உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 களும்......! இப்படி எண்ணுகிறார்களே, என்று கூறி, ஆயா சப்படுகிறார். அடுத்த கட்டம் அச்சம்!! வேறென்னவாக இருக்க முடியும்!! அமைச்சர் சுப்ரமணியம் திகைப்புக்கு இடமளிக்கவில்லை; தீ மிதிக்கிறார் ! தென்னாடு ஐந்தாண்டுத் திட்டத்திலே புறக் கணிக்கப்பட்டது, ஓரவஞ்சனையாக நடத்தப்பட்டது என்ற புகாரை, நான் அதிகார பூர்வமாக மறுக்கிறேன், என் கிறார்!! அமைச்சருக்கு அதிகாரம் இருக்கிறது, அதனால் மறுக்கி றார் என்பதுதான் இதற்குப் பொருள்! அமைச்சர் அதிகாரம் இவருக்கு அளிக்கப்பட்டிருப்பதே இப்படி மறுப்புரைகள் பேசத்தான் என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால், மக்கள் அறிய விரும்புவது, இவருக்கு உள்ள அதிகாரம் எத்தகையது என்பது அல்ல; அவர்கள் இன்று நினைவுப் பரணையிலே, பல மாஜி அமைச்சர்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்-வர்க்கியும் மாதவமேனனும், குருபாத மும் ஜோதியும், அவினாசியாரும் வேங்கடசாமியாரும், ராஜா ராமரும் பிறரும், அதிகாரம் பெற்றிருந்தவர்கள்-இன்று, ....... பார்மோசாக்களிலே வாசம்! கனம் சுப்ரமணியம் அவர்கள் மட்டும் என்ன! கனமாவதற்கு முன்பு அவரை நாடு அறியாது; கனம் குறைந்ததும் நாடு நாடாது! எனவே, அவர் நமது குற்றச்சாட்டுகளை 'அதிகாரபூர்வமாக' மறுக்க முனையவேண்டாம். நமக்கு நல்லறிவு கொளுத்தவா வது புள்ளி விவரம் காட்டி மறுக்க முன்வரட்டும்! வக்கு ஏது அதற்கு? திருச்சிக் கூட்டத்துச் சுப்பிரமணியனாரை, பெரிய நாயக்கன்பாளையத்தில் பேசிய சுப்ரமணியனார், இழித்தும் பழித்தும், என்னே இச்சிறுமதி! ஏனோ இந்தக் கெடுமதி! இங் கொன்று அங்கொன்றா? உள்ளொன்று புறமொன்றா?- என்று இடித்து இடித்துக் கேட்பாரே! ஒரு அநீதியும் இழைக்கப்படவில்லை என்று திருச்சியில் பேசிய திருவாய், ஏன் பெரியநாயக்கன்பாளையத்திலே, வேறு விதமாக மென்றது என்று அறிய நாட்டார் விரும்பு கிறார்கள். அங்கு அவர், வடநாடு சென்றறியாதவர்கள்தான், இப்படிப் பேசு கிறார்கள் என்று பேசி, நம்மை நிந்திப்பதாக எண்ணிக் கொண்ட இவரை ஒத்த நிலையிலுள்ள பலரைப் பழித்துப் பேசுகிறார். தூக் வடநாடு செல்கிறார், இவர்: அறிவோம்: காவடி கிடும் கனம் செல்லவேண்டும் அடிக்கடி, அறிந்திருக்கிறோம்.