உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுகுசர்ப்பம்

அழுகுசர்ப்பம் பெ. நக்கி நஞ்சூட்டும் பாம்பு. (வின்.)

அழுகுணி1 பெ.

(எப்போதும் எதற்கும்) அழுகிற

பண்புள்ளவன்.

(நாட். வ.)

அழுகுணி' பெ. சொறி சிரங்கு வகை. (செ. ப. அக.)

அழுகுணிச்சித்தர் பெ. அழும் தன்மையுடைய எளிய தத்துவப்பாடல்களைப் பாடிய சித்தர்.

ஞானக்கோவை)

(பதினெண்சித்தர்

அழுகுபுண்குட்டம் பெ. உடல் குறைந்து அழுகும் தொழு நோய், குட்டநோய். நோய் அழுகுபுண்குட்டர் (கடம்ப. பு. 621).

அழுகுமூலம் பெ. மூலநோய் வகை.

அழுகு மூலத் தோடு அழிவுறும் கன்ம நோயாளர் (முன்.).

...

அழுகை (அழை1) பெ. 1. (துன்ப உணர்ச்சியால்) கண்ணீர் வடிக்கை. எஃகுறு முள்ளின் எய்தெற இழுக்கிய கானவர் அழுகை (மலைபடு. 301). அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப (பரிபா. 14, 12). தொழு கையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் (திருவாச. 20,4). அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கண னார் அருள்புரிந்தார் (பெரியபு. 28, 68). அழுகைக் கண்ணீர் போல உவகைக் கண்ணீர் வீழ்தலும் உண்டு (தொல். பொ. 253 பேரா.). கண்ணகிக்கு அழுகைக் கண்ணீர் மாதவிக்கு உவகைக் கண்ணீர் (சிலப். 5,237 அரும்.). 2. எட்டுவகை மெய்ப்பாடுகளுள் ஒன்றாகிய அவலம். இளிவே இழவே அசைவே வறுமையென விளிவில் கொள்கை அழுகை நான்கே (தொல். பொ. 249 இளம்.). மெய்ப்பாடு எட்டு வகைப்படும் அவை நகை அழுகை இளிவரல் மருட்கை... (இறை. அக. 56 உரை).

அழுகைமாது பெ. கவிழ்தும்பை. (மரஇன. தொ.) அழுகைவாடிமூலி பெ. அழுகண்ணிப்பூடு. (முன்.)

அழுங்கல்' பெ. 1. வருத்தம். யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே (குறுந். 140). கண்ணுடைச் சிறுகோல் பற்றிக் கதம் பெரிதுடையள் யாய் அழுங்கலோ இலளே (நற். 150, 10-11). அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்கொலாம் இவன் (கம்பரா. 6, 15. 112). யாய் வரவு காணாமல் காய் துயரம் கொண்டு அழுங்கல் கண்டு (திருவால. பு. 58,10).

159

அழுங்கு1-தல்

பேதையார்வயின் அக்கருக்குழி அழுங்கல் (ஞானா. 26, 24). அழுங்கல் இல் பரதமாக்கள் (குசே. 211). 2. இரக்கம். பெருங்களிறிழந்த பைதற்பாகன் அது சேர்ந்தல்கிய அழுங்கல் ஆலை வெளில்பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு (புறநா. 220, 2-4). அழுங்கல் எய்திய ஆருயிர்ப் பாங்கற்கு (திருக்கோ.29). முழங்கு கடல்நெற்றி முளைத்தெழுந்த சுடரேபோல் அழுங் கல் வினை அலற நிமிர்ந்து (சீவக. 3093). அழுங்கல் இல் சிந்தையீர் (கம்பரா. 1, 10, 126). 3.நோய். மடங்கல் நீழல் மடி அஞர் அழுங்கல் நோய் (திவா. 1662). 4. கேடு. இழிவு நந்தல் இறுதல் .. அழுங்கல் கேடே (முன்.1735).

...

...

அழுங்கல்' பெ. அச்சம். அதிர்ப்பு கம்பலை வெருவு அஞர் அழுங்கல் (முன். 1678).

அழுங்கல்' பெ. சோம்பல். ஆஞ்சி அழுங்கல் அலை சல் மாழ்கல் சோம்பலாகும் (முன். 1675).

...

அழுங்கல்' பெ. 1.ஆரவாரம், முழக்கம். நோக்கும் இவ் அழுங்கல் ஊரே (அகநா. 180,15). ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் (நற். 90, 1). இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் நன்பல நன்பல (பரிபா. 12, 100-101). அழுங்கல் நன்னகர் ஆவணந்தோறும் (பெருங்.3,22,188). அழுங்கல் முன்புள்ள ஆரவார முமாம் (புறநா.220, 3 ப. உரை). 2. யாழின் நரம் போசை. அழுங்கல் சிலைத்தல் துவைத்தல் யாழ் நரம்போசை (பிங். 1441).

...

அழுங்கள்ளன் (அழுகள்ளன்) பெ. (அழுவது போலப்) பாசாங்கு செய்வோன். அழுங்கள்ளர் தொழுங் கள்ளர் ஆசாரக்கள்ளர் இவர் ஐவர்தாமே (தண்

டலை. சத. 80).

...

அழுங்காமை (அழுக்காமை, அழுக்கு, அழுங்கு') பெ. கடல் ஆமை வகை. (வின்.)

அழுங்காமை"

(அழுங்கும், அளுங்கு) பெ. எறும்பு தின்னும் உயிரி. (முன்.)

அழுங்கு1-தல் 5 வி. 1. வருந்துதல், மண்முழுது அழுங்கச் சொல்லினும் செல்லும் (புறநா. 332,8). கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகிர்ந்துண்ணான் (கலித். 149, 4).விண்ணுற்றியங்கும் வெய்யோன் அழுங்க (பெருங். 2, 6, 24. அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா (தொண்டரடி. திருப்பள்ளி. 2). உய்யக் கொள்ளாய் அழுங்கு