உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 கவிதை, அதைப் பாடு இப்போது, இவர்கள் கேட்கட்டும் என்று கூறுவான். அடிமை பாடுவான். கீர்த்தி மிக்க கிரேக்க நாடு தாழ்ச்சியுற்ற போது நேரிட்ட, நெஞ்சைப் பஞ்சாக்கும் சோகச் சம்பவம். இப்போது. பரதநாட்டியம், கருநாடக சங்கீதம், கதகளி, திராவிடமொழி, திராவிடச் சிற்பம், இவைகளை இன்னும் பதம்கெடாமல் பாதுகாத்திடும் வித்தகர்களின் திறமை, புலமை ஆகியவற்றை வடநாட்டவர் பாராட்டிப் பேசும் போது, எனக்குத் தம்பி! ரோம் நாட்டின் மாளிகையிலே கண்ணீரையும் கவிதையையும் சேர்த்து வடித்துக்கொடுத்த கிரேக்க அடிமையின் கவனம்தான் வருகிறது. வளமாக 'மிகப் பழங்கால முதற்கொண்டே இருந்த திராவிடம்' என்று அவர்கள் புகழ்கிறார்கள். திராவிடரோ மலேயா காடுகளிலே மிருக வாழ்க்கையில் இருக்கிறார்கள் கடல் கடந்து சென்று கைகட்டிச் சேவகம் செய்வது மட்டு மல்ல, கட்டை வெட்டுகிறார்கள், கல் உடைக்கிறார்கள், குப்பை கூட்டுகிறார்கள். மிக உயர்ந்த மொழி திராவிடத்தில் இருக்கிறது என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். பாராட்டிவிட்டு, எனினும் "இந்தி"" படித்தால்தான் வாழ்வு உங்களுக்கு என்று துணிந்து கூறுகிறார்கள். அறிவாளரின் வாழ்விடம், கலையின் பிறப்பிடம் என்றெல் லாம் பேசுகிறார்கள்-பேசிவிட்டு, இவ்வளவு தகுதி இருப்ப தால், தனி அரசு அமைத்துக் கொண்டு தரணியில் ஒரு மணி விளக்காகத் திகழ்வீர் என்றா கூறுகிறார்கள்? இந்தியப் பேர ரசின்” ஒரு பகுதி என்று பசப்புரை கூறி, அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பொன் விளையும் பூமி என்கிறார்கள் - தரித்திரம் போக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம் அவசரப்படாதீர்கள் என் கிறார்கள். அவர்களின் புகழுரை நாணயமான தாக இருந்தால், ஏன் திராவிடம் தனி நாடாகத் திகழ்வதற்கு இசைவு தரக் கூடாது? இவ்வளவு புகழுரைகளுக்கு ஏற்றதாக ஒரு எழில் நாடு இருக்க, ஏன் அதனை அடிமைக்காடாக்கி வைத்திக்கிறார்கள்? நல்ல பெண்! மிக நல்லவள்! கொஞ்சம் கூச்சம்! பயம்!! அடே அப்பா!கரத்தைப்பிடித்திழுத்ததும் சிவந்தேவிட்டது? கன்னத்தைத் தொட்டேன், மலர், மலரே தான்! மஞ்சம் சென்றபோது, சிறு குழந்தை போல, விக்கிவிக்கி அழுதாள்! பிறகு மயங்கிக் கீழே வீழ்ந்தாள்! தரையில் அவள் கிடந்த அ.க--4