உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதரி'-த்தல்

6, 37, 99). அடுமடைப்பள்ளியின் நடு அவ தரித்தும் (கல்லாடம் 14, 2). சேடிமாரில் ... கமலினி அவதரித்தாள் (பெரியபு. தடுத்தாட். 131). அங்கவர் தம்மிடை அவதரித்தனன் (கந்தபு. 7 பாயி. படி புரக்க அவதரித்த பண்ணாடர் (சிலையெழு. 6). 2. பிறத்தல். அருமறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த... திருமறையவர்கள்

2).

அவதரி2 - த்தல் 11 வி. தங்குதல். 2

மடத்து

41).

(பெரியபு. தடுத்தாட்.

வாகீசச் சுவாமி

த்து அவதரிப்ப (திருவால.பு.37,32). சீவன் மூளையின் அவதரித்து (சீறாப்பு. 1, 4, 7).

அவதாதம் பெ. வெண்மை.(உரி. நி.8,1)

அவதாதம்2 பெ. தூய்மை. (நாநார்த்த.897)

அவதாதம்3 பெ. பொன்மை. (முன்.)

அவதாதம்' பெ. அழகு. (LOGIST.)

அவதாரணம் பெ. தேற்றம், தெளிவு. அவதாரணத் துக் கருத்து (திருப்பா. 1மூவா.).

அவதாரம்! பெ. பிரிக்கை. (இலங். வ.)

அவதாரம்2 பெ. தீர்த்தத்துறை. அவதாரம் தத்துறை (நாநார்த்த. 917).

...

தீர்த்

அவதாரம்' (அபராதம், அவராதம்) பெ. செய்த குற் றத்திற்குரிய தண்டனை. அரமனைக்கு ஆயிரத்திரு நூறு பொன்னும் அவதாரம் இறுத்து (கல்வெட்டு 1

ப. 8).

அவதாரம்' பெ. 1. (விண்ணகத்திலிருந்து மண்ணு லகிற்கு) இறங்குகை, தெய்வப்பிறப்பு. பரவையாம் மங்கையார் அவதாரம் செய் மாளிகை (பெரியபு. திருநகரச்.5). திருஅவதாரப் படலம் (கந்தபு.படலப் பெயர்). அவதாரம் அது செய்வானே (இராமநா. 1,6). திருமால் பத்தவதாரம் எடுத்தார் (பே. வ.). கண்ணனே எண்ண ஒண்ணா அவதாரத்தனே (திருவரங். அந். 76). ஆழ்வாருடைய அவதாரம்... நம்பிள்ளை (யதீந்திரப், ப. 2). திருநபிவரும் அவதாரம் செப்புவாம் (சீறாப்பு. 1, 5, 1). திருஅவதாரம் செய் தன்று இருந்த (நாஞ். மரு. மான். 9,53). 2.பிறப்பு. எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம் (திருப்பு. 288).

அவதாரிகை பெ. முன்னுரை. நூலின் அவதாரிகை (வைண.வ.).

49

28

அவதி’

அவதாளம் பெ. தாளப்பிசகு. தாளவியல்பு பொலிவு பெற அவதாளம் நீங்க (சிலப். 3,135 அடியார்க்.). அவதானம்1 பெ. மேன்மையான செயல், திருவிளை யாடல். இறைவன் செய்த சிந்தைகூர் அவதானத் தின் திறங்களை (திருவால. பு. நூல்வர. 7). அந்த ரத்தில் நிறுத்தும் அவதானம் போல (தாயுமா.26, 1). அவதானம்' (அவுதானம்)பெ.1.மனஒருமைப்பாடு (சங். அக.) 2. (ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கூர்ந்து காணும்) நினைவாற்றல். அவர் அவதானத்தில் வல்லவர் (நாட். வ.). 3. திறமை. அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான்

(வின் ).

அவதானம்' பெ. பிரிவு. (நாநார்த்த. 909)

அவதானம் பெ. வரம்பு மீறுகை. (முன்.)

அவதானம்' பெ. முடிவு. உச்சிச்சந்தி அவதானத்தில் (தெ.இ.க. 5,136). அவர் கூட்டத்தில் அவதான மாய்ச் சொன்ன செய்தி (நாஞ்.வ.).

அவதானி 1-த்தல் 11வி. நினைப்பூட்டிக்கொள்ளுதல்.

(சங். அக.)

அவதானி' (அவுதானி) பெ. 1. கவனிப்புள்ளவன். (செ. ப. அக.) 2. வேதங்களில் தேர்ச்சி பெற்றவன். இவன் அவதானி (பிரபோத. 11,5). 3. ஒரே நேரத்தில் பல வகை வினாக்களுக்கும் தன் நினைவாற்றலால் விடை களை வரிசையாகக் கூறுபவன். ஈடில் அவதானி என் மாதுலன் (பாரிகாதை 9).

அவதி பெ.

துன்பம். கட்டு அவதி ஒட்ட ஒழிந் திடுக (பாரதவெண். 169). அவதி தீர்வகை எவ்விதம் (பெருந்.பு. 25,3). பார்த்து என் அவதியைத் தீர்த்து அருளாததென் (வருணா. குற. 45).

அவதி2 பெ. 1. எல்லை, அளவு. அவதி அறிந்த அணி யிழை நல்லாள் (மணிமே.21,188). அன்பினுக்கு அவதியில்லை (கம்பரா. 4, 2, 13). அவதியில்லாச் சுவைக் கூழ் (கலிங். 565).அமண்கையர் வஞ்சனைக் கோர் அவதியில்லை (பெரியபு. 28,615). அவர்கள் இன்ன பாதகங்கள் இழைத்தார் என்று குன்றி அவதியும் அறியோம் என்றனர் (ஞான. உபதேசகா. 1520). போனவர்கள் வரும் அவதி போயினதே (கம்பன் பிள். பாயி. 6).அவதி ஓர் ஆண்டு அளிப்பம் (காந்திகாதை. 4,12,26).2. காலம், நேரம். அரவுயர்த் தோன் சொன்ன அவதியாண்டு (பாரத வெண். 5).