய உறுப்புக் களில் கூர்மையான ஊசிகளைக் குத்திக்கொள்ளுதல். (நாட்.வ.)

அலகுகூடை பெ. மர வளார்களால் நெருக்கமாகப் பின்னப்பட்டு நீர் எடுக்கப் பயன்படுத்தும் கூடை.

(ராட்.அக.)

அலகுகோலி (அலகுசோதி) பெ. அறுகம்புல். (மர இன.தொ.)

அலகுசோதி (அலகுகோலி) பெ. அறுகம்புல். (வைத். விரி. அக.ப. 23)

அலகுஞ்சம் பெ. மின்மினிப்பூச்சி. (செ.ப. அக.)

அலகுநிலை பெ. (கூட்டல் பெருக்கல்களால் வரும் விடைத்) தொகை. தளிகை ஒன்று நிறை அலகு நிலைப் படி நூற்றறுபத்தொரு கழஞ்சு (தெ. இ

க. 5,521),

அலகுநிறு-த்தல் பெ. துரோபதை முதலிய அம்மன் கோயில் விழாவில் சிலை முன்னுள்ள நிறைகுடத் திற்கு அருகில் வாள் நாட்டும் சடங்கு. (வின்)

பெ. சொ . அ . 1-26 அ

.

403

அலகை +

அலகுப்பூட்டு பெ. தெய்வத்திற்குரிய நேர்த்திக்கடனுக் காகக் கன்னங்களின் ஊடே கூரிய ஊசிபோன்றவற் றைச் செலுத்தி இடும் வாய்ப்பூட்டு. (முன்.)

அலகுபருப்பு பெ.

பட்டாணிக்கடலை.

(செ. ப. அக.)

அலகுபனை பெ. 1. விசிறி பெ. 1. விசிறி

போன்ற மடல் அமைந்த

(முன்.)

பனை. (முன்.) 2. ஆண் பனை.

அலகுபாக்கு பெ. சிறியதாகச் சீவி வேகவைத்துப் பக்கு வம் செய்த களிப்பாக்கு. (முன்.)

அலகுபீசன் பெ. காட்டுக்கடலிச்செடி. (மரஇன. தொ.)

அலகுபோடு-தல் 6 வி. தெய்வத்திற்குரிய நேர்த்திக் கடனை நிறைவேற்ற நா கன்னம் தோள் முதலிய உறுப்புக்களில் கூர்மையான ஊசியைக் குத்திக் கொள்ளுதல்.(நாட். வ.)

அலகுவிரல் பெ. ஆண் பனையின் கதிர். (திருநெல்.

வ.)

அலகுவிறைப்பு பெ. நோய் மிகுதியால் தாடை கிட்டுகை.

(பே.வ.)

அலகை பெ. தன்மை, இயல்பு. அலகை அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகை (புறநா. 282,8).

...

அலகை' பெ. 1. பேய். வையத்து அலகையாவைக்கப் படும். (குறள். 850). அரக்கியர் அலகையின் குழுவும் அஞ்ச (கம்பரா. 5, 14, 36). அலகைத் தேரின் அலமருகாலின் (பட்டினத்தார். கோயிற். 1, 4). அவ்வணங்கை அகலாத அலகைகளை இனிப் பகர் வாம் (கலிங். 134). அலகையின் கள்வரின் பறவை யின் (ஞானா. 26, 8). அலகை நின்று ஒத்தி...இயம் கொட்ட (திருப்பு. 58). தலைப்படு சினத்து அலகை சாலையில் இறுத்த (செ. பாகவத. 4, 2, 45). அலகை ஒருபுறம் இடர்செய் நரிகள் ஒருபுறம் (சிலையெழு. 4). சேனப் பந்தரின் அலகைத் திரள் பல குரவை பிணைந்தாட (மீனா. பிள். 39). கானிலே நட மாடும் கற்பு அலகையுடன் நடிக்கும் கடவுள் (தில் கலம். 61). 2. கொள்ளிவாய்ப் பிசாசு. அலகை வாய் விளக்குத்தோன்றலின் (செவ்வந்திப்பு. 3, 20). கொள்ளி வாய் அலகை வாய்திறந்து (திருவிளை. பு. நகரச். 26). 3. அசுத்த அரூபி. அலகைகள் புரி சோதனைகள் தாழ (அந்தோனி. அண். 18).

அலகை" பெ. பேய்க்கொம்மட்டி. (வாகட அக.)

அலகை" பெ. காட்டுக் கற்றாழை. (வின்.)