உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 இல்லை என்பதை அவர் நெஞ்சார உணருகிறார்! நேர்மையா கச் சொல்லியும் விட்டார்! ஆனால் மற்றோர் பேருண்மை அவருக்குப் புலப்படவில்லை -இன்று அவர் இருக்கும் நிலையில் புலப்படாது! "அது சரிடி அம்மா! அந்தப் பாவியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிந்தா, இன்னேரம் கூலிக்காரியாகி, புளித்த கூழுக்கும் அழுகல் மாங்காய்க்கும் அலைந்து திரிந்து கிடக்க வேண்டித்தான் வந்திருக்கும்" என்று துணிந்து கூறுகிறார்; கொண்டவன் வறுமையின் பிடியில் இருப்பது கண்டு குலுக்கி நடந்து குட்டிக் குபேரனை வலையிட்டு, அவனு டன் வாழ்க்கை நடத்தி, வங்கி ஒட்டியாணத்துடன் மாங்காய் மாலையும் வைர ஓலையும் பச்சை மோதிரமும் பத்து ஏகர் நஞ்சையும் பங்களா தோட்டமும், "சம்பாதித்த சல்லாபி/ ஆனால் உலகம், காரி உமிழ்கிறது! ஆஹா! அப்படியா! அம்மணீ! வாழும் வழி கற்றுக்கொடுத்த வனிதா மணியே! வாழி! வாழி!! என்று கூறி வாழ்த்துவதில்லை. அவளிடம் வண்டி ஒட்டி வயிறு கழுபவன் கூட, வாழ்த்த மாட்டான்- பாழும் அங்கத்தை வளர்க்க இந்தப் பங்கப்பட்ட பாவியிடம் அல்லவா வேலை செய்ய வேண்டி "விதி" இருக்கிறது என் றெண்ணி வேதனைப்படுவான். ஆனால் இதெல்லாம் சாமானியர்கள் விவகாரம்! பேசினவர் அமைச்சர்; உன்னையும் என்னையும் போல "உருப்படத் தெரியாத" வரா! எனக்கும் உனக்கும் தம்பி! அவர் போல < அந்தஸ்து பெறுவதற்கு என்ன வழி என்பது தெரிய வேண்டாம் - நாடு பொலிவு பெற, தன்னரசு பெற்றுத் திகழ வழி என்ன என்ற விஷயம் புரியட்டும் - போதும். புகழுரை பொழிவதன் மூலம் மயக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, நாம் ஏமாளிகள் அல்லவென்பதை எடுத்துக்காட்ட வேண்டும். வந்த வண்ணம் இருக்கிறார்கள் வட நாட்டுத் தலைவர்கள். அவர்களின் உண்மை நோக்கத்தை உணந்ததாலே தான், சேலத்தில் தோழர்கள், சீறி எழுந்து கண்டனக் குரலைக் காட்டினர். மேலும் விளக்கமாவதற்காகக் கருப்புக் கொடியும் காட்டினர். "அடிக்கடி செல்வோம், அன்பாகப் பேசுவோம், புகழ்பாடு வோம், புன்னகை காட்டுவோம், அவர்கள் ஏமாந்து போவார்கள்,"எடுபிடி "யாகி விடுவார்கள்!" என்று எண்ணு கிறார்கள், முறையை மாற்றினால் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து விடலாம் என்று எண்ணும் வடநாட்டுத் தலைவர்கள்.