உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலகை"

அலகை" பெ. 1. அளவு. அலகைசான்ற உலகபுராண மும் (பெருங்.1, 32, 2). அலகையில் தானைவேந் தன் அம்பரசரனை நோக்கி (சூளா. 511). 2. ஒன் றற்கு மேலெல்லை. அலகையாகிய அரசகுமரனை (பெருங். 5,3,3),

அலகை

பெ. அளகாபுரி, அளகா என்னும் நகரம்.

(செ. ப. அக, அனு.)

அலகைக்கொடியாள் பெ. மாகாளி. அலகைக் கொடி யாள் மாகாளி பெயரே (பிங். 119).

அலகைச்சுரம் பெ. கீழ்க்காய் நெல்லி. (பச்சிலை. அக.)

அலகைத்தேர் பெ. கானல்நீர், அலமருகாலும் அல கைத் தேரும் (கல்லாடம் கடவுள். 5, 36). அலகைத் தேரில் அலமருகாலின் (பட்டினத்தார். கோயிற். 1, 4) அலகைத் தேரின் நிலையில் தீரும் உமா. சங்கற்ப நிரா. பாயி.). பரசமய அலகைத் தேர் விண்டு அகல (சேதுபு. கடவுள். 13).

அலகைப்பிரியம் பெ. மருதமரம். (சித். பரி. அக.ப.156)

அலகைமுலையுண்டோன்

பெ. (பூதனை என்னும் பேயின் பாலுண்டு அவளைக் கொன்ற) கண்ணன். அலகை முலையுண்டோன் கண்ணன் நாமமாகும் (பிங். 130).

...

...

திரு

அலகையூட்டு பெ. பேயை வழிபடுகை. அலகையூட்டு ஆதிசெய்வோர் (அருணகிரி. பு. 6, 7).

அலங்கடை வி. அ. அல்லாத இடத்தது. எனும் மூன்று அலங்கடையே

மூன்றும் அல்லாவிடத்து-இளம்.).

அ ஐ ஒள (தொல். எழுத். 62

அலங்கம்' (அலங்கன்) பெ. 1. கொத்தளம். தெண் டிரை அலங்கத்துப் புக்குலவி (திருப்பு. 743). 2. கோட்டையின் மதிற் சுவரையொட்டிய தெரு. தஞ்சை யில் தெற்கலங்கத்தை ஒட்டிப் பேருந்து நிலையம் உள்ளது (வட். வ ).

அலங்கம்' (அரங்கம்!) பெ. ஆற்றின் இடையில் அமைந்த திட்டு, ஆற்றிடைக் குறை. டைக் குறை. (பே.வ.)

அலங்கமலங்க வி. அ. பொறிகலங்க. அவன் அலங்க மலங்க விழுந்தான் (முன்.).

அலங்கரணம் பெ. புனைவு, அலங்காரம். (செ. ப. அக.)

04

அலங்கல் *

அலங்கரி-த்தல் (அலங்காரி-த்தல்) 11 வி. அழகுபடுத் தல். அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா (நாச்சி. தி. 1, 1). பட்டமாலையும் தூக்கமும் அலங் கரித்து (நக்கீர. திருக்கண்ணப்ப. 53). பூந்தாமங்கள் நிரைத்து வெவ்வேறலங்கரித்து (பெரியபு. 37, 144). பகடு அயிராபதம் அலங்கரித்து ஊர்வோன் (திருவரங். அந். 47).

9.0

அலங்கல்1 பெ. 1. அசைகை. அலங்கலந் தொடலை (நற். 169,8). சிலம்பி கோலிய அலங்கல் போர்வை (பதிற்றுப். 39,13). சேம்பின் அலங்கல் வள் இலை (குறுந். 76,3). கொன்றை அலங்கலம் தெரியலான் (கலித். 150, 1). அலங்கல் அம் சினைக் குடம்பை (அகநா. 113, 24). அலங்கல் அம் கழனிசூழ் அணி நீர்க்கங்கை (தேவா. 6,22,6). அழல் செய் தடத் துள் மலர்ந்த அலங்கல் மாலை (சீவக. 918). 2. மாலை. கமழ்குரல் துழாஅய் அலங்கல் செல்வன் (பதிற்றுப். 31,9). ஆற்ற அலங்கல் அம் பேய்மகளிர் ஆடவருமே (முத்தொள். 74). மட்டு அவிழ் அலங் கல் மன்னகுமரற்கு (மணிமே. 4,63). சுரும்புண விரிந்த கொன்றைப் படலைசேர் அலங்கல் மார்பர் (தேவா. 4,28,4). இணரும் துழாய் அலங்கல் எந்தை (இயற். பெரியதிருவந்.29). மின்னு கொன்றை அலங்கல் (திருவாச. 6,29). அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு (கம்பரா.5 கடவுள்.). சோதி விட்டு இலங்கு அலங்கல் (திருமாளி.திருவிசை. 4,2). தேமான் அலங்கல் திருமால் நெடுஞ்சேந்தன் என் னும் (சூளா. 4). விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு (பெரியபு. 21,88). நறவு குதி கொண்ட துளவணி அலங்கல் (திருவரங்.கலம். 13). தண்தமிழ் அலங்கல் (தாயுமா. 24,6). 3. மயிர்ச்சூட்டுமாலை. அலங்கல் சேர் சடை ஆதி புராணனை (தேவா. 5, 83,6). ஆயிதழ் பொன் அலங்கல் காலசைப்ப ஒல்கி (சீவக. 595). வாசிகை அலங்கல் மயிர்ச்சூட்டு மாலை (பிங். 3030). 4. நெற்றிமாலை. அரும்பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப (சீவக. 349).

அலங்கல்' பெ. 1. கதிர். கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் (அகநா. 13,19). 2. தளிர். பல்ல வம் அலங்கல் கிளை பைந்தளிர் எனல் (பிங்.2800).

அலங்கல்' பெ. துளசி. (வாகட அக.) பிணிக்குப்பிணி யாகும் அலங்கல் (தேரை. வெண்.15).

600

அலங்கல் * பெ. 1. விளங்குகை. பன் அலங்கல் நன் மாலைபாடுமின் (தேவா. 7, 76, 10). ஆடகச் செம் பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்