உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

38 போது, சிற்பி செதுக்கிய சித்திரப்பாவை விழுந்து கிடந்தது போல இருந்தது. தவறிக் கீழே இப்படி ஒரு காமுகன் பேசினால், அதைக் கேட்டுக் காரிகையின் பெற்றோர், பெருமையா கொள்வர்? பூரிப்பா அடைவர்? சிறிதளவு ரோஷமுள்ளவர் சீறிப் போரிடுவர்- அது அற்றவர்கள் தற்கொலை செய்து கொள்வர். அமைச்சர் சுப்பிரமணியம் வட நாட்டுத் தலைவர்கள் வழங்கும் புகழுரைகளைக் கேட்டுப் பூரித்துப் போகிறார், புள காங்கித மடைகிறார்! அவரால் முடிகிறது! அவர் போன்றோரால் முடிகிறது? நம்மால் முடியவில்லையே? நமக்குத் திராவிடம் அன்று வாழ்ந்த பெருவாழ்வுடன் இன்று அடைந்துள்ள அவல நிலையை ஒப்பி டும் போது, அணி மணி பறிகொடுத்த ஆரணங்கு, கழுத்து நெறிக்கப்பட்ட பேசும் பதுமை, மானமழிககப்பட்ட மாது-- இத்தகைய கொடிய காட்சிகளல்லவா நினைவிற்கு வருகிறது! நெஞ்சு நெருப்பிலிட்ட புழுவாகாமலிருக்குமா? அவர்கள் மகிழ்கிறார்கள் - அத்தனைக்கும் ஈடாக அமைச்சர் பதவி கிட்டி விட்டது என்று! நமக்கோ அரசு இழந்தோம், முரசு இழந் தோம், வளம் இழந்தோம். வகை இழந்தோம், தன்மானமுமா அழிந்து படவேண்டும்? என்று எண்ணம் பிறக்கிறது. "பைத்தியக்காரர்களே! என்னைப் பாருங்கள்! நான் உங் களைப் போல உதவாக்கரைக் கருத்துகளுக்கு என் மனதில் இடமளித்து இருந்தால், இந்த நிலையிலா இருந்திருப்பேன்? மூலையிலல்லவா முக்காடிட்டு அழுதபடி இருந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்?" என்றகருத்துப்பட‘கனமான சுப்ரமணியம் கழறுகிறார்! புகழுரையை அபினாகத்தரும் புதுமுறையில் ஈடுபட்டுள்ள வடநாட்டுத் தலைவர்களிலே ஒருவர், தத்தர் என்பார் பேசிய கூட்டத்திலே, அமைச்சர் சுப்பிரமணியம் தீப்பொறி பறக்கப் பேசி, ' தீகா'வாவது என்று ஏசினாராம்! அரிய உண்மையையும் அருளியிருக்கிறார் அது போது. பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பேச்சைக் கேட்டு இருந்தால் நான் என்ன கதியாகி இருப்பேன்? இப்போது இந்த தீகா தீமூகா தலைவர்கள் இருக்கிறார்களே அதுபோல எங்கோ ஒரு முலையில் அல்லவா கிடந்திருக்க வேண்டி நேரிட்டிருக்கும்? என்று பேசியிருக்கிறார். இதிலே ஒரு அரிய உண்மை இருக்கிறது, தம்பி; நிச்சய மாக இடுக்கிறது. காங்கிரசில் சேர்ந்தால்தான், சுப்பிரமணியம் போன்றார், சபை நடுவில் சன்னத்துடன் இருக்கமுடிகிறது! இல்லையேல், மூலை முடுக்குதான்; சந்தேகம் இல்லை! காங்கிரசின் தயவு இருக்கிறது என்ற தகுதி தவிர, தமது நிலைமைக்கு வேறுதகுதி