உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிசனாற்றம்

அவிசனாற்றம் பெ. அழுகிய காய் முதலியவற்றின் தீய

மணம். (பே.வ.)

அவிசாரம் 1 பெ. (அ + விசாரம்)

ஆராய்ச்சியின்மை.

அஞ்சாதே அவிசாரம் அவிசாரத்தமைத்தார்கள் (கோயிற்பு. பதஞ். 31).

அவிசாரம்' பெ. (அ + விசாரம்) கவலையின்மை. (சங். அக.)

அவிசாரம்' (அபிசாரம்) பெ. (அவி + சாரம்) பிறர்க் குத் தீங்கு பயக்க மந்திரத்தைப் பயன்படுத்துகை. அஞ்சாதேம் அவிசார அமைத்தார்கள் (கோயிற்பு. பதஞ். 31).

...

அவிசாரி பெ. விலைமகள். (பே.வ.)

அவிசாரிதண்டம்1 பெ. நியாயமற்ற தண்டம். (சங். அக.)

அவிசாரிதண்டம் 2 பெ. மனம் ஒவ்வாத வீண்செலவு. (செ.

ப. அக.)

அவிசு (அவி5) பெ. 1. வேள்வித் தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு, அவி. அந்தமில் வேள்விமாட்டு அவிசும் ஆம் அவன் (கம்பரா. 6, 3, 65). அவிர்ப் பாக அவிசை ஏற்றுக்கொண்டருளியும் (தக்க. 46 ப. உரை). 2. நெய். (நாநார்த்த. 901) 3. கஞ்சி வடிக்காது சமைத்த சோறு. (செ.ப.அக.அனு.)

அவிசுப்பம் (அவுசுப்பம், அவுசூசிகம்) பெ. தொடரி என்னும் காட்டிலந்தை. (வைத். விரி. அக. ப. 24)

அவிசுவாசம்1 பெ. (அ+விசுவாசம்) நம்பிக்கை யின்மை. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்ய வில்லை (பு. ஏற். மத். 13,58).

அவிசுவாசம்2 பெ. 1. நன்றியின்மை. (செ.ப. அக.) துரோகம். (முன்.)

2.

அவிசுவாசி1 பெ. (அ +விசுவாசி) 1. நம்பிக்கையில் லாதவன். அவர்... அவிசுவாசியாயிராமல் விசு வாசியாயிரு என்றார் (விவிலி. யோ. 20, 27). 2. பிறமதத்தினரைக் குறிப்பிடக் கிறித்தவர் வழங்கும் சொல். (பே.வ.)

அவிசுவாசி2 பெ. நன்றியில்லாதவன். (செ. ப. அக.)

439

அவித்தை

அவித்தியம்*

அவிஞ்சை (அவிச்சை, அவிஞ்ஞை,

,

அவித்தியை, அவித்தை) பெ. அறியாமை. அவிஞ்சை எனும் பொய்யை (கம்பரா. 5, 12, 122). அவிஞ்சையிங்கில்லை (ஞானவா. நிருவாண. 1).

அவிஞ்ஞை (அவிச்சை, அவிஞ்சை, அவித்தியம்' அவித்தியை, அவித்தை) பெ. அறியாமை. (ஞானவா. வைராக். 92).

அவிட்டம்1 பெ. இருபத்தேழு நட்சத்திர வரிசையில் இருபத்து மூன்றாம் நட்சத்திரம். அவிட்ட நாளின் (திருக்காளத்.பு. 25,20).

அவிட்டம்' பெ. கோரைக்கிழங்கு.(செ.ப.அக. அனு.)

அவிடதம் (அவிழ்தம், அவுடதம், அவுழ்தம், ஒளடதம்) பெ. மருந்து. உறைமருந்து அவிடதம் (நாம. நி.374).

அவிடம் பெ. கத்தூரிமஞ்சள். (மரஇன. தொ.)

அவிடவெட்டு

(செ. ப. அக.)

பெ. நீதிமன்றப் பிரமாணப் பத்திரம்.

அவிடி பெ. திரைச்சீலை. அவிடி படமிடு திரை

(பிங். 1294).

...

அவிடு பெ. ஏளனச் சொல். சொல்லும் அவிடு சுருதி யாம் (ஞானசாரம் 40).

அவித்தியசம் (அவித்தியம்') பெ. பாதரசம். (சங். அக.)

அவித்தியம் (அவித்தியசம்) பெ. பாதரசம். (முன்.)

அவித்தியம்' (அவிச்சை, அவிஞ்சை, அவிஞ்சை, அவிஞ்ஞை, அவித்தியை, அவித்தை) பெ. 1. அறியாமை. (முன்.) 2. மாயை. (முன்.)

அவித்தியை (அவிச்சை, அவிஞ்சை, அவிஞ்ஞை, அவித்தியம்', அவித்தை) பெ. அறியாமை. அனாதி, யான அவித்தியையினாலே ஈட்டப்பெற்ற நல் வினை தீவினை (சிரீவசன. உரைப்பாயிரம் ப.12). அவித்துருமம் பெ. இலுப்பை மரம். (செ. ப. அக. அனு.) அவித்துவையல் பெ. பச்சடி. அவித்துவையல் பச்சடி

(பிங். 1125).

அவித்தை (அவிச்சை, அவிஞ்சை, அவிஞ்ஞை, அவித் தியம்', அவித்தியை) பெ. 1. அறியாமை, அடைந்துள