உள்ளடக்கத்துக்குச் செல்

அமுதவல்லி/தவம்

விக்கிமூலம் இலிருந்து


8. தவம்


பட்டுக்கோட்டை - அறந்தாங்கி நெடுஞ்சாலை!"

“ஃபிலிப்ஸ் அசுரகதியில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. இன்னமும், வேகம் என்றால், அப்படி யொரு வேகம். ஆனால். ஒரு விசேஷம்: வேகத்திலும் ஒரு நிதானம் எச்சரிக்கைப் பண்போடு பிடிகொடுக்காமல் இல்லைதான்.

கீரமங்கலம்!--பராக்!

சோமையா இப்போது நுட்பமான எச்சரிக்கை பெற்றான். பிறந்து:வளர்ந்த ஊருக்கு வழிவிட்ட. வழிகாட்டிய கப்பிப் பாதையில் ஹாண்டில் பாரை மடக்கினான். பெடல் இயக்கமும் சீரடைந்தது. புதிய தியேட்டரை ஏறிட்டுப் பார்த்தபோது, அவ னுக்குச் சுரீர்” என்ற ஒர் உணர்வு சுட்டது. அன்றைக்கு மயிரிழை தப்பியிருந்தால், அந்தக் குடி கார லாரி டிரைவர் சட்டினி ஆக்கியிருப்பானே அவனை? யார் செய்த புண்ணியமோ, சோமையாவும் பாவத்தைச் சுமக்க நேர்ந்து விடவில்லை. அவன் தப்பினான்; தில்லை நாயகியின் மாங்கல்யமும் தப்பியது. பாவம், தில்லை! இமைகளின் கீழ் வரம்புகளிலே மெல்ல மெல்ல ஈரம் படர்வதை அவன் உணராமல் இல்லை தான்,

எதிரும் புதிருமாகக் கடைத்தெரு, பூவை எஸ். ஆறுமுகம் 51 __________________________________

    அந்தி மயக்கத்தில் கும்பல் கும்பலாகக் கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் புதிய அரசியல் கால் மாடு, தலை மாடு தெரியாமல் அகப்பட்டு விழித்தது.
   ஆனால் சோமையா விழிக்கவில்லை. பதமாக இறங்கினான். கதர்ச்சட்டையில் படிந்துவிட்டிருந்த புழுதியைத் தட்டி விட்டான். கழுத்து வேர்வையை வழித்தான். வண்டியைத் தள்ளியபடி நடந்தான்.
  "வாங்கங்கறேன் , தம்பி!"
  சின்னப் பிள்ளையாகி, அடிக் கரும்பைக் கடித்துச் சுவைத்துக் கொண்டிருந்த சேர்வை இப்போது கூலி கொடுக்கப் போகிறாரா அல்லது கூலி கேட்கப் போகிறாரா?
 "காளி காபி சரக்குப் பெட்டியைத் திறந்தான் லைன் மேன் சோமையா. பெட்டி தள்ளாட்டம் போட்டதும் தான், சைக்கிகளுக்கு ஸ்டாண்ட்” போடாதது விளங்கிற்று. குறுக்கு மறித்து நடந்து சென்ற அழகி ஒருத்தியும் வாண்டுப் பயலும் அவன் சிந்தையைக் கலக்கி விட்டிருக்கலாம்- பார்வதி!பாபு:- கண்கள் இரண்டையும் மூடி, மெய்ம்மறந்த நிலையில் அவன் தன் னுள் தனக்குத் தானே- தன்னில் தானே முணமுணத்துக் கொண்டான். மூடியிருந்த கண்கள் மூடி கழன்று திறந்த நேரத்தில் அவன் நெஞ்சம், தில்லை நாயகி.!. பாபு என்று உரு கியது; ஏக்கமும் தவிப்பும் அவனை ஆட்கொண்டிருக்க வேண்டும்!
   "தம்பி!...”
   சோமையா சுயப்பிரஞ்ஞை கொண்டான். கடமையில், காரியத்தில் என்றுமே அவன் விழிப் 152                  அமுத வல்வி

__________________________________

போடு செயல்படுபவன் தான். என் றாலும், அவனும் சராசரியான ஒரு மானுடப் பிண்டம் தானே? இளமையின் மிடுக்கு கம்பீரமாகத் துவங்க, வியாபாரப் பண்பின் பான் மை நிறக்க “ஐயாவுக்கு வாடிக் கைப்படியே இந்த வாட்டியும் சரக்கு போட்டுப்பிடுறேன்.” என்று தாக்கீது கொடுத்த வண்ணம், ஒரு கிலோ ஏ. காப்பி, இரண்டு கிலோ ரோ பஸ்டா, அரை கிலோ ப்யூர், கால் கிலோ சிக் கிரி, ஒரு பண்டல் தேயிலைத் துரள் என்று சரக்குப் பொட்டணங்களை கல்லாப் பெட்டியின் மேல் தட்டில் அடுக்கலானான். நிலுவைச் சிட்டையில் 'பார்ட்டி"யின் கையெழுத்தை வாங்கிக்கொண்டான். விளக்கெண்ணெய் ஊற்றிக் கொடுத் தகையோடு கையைத் துடைத்து விட்டு, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக எண்ணிச் சரிபார்த்து நீட்டிய போன வாரத்து நிலுவைப் பாக்கி ரூபாய் முப்பத்தெட்டு, பைசா நாற்பதையும் வாங்கி தன் பங்கிற்கும் கவனமாக எண்ணிச் சரிபார்த்த பின் தன்னுடைய பர்சு"க்குள் திணித்துக் கொண்டான் சோமையா. விடைபெற். றான். புதிய வாடிக்கை இந்தச் சனிக்கிழமையும் குதிரவில்லை. அடுத்த வாரமும் முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் முதலாளிச் செட்டி யாருக்கு அவன் பேரில் விழுந்திருக்கின்ற நல்ல அபிப் பிராயம் மேலும் வல்லமை பெற வாய்க்கும்!-- உண்மைதான்!

  ஆவணத் தாங்கோட்டைச் சாலை வந்தது.
  வாரத்துக்கு வாரம் புதிது புதிதாகக் கடை கண்ணிகள் மாயாஜாலம் போல முளைத் துவிடுகின்றவே! அண்டையில் டூரிங் சினிமா வேறு ஆரம்பமாகி விட்டதல்லவா? பூவை எஸ். ஆறுமுகம்          153

__________________________________

சோமையா பட்டுக் கோட்டையில் சாயா அருந்தியவன் இருபத்தைந்து தொலைகல் மிதித்து வந் திருக்கிறான். அடுத்த டீயை போஸ் அடித்துக் கொடுத்துத் தான் சாப்பிடுகிறான். விதிமுறையின் ஒழுங்கில் அவனுக்கு ஒரு நம்பிக்கை; ஓர் ஈடுபாடு,

அவன் இனி ஸேல் ஸ்மேன் சோமையா.

சில்லறை வியாபாரம் சில்லறைக் காசுகளைக் கூட்டியது.

மின் விளக்குகள் எரியத் தலைப்பட்டன.

மின்னல் பாய்ந்த மாதிரி அரை வினாடி மெய் சிலிர்த்து நின்றான் அவன். மண் வாசனையில், கூப் பிடு தொலைவிலிருந்த அவனது பிறந்த மண்ணின் நெடியை அவனால் அப்பொழுதுதான் உணர முடிந்தது போலும்!

வேலு பூ கொடுத்தான். இரண்டு முழம் செவந்தி: கொஞ்சம் கன காம்பரம்; துளி கதம்பம். இருபத் தைந்து காசுக்குக் கிராக்கி என்று சொல்லலாமா?

பூப்பொட்டலத்தை வாங்கினான் சோமையா. பூக்கள் மனத்தன. நறுமணத்தின் பின் புலத்திலே தில்லை நாயகியின் அன்பு முகம் ஆசை முகமாகி நெடி பரப்பியது. தில்லை :- அவன் தன்னை மறந்த லயத்தில் சொக்கிப்போனான். தில்லை நாயகி அழகு காட்டினாள்- நெஞ்சுக் குழியில் அன்பு கூட்டி னாள்- மன வீணையில். ‘என்னோட தலையெழுத்தின் ஐந்தொகை கணக்கிலே எனக்கிண்ணு ஏதோ

 அ-10 154                அமுதவல்லி

__________________________________

கொஞ்சம் புண்ணியமும் வரவு ஆகியிருக்கவேணும். அதனாலே தான் , எனக்கு அன்பு காட்ட இன்னொரு மகாஜி கிடைத்தாள் என்னோட பாபுவுக்கு இன்னொரு அம்மா கிடைச்சிருக்கா!... நன்றிய றிவு கண்களில் பொடித்துக் கசிந்தது.

இப்போது, அவன் அந்தப் பூப்பொட்டணத்தை மூக்கின் முனையில் வைத்து நுகரலானான் . அவனுக்கு மேனி நடுங்கத் தலைப்பட்டது; புல்லரிப்பும் கிளர்ந்தெழுந்தது. ஆமாம்; பார்வதி, பூப்பொட்டலத்தைக் கையேந்திப் பெற்றுக் கொண்டவுடன் இவ்வாறு தான் மலர்களின் வாசனையை அனுபவிப்பாள், பார்வதி என்றால் பார்வதி தான்!. பார்வதி! என் கன வுக்கிளியே! என்னோட பிரியமான அன்பரசியே! - உயிர் விம்மியது; பொருமியது: செருமியது. என் பார்வதி இப்படித் திடுதிப்பென்று தெய்வமாக ஆவதற்கென்று தான் அப்படிப் பெண் தெய்வமாகி எங்களது தாம் பத்யத்தை வழி நடத்திக் காட்டி னாளே?’.

   வாழ்க்கை ஒரு விடி காலைக் கன வுதானோ?
   பார்வதி அவன் வரை ஒரு கனவுக் கிளியாகத் தான் அழகு காட்டி விளையாடினாள். முறைமைப் பெண் ஆயிற்றே? கனவுக்கிளி ஆசைக்கிளியாக்கிக் கொள்ள அனுசரணை புரிந்த அதே விதி, அந்த ஆசைக்கிளியை மறுபடி அவனுடைய கனவுக் கிளியாக உருமாற்றித் தொலைக்க வேண்டு மா?

உள்ளம் வீரிடுகிறது.

விதிக்கு அழத் தெரியாதோ?

மரணப்படுக்கை, பூவை எஸ். ஆறுமுகம் 155 __________________________________

அவல ஓலங்கள்.

சூன்யத்தில் ஊசலாடும் பாசக்கயிறு:

 ‘பார்வதி... ஐயோ, பார்வதி!’ என்று தலையில் அடித்துக் கொண்டான் சோமையா.
 “அம்மா .. அம்மா!” என்று பாபு மழலை அழுகையால் வெடித்தான்.
 “அத்தான் விதரனை புரிஞ்ச நீங்களே இப்படி அழுதால், அப்பாலே நம்ப பாபு-என் பாபு-உங்க பாபு பாவம், என்ன செய்வான்? அத்தான் நம்ப பாபுவுக்காக வாச்சும்- அவனை வளர்த்து ஆளாக்கணும் என்கிற பாசக் கடமையை உத்தேசிச்சாவது நீங்க என்னை மாதிரி நல்லவள் ஒருத்தியை ரெண்டாந்தாரம் பண்ணிக்கிட்டுத்தான் ஆகணும் கட்டா யம்!"
  பாபு கொடுத்து வைத்தவன். அலனுக்கு அம்மா வின் இறுதி முத்தமாவது கிடைத்தது.
  பார்வதி!...”
  பார்வதியின் ஸ்தானத்தில் தில்லை நாயகி அமர்ந்தாள்.
  பார்வதி கடைசியகக் குறித்த மாதிரி, சோமையா தன் அருமை மகன் பாபுவுக்காக வேண்டித் தான் தில்லை நாயகியைப் பெண் யாரக் கத் துணிந்தான். பூவை மாநகரிலிருந்து பேராவூரணிக் குப் புறப்பட்ட்.ான். அவளைப் பெண் பார்த்தான். அந்தப் பார்வையில் அனுதாபமும் அன்பும் ஒன்றை யொன்று போட்டியிடக் கண்டான். அழுகைக்கு ஊடே சற்றே மலர்ச்சி எட்டிப் பார்க்க முயன்றது. 156.             அமுத வல்லி

“தில்லை நாயகி. நான் உன்னை இரண்டாந்தாரமாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வந்தது எனக்காக அல்ல என் மகன் பாபுவுக்காக-என் பார்வதியின் பாபுவுக்காகவே தான்! உன்னோட முதல் பொறுப்பு என்ன தெரியுமோ முதலிலே என் பாபு வுக்கு நீ அம்மா! அடுத்தபடி தான் நீ எனக்குப் பெண் சாதி சம்மதமா? சொல்’ என்று சத்திய தருமத்தைப் பேச விட்டான் அவன்.

‘நான் முகமறியாத என் உடன் பிறவாத அக்காள் பேரிலே ஆணை வச்சுச் சொல்றேன்; அப் படியே நடப்பேன்!”

உத்தாரம் மொழிந்தவள் அல்லவா தில்லை நாயகி? ஏழை வீட்டுத் திருமகள்.

பாபு என்றால் அவளுக்குக்கொள்ளை கொள்ளை யான பாசம் ஆயிற்றே!

அதற்குள் ஒரு வருஷம்-பன்னிரண்டு மாதங்களா பூஞ்சிட்டாகப் பறந்தோடி விட்டிருக்கின்றன.

“பார்வதி;. பாபு 1. தில்லை நாயகி 1. சுடுநீர் மணிகள் சுட்டன; ஒலித்தன.

அண்ணாச்சி!’

போஸ் ஐந்தரைப் பெட்டி முறுக்கு பாக்கெட் ஒன்றினை அவனிடம் சமர்ப்பித்தாள். மெய் சிலிர்த்தது. பனிவாடை கூடுதல் தான். மாதச் சம்பளம் போக. வெளியூர் வியாபாரத்துக்குச் செல்லும்போது கிடைக்கின்றபடி, ரூபாய் மூன்றில் படிக்குப் பாதி காலி-ஆகட்டுமே!

வரும் விதி இராத் தங்காது என் பார்கள். பூவை எஸ். ஆறுமுகம் 157

ஆனால் வந்த முன் நிலவும் இராத் தங்காதது தானே ?

டைனமோ தயார்.

ஃபிலிப்ஸ் காரினும் கடிது சென்றது. (கார்மேகம் மட்டிலும் அல்லவே)

சோமையா சுருள் அலை படிந்த முடி இழைகளை ஒரு கையால் நீவி ஒதுக்கி விடுவதும், மறு கையால் சட்டைப் பையில் துருத்திக் கொண்டிருந்த மணிபர் ஸை"த் தடவிப் பார்ப்பதுமான ஒரு சித்து விளையாட்டில் ஒன்றிப் போயிருந்தான். வேர்வைக் கென்ன கேடு, பாபுவைப் பார்க்க வேண்டாமா? தில்லை நாயகி பாவம், வழிமேல் விழி வைத்து என்பார்களே, அப்படிக் காத்திருப்பாளே,... தவம் இருப்பாளே?...தவம் எனில். அவ்விதம் ஒரு தவம்-ஆன்ம நேயத்தவம்; ஆத்ம சமர்ப்பணத் தவம்.

அன்பு ஒரு தவம் இல்லையா?

பாசம்...?

அதுவும் தான்! அப்பால், நேசம்...?

நேசமும் ஒரு தவம் தான் !

அன்பு, பாசம், நேசம் என்னும் படியான இம்மூன்று புள்ளிகளும் அமைகிற அல்லது. அமைத்துக் கொடுக்கிற முக்கோணம் வெறும் முக்கோணமல்ல-- சிவப்பு முக்கோணம் தான் வாழ்க்கையின் அல்லது வாழ்க்கைக்கான தோற்றமா? தத்துவமா? நியதீயா?

காலம் இறந்த காலத்துக்கும் நடப்புக் காலத்துக்குமாகக் கண்ணாமூச்சி ஆட இருளும் ஒளியும் காலத்துக்கும் தூரத்துக்குமாக கண் பொத்தி விளையாட, இவ்விரு விளையாட்டுகளுக்கும் ஊடாக ஒரு விளையாட்டுப் பிள்ளையாகி சைக்கிளை அழுத்தி மிதித்துக் கொண்டேயிருந்தான் அவன் -சோமையா.

அறந்தாங்கி எல்லை ஆரம்பம்.

அந்தக் கட்டடம்; அறிஞர் அண்ணா அரசாங்க மருத்துவமனை,

“பார்வதி!”

நிதானம் தடம் புரண்டு, தடம் கண்டது.

அரிமளத்தில் பிறந்த புண்ணியவதி பார்வதி அவளுக்கு இங்கே சாவு எழுதிப் போட்டிருக்கிறது. ஒரு நாளா, இரண்டு நாளா? வள்ளிசாக மூன்று முழு மாசங்கள் விதியோடும் வினையோடும் போராடித் தோற்றவள் அவள், பாவி நான்!”

ஒரு தினம்:

தில்லை நாயகியை மணம் முடித்துக்கொண்ட புதிதில் அவளை இங்கே வைத்தியத்துக்காக அழைத்து வந்திருந்தான் அவன்.

கண்ணீர் கதை சொன்னது.

கண்ணீர் கதை கேட்டது. அக்கா...அக்கா !” ப்பூ!...முன் நிலவின் ஜம்பம் இவ்வளவுதானா?

அது; எக்ஸெல் தியேட்டர்!" பூவை எஸ். ஆறுமுகம் 159 நாளை ஞாயிற்றுக்கிழமை. லீவு நாள். தில்லை நாயகியை அவசியம் அழைத்துவந்து படம் காட்டவேண்டும்!- பாபு இல்லா மலா? ஹாப் பாபு!.படு சுட்டிய டா, பாபுப்பயலே!...

அவர்கள் படம் பார்த்து ஐந்தாறு மாதங்கள் இருக்க வேண்டும். என்ன செய்யட்டும்?...வாழ்க்கை ஒரு சோதிப்பே தானோ?

அந்தச் சந்துக்குப் பெயர் தான், கள்ளர் சந்து, இந்தக் கள்ளர்கள் மறவர் இனம்,

சோமையா நிதானம் ஆனான்.

இங்கே தான் அவன் வீடு: வாடகை வீடு.

பெண்டாட்டியையும் பிள்ளையையும் பார்த்து விட்டு அகம்படியர் தெருவில் பாய்ந்து சந்தைப் பேட்டைக் கடைக்குப் பறந்து விட்டால் என்ன ?

ஊஹும் !

கூடாது!

பணம் இருக்கிறது.

சந்து முனையில் சிவனே என்று கால் கடுக்க நின்று ஒற்றைக் கால் தவம் இயற்றும் அந்த வீதி விளக்கின் விதி அப்போது இருளடைந்திருந்தது.

என்றாலும், ஒரு நிதானத்துடன் பெடலை அழுத்தி மிதித்தான்-நேர் வசத்தில்.

‘அடி, என்னடி. ராக்கம்மா!’ என்று பாட்டைக் கொலை செய்த பாவத்தைச் சுமந்து கொண்டு ஆனால் உடலைச் சுமக்க வகை புரியாதவன் போன்று 160 அமுதவல்லி

யாரோ ஒருவன் தள்ளாடித் தள்ளாடி எதிரே அப்படியும் இப்படியுமாக உப்புக் கோடு மறித்தான்!

சோமையாவால் சமாளிக்க முடி யாமல் போய் விட்டது. ஆகவே ஒரு பாவத்தைத் தவிர்த்துக் கொண்ட மனிதாபிமானத்தோடு அவன் புழுதியில் இருட்டில் நிலை புரண்டு விழுந்தான்; இடுப்பில் வசமான அடி, வலியைச் சட்டை செய்கிற விவேகமான வேளையா அது? சட்டையை உதறிவிட்டு எழுந் தான்; சைக்கிளைப் பரிவுடன் தூக்கினான்.

அப்போது:

“சோமையா!’ என்ற விளிப்பு இட றியது. விளித்தவர் அவனுடைய ஊர்ப்பேர் வழிலேவா தேவிக் காரர். பிராமிஸ்ரி நோட்டின் பேரில் தூங்கும் கடனான ரூபாய் இரு நூற்றி ஐம்பதைப் பற்றிச் சற்றே கடுமையான முறையில் நினைவூட்டினார்.

சோமையா ரோசக் காரன். ஒலித்த தொனியின் கடுமையை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘அண்ணாச்சி, அளந்து பேசுங்க. பார்வதியோட வைத்தியச் செலவுக்காக ஆபத்துக்கு உதவின உங்களை இனியும் நான் சோதிக்க மாட்டேன். தலையை அடகு வச்சானும் ஒரு வார கெடு விலே உங்க கடனை பைசா சுத்தமாய்த் தீர்த்துப்புடுறேன்:...’ என்று ரோசம் பொங்கச் சொல்லி விட்டுப் பறந்தான் அவன்.

'கானி காபி’ மணத்தது. அதற்குச் சிரிக்கவும் தெரிந்திருந்தது. விளம்பரப் பெட்டிப் பூவை எவ்வளவு அழகாக பிஸினஸ் சிரிப்புச் சிரிக்கிறாள்! பூவை எஸ். ஆறுமுகம் 161

செட்டியார் வெற்றிலைப் பெட்டியை லாகவமான சாதுர்யத்தோடு திறந்தவர் டபக் கென்று மூடிவிட்டு, சோமையா, வாப்பா!’ என்று முகமன் மொழிந்தார்.

“வளமையைக் காட்டிலும் இன்னிக்கு ஒரு அரை அவர் லேட்! எந்நேரம் ஆனாலும் சரி, கடைக்கு வந்து கணக்கு வழக்கைச் சொல்லி, பணம் காசை ஒப்படைக்காமல் நீ வீட்டுக்குப் போற பழக்கம் தான் உனக்கு எப்பவும் இருக்காதே? அதிலே நீ ஒருத்தன் தான் ரொம் பக் கண்டிப்பு!” என்றார்.

‘நேரே கடைக்குத் தானுங்க வர் றேன். ஐயா!’

ரைட்!... வந்து. லேவாதேவி சூனா- பானா உன்னைத் தேடி வந்தாக!” -

‘அப்படீங்களா? வழியிலேயே கண்டு கிட்டேன்; தாக்கலும் சொல்லிப்பிட்டேனுங்க!”

செட்டியார் நீளமாக மூச்சு விடலானார் . அது நெடுமூச்சு, சரி, சரி. நம்ப பொழைப்பைப் பார்ப்போம்! கையொப்பம் பெற்று கொடுக்கப் பட்ட சரக்குகளின் விவரம் அடங்கிய நோட்டை எடுத்துப் புரட்டினார் அவர்.

விற்பனை - வாபஸ் விவரங்களை தொண்டையை உச்சப்படுத்திச் சொன்னான் சோமையா. இன்னிக்கு நடந்திருக்கிற வியாபாரத் தொகை நூற்றி எண்பதும் சொச்சத்தைக் கண்டு முதலாளி ஏகமாய்ச் சந்தோஷப் படுவாங்க. இந்தப் புது வருஷத்திலேயாச்சும் சம்பளம் உயர்த்துறாங்களான்னு பார்ப்போம்! 162 அமுத வல்லி

‘டோட்டல் ரூவா நூத்தி எண்பது, பைசா பதினைஞ்சு வருது சோமையா’

பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவவில்லையா இங்கே?

நல்ல காலம்: க்ரைண்டரின் குரல் வளையைப் பிடித்து விட்டான் எடுபிடி,

‘ கரெக்டுங்க, முதலாளி!’ என்று பெருமிதம் பொங்கிய வெற்றிச் சிரிப்பைச் சிந்தியவாறு, கண்களைத் தாழ்த்தி சட்டைப் பைக்குள் கையை நுழைத்தான் சோமையா.

மறுகணம்;

‘ஆ’ என்று வீரிட்டான் சோமையா.

ஐயோ, தேள் கொட்டி விட்டதா, என்ன? செட்டியார் விழித்தார்.

சோமையாவும் தான் விழிக்கிறான். வேர்வை ஆழப்புனலென ஓடுகிறது. கண்களைக் கட்டிக் காட்டில் விட்டமாதிரி இருக்கிறது தவிக்கிறான். விதி இருந்திருந்து தன்னோடுதான் கண்ணாமூச்சி ஆட வேண்டுமா? இனிமேலும்?-ஐயோ, ஆறுமுகப் பெருமானே! .

'சோமையா!’

கண்கள் பொடித்திட ஏறிட்டுப் பார்த்தான் சோமையா“ஐயா, இதோ நிமிஷத்திலே வர்றே னுங்க,” என்று சொல்லி டார்ச் லைட்"டை எடுத்துக்கொண்டு பறந்தான். பறந்தவன் திரும்பிப் பூவை எஸ். ஆறுமுகம் 163

பறந்தே வந்தான். வந்தவனின் கை கால்கள் வெட வெட"வென்று நடுங்கின.

செட்டியாரின் கறுத்த முகம் மேலும் கறுத்தால் எப்படி இருக்கும்?-பரிதாபம்! என்னப்பா நடந்திச்சு?'; என்று காட்டமாக விசாரித்தார்.

குடிமகன் கூத்தைச் செப்பினான் சோமையா. நேர் கொண்ட பார் வையைச் செலுத்தி, முதலாளி ஐயா, தப்பு என்னோடதுதானுங்க. நிலை தடுமாறி விழுந்திட்ட நான் பதட்டத்திலே அக்கம் பக்கத்திலே பார்க்கத் தவறி விட்டேன். அந்த நேரம் பார்த்து, சூனா பானா வேறு வந்து கடுசாப் பேசினார். எனக்குப் பொறி கலங்கிடுச்சி. டைனமோ பழுது பட்டுப் போனது கூடத் தெரியாது ஒடியாந்திருக்கேன் நான்!... உங்க கிட்டே வேலைக்கு வந்த இந்த ஆறு வருஷத்திலே நான் செஞ்ச முதல் தப்பு இதுதானுங்க! தயவுபண்ணி, என்னை நம்பி, இந்தத் தொகையை என் பேரிலே...’ என்று பம்மினான்!

முதலாளி சீறினார்

‘ஐயா, அந்தத் தொகையை பற் று எழுதிக்கிடுங்க. என் அதிர்ஷ்டம் தான் ஊர் அறிஞ்ச தியாச்சுங்களே, ஐயா! ஒண்ணும் யோசிக்காதீங்க. முதல் சம்சாரத்துக்காகவும் இப்போ ரெண்டாம் கல்யா ணத்துக்காகவும் ஏறியிருக்கக் கூடிய பற்றுவழி ரூபாய் ஆயிரத்து முன்னுாறுக்கு மாசாமாசம் இருபத்தஞ்சு மேனி பிடிச்சுக்கிடுங்க. இதுக்கும் வேணும்னா முப்பதாய் வேணும்னாலும் பிடிச்சுக் கிடுங்க, முதலாளி” என்று உயிர் துவள வேண்டினான் சோமையா. 164 அமுத வல்லி

செட்டியாருக்குத் தன்னுடைய ‘ட்ரேட் மார்க்’ நெடுமூச்சைக் கொட்டி அளப்பதைத் தவிர, வேறு மார்க்கம் ஏதும் பிடிபடவில்லை போலிருக்கிறது!

“வாங்க, அத்தான்!”

உயிரை உயிரால் வரவேற்பது போலவே வரவேற்றாள் தில்லை நாயகி. ஒளியில் மிதந்தாள், மஹாலஷ்மியாக!...

ஊம்’ என்று ஒப்பனைக்குத் தலையை உலுக்கிவிட்டு சாரை யாகப் படி, தாண்டி இரண்டாம் கட்டில் வந்து நின்றான் சோமையா. கால்கள் தரையில் பாவ ஒப்பவில்லை. துடித்தான்; துடியாய்த் துடித்தான். தரை மீன் துடிக்கும் பாருங்கள். அந்தப் பாங்கில்!

மனத்திற்கு மனம்தான் சாட்சி என்பார்கள்.

அந்த மனம் சாட்சி வைத்து-சாட்சி சொல்லிச்

சுட்டதோ அவனை? துவள் கிறானே சோமையா!பாவம் ! .

பாவமாவது, புண் ணியமாவது!...

அவன் பிழையோ அன்றி, விதியின் பிழையோ பிழை ஒன்று என்னவோ நடந்தது நடந்துவிட்டது. முதலாளிச் செட்டியாருக்குச் சேர வேண்டிய அவருடைய பணம் ரூபாய் நூற்று எண்பது, பைசா பதி னைந்தையும் சோமையா ஏமாந்துவிட்டான். அவன் ஏமாந்த தவற்றுக்காக செட்டியார் ஏமாற முடியுமா? ஏமாறுவாரா? மேற்படி தொகை சோமையாவின் கடன் சுமையோடு சுமையாக ஏறிவிட்டது. பூவை எஸ். ஆறுமுகம் 165

ஒரு தவறு நடந்தது போதாதா?

சோமையா தவித்தான். பட்ட சூடு இருதயத்தைத் தகித்தது. மனச்சான்றின் ரணம் ரத்தக் கண்ணீராக மாலை தொடுத்தது. தில்லை!... தில்லை! நெஞ்சின் பாரம் அற்ப சொற்ப மல்லவே? ஆகவே, மண்டை வலித்ததில் வியப்பு இல்லை தான். திருக்ஷ் டியைத் திசை திருப்பினான்.

அங்கே -!

பார்வதி புன்னகையும் புது நிலவுமாக அதோ, ‘தரிசனம் தந்து கொண்டிருக்கிறாள்!

படத்தைச் சுற்றிலும் புதிய பூ மாலை! அவன் அறிந்த கதை தான் இது!

தில்லை நாயகி புதிய பதவி ஏற்று இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த நாள் முதலாக, பார்வதி"க்கு நித்த நித்தம் மலர் மாலை இட்டு, தானும் கும்பிட்டு தன் பாபுவையும் கும்பிடச் செய்து வருகிறாள் தில்லை நாயகி:

சோமையாவின் ஆன்மா ஊசலாடியது. தில்லை : தி ல்லை!... அவன் தன்னுணர்வு கொண்டான்; முகத்தை டவலால் துடைத்தான்; புன்சிரிப்பை வரவழைத்துக் கொள்ளவும் தவறிவிடவில்லை. “தில்லை!” என்று கூப்பிட்டான்.

தூண்ணோடு தூணாக சிந்தனை வயப்பட்டு நின்ற தில்லை நாயகி ஓடி வந்தாள். குறுஞ் சிரிப்பும் துணை வந்தது. அத்தான், உங்களைப் பார்க்கிறதுக்கே எனக்குப் பயமாய் இருந்திச்சு; அதனாலேதான் ஒதுங்கிட்டேன்!’ என்றாள், குறும்புச் சிரிப்புடன். “உடம்புக்கு ஒண்ணுமில்லீங்களே?” 166 அமுதவல்லி

தாலிக்கயிற்றில் ஆடிய தாலிப்பொட்டை ஆட்டி விட்டான் சோமையா. ‘சும்மா தலைவலி அவ்வளவு தான்!” என்று கூறினான். போலித்தனமான ஒரு சிரிப்பு கைகொடுத்தது. வேறென்ன செய்வான்? நான் ஒருத்தன் அனுபவிக்கிற வேதனை போதாதா? அவள் வேறேயா கஷடப்படனும்?

அந்தத் தாலி எவ்வளவு ஒயிலோடு சிரிக்கிறது.

ஏன் அப்படி?

சோமையா தத்தளித்தான். தாலியைக் கோர்த்துப்போட ஒரு தாலிச்சங்கிலி செய்துவிட வேண்டுமென்று எவ்வளவு ஆசைப்பட்டான் ! பார்வதி அணிந்திருந்த அந்த ஒன்றரைப் பவுன் தாலியை அழித்து சன்னமான ஓர் ஒற்றை வடச் சங்கிலி செய்து அதில் தாலியை இணைத்து, தில்லைக்குப் போட்டு அழகு பார்க்கலாமென்பது அவன் எண்ணம், ஆனால், தில்லை நாயகி ஒப்பமறுத்தாள். கடன் பிரச்னைகளைப் பகுதி பகுதியாகக் கட்ட முயலலாம்! -மார்ச் மாதத்திய சீட்டுக் குலுக்கலில் கொசிறு’ தள்ளி ஏலம் எடுத்தால், எப்படியும் குறைந்தபட்சம் முந்நூறுக்குத் தேறிவரும். தாலிச் சங்கிலி செய்து விடலாம். ஆனால், சோதனையாக இப்போது அனாமத்தாகவும் அனாவசியமாகவும் அநியாயமா கவும் ரூபாய் நூற்றி எண்பதும் சொச்சம் விரயமாகி விட்டதே! இந்த லட்சணத்தில் குனா- பானா கெடு பிடிக்கு எப்படி மால் பண்ணுவதாம்? நூற்றி இருபது ரூபாய்ச் சம்பளத்தில் எப்படிக் குடும்பம் நடத்திக் குப்பை கொட்டுவதாம்? ஆறுமுகப் பெரு மானே...!

“அத்தான்!' பூவை எஸ். ஆறுமுகம் 169

சோமையா பதறிப்போய், தில்லையை நெருங்கி அவளுடைய கண்ணீரை மன நெகிழ்ச்சியுடன் துடைத்துவிட்டான். ஒரு சமயம், தான் நோயும் பாயுமாக வீழ்ந்ததைக் கண்டு, தில்லை உயிர்க்குலை நடுநடுங்கத் துடித்த துடிப்பின் நேசத்தை அவன். அந்தரங்கம் தான் உய்த்துணர முடியும்!

பூவை அடைந்தது பூ,

பசிக்குமே? சாப்பிட வாங்க!"

“நீ போய் பிளேட்டைக் கழுவி வை. நான் பழசை உடுத்திக்கிட்டு வாரேன். ஆமா, பாபு தூங்கிட்டானா, தில்லை.

“கொஞ்சம் முந்தி அவன் பாட்டுக்கு கள்ளர் சந்து முனையிலே ஒண்டியா நின்னு இருட்டிலே என்னத்தையோ பொறுக்கி விளையாடிக்கிட்டு இருந்தான். தேடிப்போய் அவன் முதுகிலே ஓங்கி நாலு அடி வச்சுத் தூங்கச் செஞ்சேனுங்க, அத்தான் !’

நிதானம் காத்து உரைத்தாள் தில்லை நாயகி.

சோமையாவால் நிதானத்தைக் காக்க இயலவில்லை, மறுகணம் அந்தக் காட்சி மனக் கண்ணில் விளையாடியது; விளையாட்டுக் காட்டியது.

பாபுவுக்கு 'விடேன்-தொடேன்' என்று மூன்று நாள் விஷ ஜூரம் பீடித்தது.

அவ்வளவுதான். -

தில்லை உருகினாள்; உருக்குலைந்தாள். முருகன் படத்தின் முன் மண்டியிட்டு, முருகா, எங்களுக்கு இருக்கிற ஒரேயொரு ஆறுதல் எங்கள் பாபு தான். இனியும் நீ எங்களைச் சோதிக்கிறது. நியாயமாகுமா, 168 அமுதவல்லி

தர்மமாகுமா? எங்க ரெண்டு பேர் ஜீவனும் எங்க பாபு கையிலே தான் இருக்குது என்கிற துப்பு உனக்குப் புரியாததா, என்ன?' என்று நெக்குருகிக் கதறினாள்.

சோமையா சுய நினைவை மீட்டுக் கொண்டான். அமைதியான கவலை துலங்கிட, 'பாபுவோட சேட்டை வர வர ஜாஸ்தி ஆகிட்டுத் தான் வருது: அடிச்சால்தான் படிவான். சரி, சரி நீ போய்ச் சாப் பாடு ரெடி பண்ணு, தில்லை!” என்றான்.

பாபுவின் புத்தகம் இடறியது! தில்லைக்கென்று அப்படியொரு சிரிப்பா?...

அதோ, பார்வதி!.

பார்வதியை-பார்வதியின் அமரப் புன்னகையை தொடுத்தவிழி எடுக்காமல் பார்த்தான் சோமையா. பார்வதி விதியாகச் சிரிக்கின்றாளா? அவளுடைய கழுத்துத்தாலி அவன் உள்ளத்தில் ஊசலாடியது. நெஞ்சு வலியெடுத்தது. பற்றிக்கொண்டான் கெட்டியாக, அந்தத் தாலியைக் காணத் துடித்தது அவன் மனம். உயிர் பிரிந்த பார்வதியை மீண்டும் உயிரும் உயிர்ப்புமாகத் தரிசிக்கப் போகும் பாக்கியம் பெற்றவனைப்போல ஓடினான். ஓடின விழி வெள்ளத்தை, ஓட்டி விடக் கூட சிந்தை இழந்தான் அவன்.

அலமாரி வாய் பிளந்து கிடந்தது,

அடங்காத-அடிக்க முடியாத ஆர்வத் துடிப்போடு அலமாரியின் அடித் தட்டைத் துழாவினான் சோமையா. அத்தான் பார்வதி அக்காளுடைய இனிய ஞாபகத்துக்கும் அமர நினைவுக்கும் ஒரு பூவை எஸ். ஆறுமுகம் 169

சாசுவதமான அடையாளமா அக்காவோடி இந்தத் தாலி எப்பவுமே நம்மகிட்ட இருக்கவேணுமுங்க. அத்தான்!” என்று கண்ணீரும் கம்பலையுமாக வேண்டிக் கொண்ட தில்லைநாயகியின் சொற்கள் எதிரொலித்தது.

எவர்ஸில்வர் சம்புடம் விழுந்தது. அதில் தான் பார்வதியின் அந்தத் தாலி இருக்கிறது!

ஆசையோடு சம்புடத்தை எடுத்து, ஆர்வத்தோடு திறந்தான் அவன்.

எங்கே அந்தத் தாலி?:ஐயோ, பார்வதி!’

ஓலம் பரப்பினான் சோமையா. சூன்யத்தைச் சூறையாடுபவன் போன்று வெறித்து நோக்கினான் புத்தி பேதலித்து விட்டதா? சமையற் கட்டுக்கு ஓடினான்.

“தில்லை? என்னோட அன்புப் பார்வதிக்கு நான் கட்டின அந்த மாங்கல்யத்தைக் காணோமே? எங்கே போயிடுச்சு அது?’ என்று கூவினான்.

தில்லை நாயகி ஏன் மெளனம் சாதிக்கிறாள்?

“ஊம், சொல்லு!’

அத்தான், கோபப்படாமல் கேளுங்க. 'கல்யாணம் கட்டி ஒரு வருஷம் ஆகியும் இன்னமும் தாலிக் கயிற்றை மாற்றி, ஒரு தங்கச் சங்கிலி பண்ணி அதிலே தாலியைக் கோத்து ஜம்னு போட்டுக்கிட வழக்கம் தெரியலையே உனக்கு? அப்படின்னு அக்கம்

அ -11 170 அமுதவல்லி

பக்கத்திலே உள்ள பொம்பளைங்க சதா என்னை நையாண்டி பண் ணிக்கிட்டே இருந்தாங்க. எனக்கு ரோசம் தாங்கலிங்க.. ஆனதாலே சங்கதியை நீங்க திரும்பினதும் சொல்லிக்கிடலாம்னு பார்வதி அக் காளோட அந்தத் தாலியை அழிச்சு, எனக்குச் சங்கிலியை பண்ணும் படி பக்கத்துத் தெரு கணபதிப் பத்தர் கிட்டே மத்தியானம் ஒப்படைச் சிட்டேனுங்க, அத்தான்!”

தில்லையா இவ்வாறு பேசுகிறாள்? அவளா இப்படி நடந்திருக்கிறாள்?

சோமையா தன்னை மறந்தான், அடி பாவி! இப்படிப்பட்ட ஈவிரக்கமில்லாத ஒரு செயலைச் செய்யுறத்துக்கு உனக்கு எப்படித்தான் மனசு வந்திச்சோ? நீ பெண்ணா? இல்லை. இல்லவே இல்லை! நீ பாழும் பேய்! அதனாலே தான், என் தெய்வத்தோட ஞாபகச் சின்னத்தை அழிச்சுப்பிட துணிஞ்சிட்டே நல்ல வளாட்டம் நடிச்சிருக்கே இல் லாட்டி, தாயில்லாப் பிள்ளையான என் மகன் பாபுவை நீ கைநீட்டி அடிச்சிருப்பியா?. பாவி நீ!...” என்று கூச்சல் போட்டான். மறுகணம், தில்லை நாயகியின் நீண்ட கூந்தலைப் பற்றி இழுத்து, மூர்த்தண்யமான ஓர் அசுர வெறியோடு அவளை கன்னா பின்னாவென்றும் தாறுமாறாகவும் அடித்து நொறுக்கிவிட்டான் அவன்!.

கடம்பா!....

பொங்கிக் கொதித்தும், கொதித்துப் பொங்கியும் வீறு பூண்டு முழங்கும் பால், தீண்டிய நாகம் அடங்கி ஓய்கிற மாதிரி தன்னைப் போல ஒடுங்கி விடும் என்பார்களே?... பூவை எஸ். ஆறுமுகம் 171

தில்லை நாயகி வைரமாக, அடித்து வைத்த சிலையாய் அப்படியே நின்று கொண்டிருந்தான்!

திடீரென்று விம்மல் ஒலி, அங்கே விரவிப் பரவிக் கிடந்த பயங்கரமான நல்ல பூமியின் அதீத அமைதியைப் பிளந்து வீசியது.

யார் அழுவதாம்?

தில்லையா?

ஊஹீம்!- தில்லை ஏன் அழப்போகிறாள்?

"அ.. ப்.. பா!"

வாண்டுப்பயல் பாபு அலறினான்.

சோமையா முன் மயிர்க்கொத்து கண்ணை மறைக்க ஏறிட்டு விழிகளைப் பிதுக்கினான். பாபு!” என்று விம்மிப்புடைத்து அவனை வாரியெடுக்கத் தாவினான்.

பாபு திமிறி விட்டான்.

ஐந்தறைப்பெட்டி முறுக்குகள் பறந்தன.

“அம்மா என்னை அடிச்சுதா? எப்போ? யார் சொன்னது?"

பாபு வீரிட்டான்,

“ஆ...!”

சோமையா தவித்தான். வழிந்தோடியது வேர்வையா? இல்லை சுடுநீரா?... அவன் பார்வை தாழ, தலையை நிமிர்த்தப் பலமின்றித் தடுமாறினான். நெஞ்சை வளைத்துச் சாடிக்கொண்டிருந்த சாட்டை 172 அமுத வல்லி

யடி வலிக்காதா, பின்னே? மார்பைப் பற்றிக் கொண்டான். இப்போது தான் அவனால் தில்லை நாயகியை வேண்டும்!...தி.ல்...லை... நாயகி!’

அந்தத் தில்லை நாயகி ஜாதி ரோஜாவாகச் சிரித்தாள். பூவும் பொட்டும் சிரித்தன. எடுப்பான மார்பகத்திலே எடுப்பாக ஊசலாடிக்கிடந்த அந்த தங்கத் தாலி-வெறும் கயிற்றில் பந்தம் கட்டிப் பொலிந்த அந்தச் சுமங்கிலியின் அந்தத் தாலியும் தான் சிரித்தது!

மறு கணம்:

“அத்தான்!...”

தில்லை நாயகி ஏன் அப்படி விம்மித் துடிக்கிறாள்?

சோமையா மீண்டும். ‘ஆ’ என்று கூவலானான்.

தில்லை நாயகியின் மாணிக்கக் கரங்களிலே இப்போது பார்வதியின் அழகான தாலி தரிசனம் கொடுத்தது!...

தூண்டிற் புழு என்று உவமை காட்டிப் பேசுவார்களே அது இவ்வாறு தான் அல்லற்பட்டு, அவதிப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டுத் துடிக்கமோ? ஐயோ!...

"தில்லை!...”

அவளுக்கென்று இப்படியொரு அலாதிச்சிரிப்பா, என்ன?-"அத்தான், நீங்க என்னைக் கைப்பிடிச்சுக் கொஞ்ச காலம் தான் ஆகியிருக்குது; ஆனால், இந்தக் குறுகின காலக்கெடுவுக்குள்ளே நீங்க மெளனமாச பூவை எஸ். ஆறுமுகம் 173

வும் ரகசியமாகவும் என்னைப் பரீட்சை பண்ணிப் பார்த்துக்கிடாமல் இருந்திருக்க முடியாது! அந்த அந்தரங்கத்தோட சத்திய தருமம் உங்களுடைய மனசுக்கும் மனச்சாட்சிக்கும் மட்டிலும் தான் புரிஞ்சிருக்கும்; விளங்கியும் இருக்கும்... ஊம். டீச்சருக்கு மாணவியே துணிஞ்சு பரீட்சை வைக்கிற ஒரு அதிசயக் கூத்து ஏன் இந்தக் கலி காலத்திலே நடக்கக் கூடாதாம்? நடக்க முடியாதாம்?... நான் அப்படிவொரு பரீட்சையை உங்களுக்கு வச்சு பார்த்தேன்!. நீங்க...?"- அவள் வாரி வழங்கிய சிரிப்புக்கு முன்னே விதியின் சிரிப்பு என்ன செய்து விட முடியும்?

'நான் தோற்றுப் போயிட்டேன்! ...ஐயோ முருகா!'

தில்லை தன் நாதனை அழகாகவும் அன்பாகவும் ஊடுருவினாள்; பிறகு இதழ்களை ஒரு துடிப்புடன் விலக்கி விட்டாள்: அன்பு வெற்றி பெற்றுத் தான் தீர வேணும் என்கிறது ஒண்ணும் சட்டம் இல்லீங்களே?... அப்படி விதியும் இல்லீங்களே?. அன்பு தோற்று விடுவதும் இயல்பு தானுங்களே, அத்தான்?”

அந்த அன்பின் சாதுர்யம் அவனை மேலும் தூண்டில் போட்டு இழுத்து விட்டிருக்குமோ? தில்லை!’ என்று விம்மினான்; வெடித்தான்.

“தில்லை, உன்னை அந்தரங்க சுத்தியோடு புரிஞ்சுக்கிடுறதுக்குத் தவறிப் போயிட்ட நான் மெய்யாலுமே தோற்றுத்தான் போய்ட்டேன்! ஆனா நீ சொல்ற மாதிரி அன்பு தோற்றாலும்-அல்லது தோற்றுப் போயிட வேண்டிய விதியைக் கொண்டிருந்தாலும், அந்தத் தோல்வியேதான் என்னோட மனசுக்கு வெற்றியாக அமைய முடியும்; அப்பத்தான் 174 அமுதவல்லி

நான் உன்னை இன்னமும் கூடுதலான நேசத்தோடு அன்பு பாராட்ட முடியும்; அன்பு பாவிக்க இயலும்!... அப்பத்தான் அந்த அன்புக்கு-பாசத்துக்கு நேசத்துக்கு புடமிட பொன்னோ மகிமையும் கிட்ட வாக்கும்! ஆமா, தில்லை!...

அன்பெனும் பிடினின்றும் விலகவோ, விடுதலை பெறவோ ஒப்பமாட்டாள் தில்லை. ஒரு பதியின் உஷ்ணப் பெருமூச்சை மறுபாதியில் நின்று உணர்ந்த வாறே, மாரகச் சேலையைச் செம்மைப்படுத்திக் கொள்ளத் தவறி விடவில்லை தில்லை. ஏறிட்டு விழித்தாள். பச்சைக் குழந்தையின் பால் மனம் பாலாக உருகியோட அவள் நிமிர்ந்து பார்த்தாள். அத்தான், நீங்க என்னென்னமோ பேசுறீங்களே?... நான் சின்னப் பொண்ணு தானுங்களே, அத்தான்? என்றாள். உடலும் உடலும் பிணைந்த ஸ்பரிசம் கூட ஒரு யோகம் தான் போலும்! -

சோமையாவுக்கு - அழ மட்டும்தான் தெரிந்தது, இப்போது.

“அப்பா!...”

அச்சமயம், பாபு கன்றெனத் துள்ளி வந்தான். அப்பாவைக் குண்டுக் கட்டாகக் கட்டிக்கொண்டான்.

“அப்பா, கோவிச்சுக்கிடாமல் இதைப் பாருங்க! இதிலே உங்க பேர் எழுதின ஒரு சின்னூண்டு கடுதாசி இருந்திச்சுதுங்க...” என்று சொல்லிக்கொண்டே பரபரப்புடன் நிஜார்ப்பாக்கெட்டைத் துழாவி எடுத்தான் வாண்டுப் பயல்.

சோமையா திடுக்கிட்டான்! பூவை எஸ். ஆறுமுகம் 175

அது ஒரு ‘மணிபர்ஸ்!'

"தில்லை! காணாமல் போன என் பணம் ஊஹீம், என் முதலாளியோட பணம் கிடைச்சிட்டுது, தில்லை!

ஆமாம்!-இப்போதும் கூட, சிரித்துக் கொண்டு தான் இருக்கிறாள். தில்லை நாயகி! சிரிப்பென்றால் தவக்கனல் சுடர் தெறிக்கும்-சுடர் தறிக்கும் சிரிப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=அமுதவல்லி/தவம்&oldid=1663797" இலிருந்து மீள்விக்கப்பட்டது