உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவையமுல்லை

அவையமுல்லை பெ.

நடுநிலையான அவைக்களத்துச்

சான்றோர் தன்மையைக் கூறும் புறத்துறை. (புற. வெண். 173 தலைப்பு)

அவையர் பெ. சபையோர். அன்னவன் கருத்துக்கேற்ப அவையரும் அனையரானார் ( திருவிளை. பு. 44, 22).

அவையல்' பெ. 1.குற்றல், தீட்டல். (செ. சொ. பேரக.) 2. குற்றலரிசி. ஆய்தினை அரிசிஅவையல் (பொருந. 16 நச்.). 3. அவல். (சங். அக.)

அவையல்' பெ. திரள். (செ. ப. அக. அனு.)

அவையல்கிளவி பெ. சான்றோர் முன் உரைக்கத் தகாத இழி சொல். அவையல்கிளவி மறைத்தனர் கிளத்தல் (தொல். சொல். 442 அவையல் கிளவியாவது இழிசொற் களை நன்மக்களிடை மறைத்து 5.).

...

...

அவையவம் (அவயவம்) பெ. உடல் உறுப்பு. வருத்த முற்ற அவையவம் அதனில் (சிவதரு. 10, 60).

அவையறி-தல் 4 வி. சபையின் இயல்பையறிதல். அவை யறிந்து ஆராய்ந்து சொல்லுக (குறள். 711).

அவைராக்கியம் பெ. புத்தியின்குணம் எட்டனுள் ஒன்றான உறுதிப்பாடின்மை. அவைராக்கியம் எனப்பேர்கூறும்

புத்தி (சிவப்பிர.விகா.193).

அவைராக்கியம்2 பெ. சிவபூசையில் மூர்த்திக்குரிய சிம் மாசன அமைப்பில் மேற்குத்திக்கில் அமையும் இடத்தின் பெயர். தெரிவரிய அவைராக்கியம் அனைசுவரியம் (தத்து.பிர.80).

அழக்கடம் பெ. சுடுகாடு. வான் அழக்கடக் கொழும் புகை (கச்சி. காஞ்சி. கழு.61).

அழக்கு1 பெ. எண்ணெய் தானியம் முதலியவற்றை அளக்கும் முகத்தலளவைக்கருவி, ஆழாக்கு. (தைலவ. 84/செ. ப. அக.)

அழக்கு' பெ. அழுக்கு, மாசு. (வட்.வ.)

அழக்குடம் பெ. பழந்தமிழகத்தில் பிணங்களை வைத் துப் புதைக்கும் மண்தாழி. அழக்குடம் சாடி தூதை பானை எனவரும் (தொல். எழுத். 355 இளம்.).

அழக்கொடி பெ. பேய்ப்பெண். அழக்கொடி யட் டான் அமர் பெருங்கோயில் (திருவாய். 2,10,9).

அழகங்காட்டு-தல் 5 வி. எள்ளல் குறிப்புடன் அழகு காட்டுதல். (திருநெல்.வ.)

46

அழகன்

அழகச்சு பெ.

111, 50)

முற்கால நாணயவகை. (திருவாங் கல்.

அழகப்பன் காளை பெ. பெருமாள் மாடு. (திருநெல்.வ.)

அழகம்1 பெ. ஒருவரைப் போல் நடித்து ஏளனஞ் செய் தல். (செ. சொ. பேரக.)

அழகம்' (அலகம்', அளகம்) பெ.

மகளிர் கூந்தல்.

கழகத்தியலும் கவற்றின் நிலையும் அழகத்திருநுத லாள் ஆய்ந்து (புற. வெண். 358).

அழகர்' பெ. 1.

எனப்படும்

திருமாலிருஞ்சோலை அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் திருமால். இலங்கை வரை மாற்றலரைச் செற்றாய் அழகர் கருமாணிக்கமே (அழகர் அந். 2). சோலை மலை அழகர் தோண் மாலை காமுறும் (பாப்பா. 26). தெள்ளுதமிழ் அழகர் சீபதி (அழ. கிள். தூது காப்பு). 2. முக்கூடலில் உள்ள திருமால் பெயர். மாமேவு முக்கூடல் மால் அழகர் (முக்கூடற். கடவுள். 3).

அழகர்' பெ. வெள்ளெருக்கு. (வைத். விரி. அக. ப. 24)

.

அழகர்கலம்பகம் பெ. வேம்பத்தூர்ப் புலவர் ஒருவரால் அழகர் மீது பாடப்பெற்ற கலம்பக நூல். (நூ.பெ.)

அழகர் படிக்கட்டளைகள் பெ. அடியார்கள் ஏற்படுத்திய அழகர் கோயிலுக்குரிய பூசைக்கிரமங்கள். அழகர்படிக் கட்டளைகள் (முக்கூடற்.28).

அழகர்பிள்ளைத்தமிழ் பெ. வேம்பத்தூர்ப் புலவர் ஒருவ ரால் அழகர்மீது பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல். (நூ. பெ.)

அழகர்மலை பெ திருமாலிருஞ்சோலை மலை. இடைக் கிடந்த காட்டு நெறியையுங் கழிந்து திருமால் குன்றத்துச் செல்லக் கடவீராயின் திருமால் குன்றம் அழகர் (திரு) மலை (சிலப். 11, 91 அடியார்க்.).

...

அழகரந்தாதி பெ. பிள்ளைப் பெருமாள் ஐயங்காரால் அழகர் மீது பாடப்பெற்ற அந்தாதித் தொடையோடு கூடிய நூல். சோலைமலை...அழகரந்தாதி நடாத் தத் தலைக்கொள்வனே (அழகர் அந். காப்பு).

அழகவேதம் பெ. அதிவிடயம். (வைத். விரி. அக.ப. 24) அழகன் பெ. 1. அழகுடையவன். அவ்வார்த்தை தான் கேட்டு ஆணழகன் ஏது சொல்வார் (பஞ்ச. ப. 26). அரண்மனைக்குள்ளாக ஆணழகர் போய் நுழைந்து (காத்தவரா.ப.88). 2. (அழகுடைய) சிவ பெருமான். அழகனென்றெழுவார் அணியாவார்