உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81 இருக்கிறது. பர்மா போன்ற வெளிநாட்டுச் சர்க்காரிடம் பேசவும், வசதி வாய்ப்பு, சலுகை உரிமை இவைகளைப் பெற வும் இங்கே உள்ள அமைச்சர் அவைக்கு அதிகாரம் ஏது? எல்லாம் டில்லியப்பன்தானே! எதற்கும் டில்லியப்பன் துணை யும் தயவும் இருந்தால்தான் நடக்கும். எனவே, அஜீத் பிரசாரத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படுகிறது, 'ஐயனே! மீனவரைப் பாரீர்! அவர் குறை தீர்த்திட வாரீர்! பட்டினி யால் வாடுகிறோம், பண்டம் பாழாகிறது, பிழைப்பிலே மண் விழுகிறது" என்று கெஞ்சுகிறார்கள். (அப்படியா, உமக் குற்ற குறை பற்றி நாம் இனி எண்ணிப் பார்த்திடுவோம். எமது அண்டை நாடாம் பர்மாவின் இந்தப் போக்குக்கு உள்ள காரணம் யாவை என ஆராய்ந்த பின், யாது செய் திடல் முறை என்பது பற்றி எண்ணித் துணிவோம்!3> என்று பேசுகிறார் அஜீத்! அவரா பேசுகிறார், வடநாட்டு ஆதிக்கம் பேசுகிறது!! திருச்சியில்பாருங்கள், திரிலோகமும் புகழும் சுந்தரன்! வீரன்! சூரன்! யானே - என்று கனம் பாடுகிறார். ராஜா சிதம்பரனார், "ஆமாம்! இதை அறியேன் முன்னாலே. ஆகவே என் பிழை பொறுத்து ஆதரிக்க ஐயே?" என்று 'ட்யூட்' பாடுகிறார்! வருவீர், செக்கிழுத்தார் சிதம்பரனார் என்ற நெஞ்சை நெக்குருகச் செய்யும் சேதியை எடுத்துச் சொல்லிச் சொல்லி, பெரும் பலன் கண்டனர் காங்கிரசார். "கப்பலோட்டிய தமிழன்" வாழ்க்கைக் கலம் சுக்கு நூறாயிற்று. அந்தச் சோகக் காதை யைக் கூறிக்கூறி, இன்று அரசியல் உல்லாசப் படகினிலே ஒய்யாரமாகச் செல்கின்றனர் பலர்! இதோ கேள்,தம்பி, ஒரு கப்பலின் ததை கூறுகிறேன். சென்னை - ரங்கூன் செல்லும் கப்பலொன்று, சிந்தியா கம்பெனியார் நடத்தி வந்தனர். முன்பு வெள்ளைக்காரக் கம்பெனி நடத்திவந்த தொழில், சுதேசி இயக்க தத்துவம் காரணமாக, சிந்தியாவுக்குக் கிடைத்தது. சிந்தியா கப்பல்விட ஆரம்பித்ததும், வெள்ளைக்காரக் கம்பெனி விலகிக்கொண்டது. இருபது நாட்களுக்கு ஒரு முறை சிந்தியா கப்பல் செல்லும். இதிலே இங்கிருந்து, ஏழை எளிய மக்களே ஏராளமாகச் செல்வர்-- கட்டணம் அதற்குத் தகுந்தபடி இருந்து வந்தது. பர்மாவுக்கு இங்கிருந்து பண்டங்கள் போகும்.