உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 சூதாடித் தோற்கிறான் இராஜ்யத்தை - நளன் - தருமன். தானமாகக் கொடுத்து விட்டுச் சுடலை காக்கச் செல்கிறான் அரிச்சந்திரன். இவை வடநாட்டு மன்னர்களின் முறை - மன்னர் களிடம் நாடு உடைமையாக்கப்பட்டு விடும் - கேடான கொள்கையைத் தென்னகம் ஏற்றுக் கொண்டதில்லை. பெரிய தத்துவத்துக்குப் போவானேன் தம்பி, ஐவருக்கு ஒரு மாது பத்தினியாக இருக்கலாம் என்பதைக் கற்பனைக்கும் ஒத்ததாகத் திராவிடர் கருதவில்லை -வடக்கே அப்படிப்பட்ட பத்தினி பற்றிய காதை எழுதி, அந்த அம்மையின் உற்ற இரக்ஷகராக பகவானே உடனிருந்து வந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. பண்பு நிச்சயமாக இங்கே வேறுதான் - அங்கே இருந்து வந்த "ஆசாபாசங்களை" பண்பு என்று கூறக் கூசுகிறது. எல்லாம் சரி ! ஆனால் இன்று என்ன நிலைமை? வடநாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகிறார்கள், புகழ்கிறார் கள், நமது அருமை பெருமைகண்டு அகமகிழ்கிறார்கள், ஏன்? இப்படிப்பட்ட பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய தான பொன்னாடு, தங்களின் பிடியில் இருக்கிறது என்ற பூரிப்பு11 ரோம் நாட்டவர் கிரேக்க நாட்டைத் தோற்கடித்து அடிமைப்படுத்தினர். பொன்னும் மணியும் வண்டிவண்டி யாகக் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றுடன் கிரேக்கர் பலரை அடிமைகளாகக் கொண்டு சென்றனர். மாளிகையில் மந்தகாசமாக, ரோம் வீரன் அமர்ந்திருப் பான்; நண்பர் அவனுடன் உரையாடுவதும், தங்கக் கோப்பையிலே வார்த்துத் தரப்படும் திராக்ஷை ரசத்தைப் பருகுவதும், போதை ஏறிய நிலையில், பொழிவில் கண்ட கடைக் கண்ணழகி பற்றியும், செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட காலால் சேயிழை தன் மார்பகத்கே உதைத்த போது அடைந்த உவகை பற்றியும், பேசிக் களிப்பர். "ஆஹா! மறந்தேபோனேன், நண்பர்களே! வெண்ணிலவில்வேல்விழி யாளுடன் ஆற்றோரம்உலவினால் அடையும் ஆனந்தம் பற்றிய அரும் கவிதை ஒன்று இருக்கிறது, கேட்டதில்லையே நீங்கள் சுவையுள்ள கவிதை என்பான் விருந்தளிப்போன் "அப்படியா! கவிதையா! பாடிக் காட்டு நண்பா! என்று கேட்பர் விருந்துண்போர். "நானா பாடுபவன்! என்னிடம் இருக்கிறான் ஒரு அடிமை அழகழகாகப் பாடுவான்" என்று கூறி அழைப்பான்.புலமைமிக்ககிரேக்கன், அடிமைக் கோலத் திலே வந்து நிற்பான், "ஏ! கவி! நேற்று பாடிக்காட்டினாயே