உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுந்து - தல்

(பே.வ.). 3. அனுபவப்

சுரம் அழுந்திவிட்டது படுதல். உலக விடயங்களில் அழுந்தினவன் (முன்.)

அழுந்து-தல் 5 வி. வருந்துதல். எழுமையும் தான் புக்கழுந்தும் அளறு (குறள். 835). அழுந்திய உயிர்க் கெலாம் அருட்கொம்பாயினான் (கம்பரா. 1,13,23).

அழுந்து-தல் 5 வி. அடங்குதல். புறவும் நிறைநீர்ப் புள்ளும் காவுறை பறவையும் நா

(LDGCLD. 7, 60-61).

அழுந்து 5 பெ. நீராழம். அழுந்து

...

உள் அழுந்தி

படவிடரகத்து

இயம்பும் அருவி (நற். 228, 8). அழுந்தும் குண் டும் கயமும் ஆழம் (திவா. 933). அழுந்துபட்ட கம்பாநதி ஆடி (கச்சி. காஞ்சி. இருபத். 196).

அழுந்து' பெ. கெடுதி. அழுந்துபட்டிடாத சாந்தி செயற்கரு விரதம் (குசே. 52).

ராயணம்

...

அழுந்து பெ. வெற்றிலை நடும் வரப்பு. (வின்.)

அழுந்துபடு-தல் 6 69. தொன்று தொட்டு வருதல். அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் (மதுரைக். 342 நெடுங்காலம் அடிப்பட்டிருந்த பெரிய சாதியின் குடியிருப்பினையும்-நச்.).

பாண்

அழுந்தூர் (அழுந்தை) பெ. சோழநாட்டில் உள்ள ஊர். வேந்தர் சாய மொய்வலி அறுத்தஞான்றைத் தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் (அகநா. 246, 14). செங்கண்மால் எங்கள் அழுந்தூரத்தன் (நூற்றெட். அந். 10)

அழுந்தை (அழுந்தூர்) பெ. சோழநாட்டில் உள்ள ஊர். கோசர்க் கொன்று முரண்போகிய கடுந் தேர்த் திதியன் அழுந்தை (அகநா. 196, 10-11). அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மாமடம் (தேவா. 2,20, 1). தென் அழுந்தையில் மன்னி நின்ற கண்ணனை (பெரியதி. 7, 6,1).

...

அழுநீர் பெ. கண்ணீர். அழுநீர் உகக் கண்பொருந் தேனே (திருவரங்கலம். 72).

அழுப்பு பெ. சோறு. (சதுரக)

அழுப்புகம் பெ. தேவலோகம். (யாழ். அக.)

அழும்பில் பெ. சேரநாட்டு ஊர்.

மானவிறல் வேள்

அழும்பில் (மதுரைக். 345).

அழும்பில் வேள்

உரைப்ப (சிலப். 25, 177).

4

62

அழுவம்'

நண்பனாகிய

அழும்பில்வேளோடு ... ஏவி

அழும்பில்வேள் பெ. செங்குட்டுவனுக்கு

குறுநில மன்னன்.

(சிலப். 28,205).

அழும்பு 1-தல் 5 வி. செறியக் கலத்தல். அமர அழும் பத் துழாவி என் ஆவி அமரத் தழுவிற்று (திருவாய்.

1, 7, 9).

அழும்பு2 பெ. தீயவழியில் விடாப்பிடியாய் நிற்கை. அவனுக்கு என்ன அழும்பு (பே.வ.).

அழுமூஞ்சி பெ. பொலிவற்ற முகம் உள்ளவன். இந்த அழுமூஞ்சிக்கு முன்னேற்றமே யில்லை (முன்.).

அழுவம்' பெ. 1. ஆழம்.

குடமலைப்பிறந்த தண் பெருங்காவிரி கடன்மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528). திரைகளை மறிய வீசிச் சிறந்ததோர் அழுவ முந்நீர் (சூளா. 1430). பாற் கடல் அழுவத்து அன்று எழுவாள் (கம்பரா. 2, 6, 24). அழுவநீர்ப் புணரி அலங்கொளி நித்திலக் குவையும் (கச்சி. காஞ்சி. இருபத். 71). உலைவில் நீர் அழுவத்து அலை கொழித்து ... மொத்துண்டு (பாப்பா. 47, 1). 2.குழி. குன்று இடம் பட்ட ஆரிடர் அழுவத்து (மலைபடு. 368). சுடர்க்கனல் சுழிபடர் அழுவத்துள் (கம்பரா. 6, 3, 87). 3. கடல். ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப்பொறாத (நற்.349, 6-8). உரவுநீர் அழுவத்து ஓடு கலம் (பெரும்பாண்.350). வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க (கம்பரா. 6, 1, 4). அரியே குரவை அழுவம் தெண்டிரை கார்கோள் அனைத்தும் கடலின் பெயரே (பிங். 584). 4. (நீர் நிலம் போர்க்களம் இருள் போன்றவற்றின்) பரப்பு. பெரு நீர் அழுவத்து எந்தை தந்த கொழுமீன் உணங்கல் (அகநா. 20,1). தென்கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம் (கலித். 221, 2). ஆரமர் அழுவத்து (சிலப். 5,84).ஊட்டிருள் அழுவத்து (மணிமே.7,87). போர்வலம் வாய்த்த பொங்கமர் அழுவத்து (பெருங். 3,20,86). திசையின் அழுவம் எங்கணும் அவு ணர்க ளோடுதல் அடைந்து (செ. பாகவத. 8, 4, 13). 5. நடுமையம். ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று (பட்டினத்துப். திருவிடை. மும். 19, 18).

...

G

அழுவம்' பெ. 1. கடத்தற்கரிய காடு, பாலை. அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனந்தலை அழுவம் (அகநா. 79, 8-9). வேய்பயில் அழுவத்து (நற்.46). வேய் பயில் அழுவம் முன்னியோரே (குறுந். 7). அத்தமார் அழுவம் நத்துறந்து அருளார் சென்று