உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

$1 விழித்தெழுவீர் விடுதலைப் போரில் ஈடுபடுவீர்! திராவிடநாடு திராவிடருக்கே! இவ்விதமெல்லாம், படிப்படியாகத்தான், பிரச்சினை உரு வெடுக்கும். அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டியது தான் நமது பொறுப்பு. திருவாவடுதுறை ராஜரத்தினம் பாணி, தம்பி,உனக்குத் தெரியுமோ என்னமோ! அவருடைய உள்ளத்தில் நன்றாக வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் பிறந்துவிட வேண்டும். பிறகு, கேளேன் அந்த நாத இன்பத்தை! வீணையும் பிடிலும், குழலும், ஷனாயும், கோட்டும் பிறவும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு, வெளியே உலவி, கேட்போரின் மனமெல்லாம் இசைமயமாக்கி விடுகிறது. அவரிடம் உள்ள நாயனம் நமக்கு நல்ல இசை அமுது அளிக்க வேண்டுமானால், நமக்கு மகிழ்வளிக்க வேண்டும் என்று அவர் எண்ணினால்தானே! கால் ஆயிரம் தருகிறேன் காம்போதி வாசித்துக் களிப்பூட்டு; ஆயிரம் தரு கிறேன், தோடி நடக்கட்டும்; மேலும் தருகிறேன், மோகனம் நடக்கட்டும், என்று கூறினால், இசையா கிடைக்கும்? காங் கிரசிலுள்ள உண்மை ஊழியர்கள், இதுபோலத்தான், அவர் களின் உள்ளம், நமது கோரிக்கைக்கு இடமளிக்கவேண்டும்- பிறகு பாரேன், அவர்களின் தீவிரத்தை! தீரத்தை! அந்த நிலையைப் பெற, நாம்தான், முறையாகப் பணியாற்ற வேண்டும். இழிமொழி, பழிச்சொல், ஈனத்தனமான தாக்குதல், இட்டுக்கட்டிப் பேசுவது, இல்லது புனைதல், ஏசல் வீசுதல், என்பன போன்ற எத்தகைய கணையும் நம்மை நிலை இழக்கச் செய்யக்கூடாது. இந்தப் பரிபக்குவம் நமக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் இல் லாமற் போகவில்லை -- இருந்து விட்டு வந்த இடத்தில் நுழைந்துகொண்டு, நோட்டம்பார்க்கும் நண்பர் வீசும் நரகல் நடை நமக்கு வேறு எதற்குப் பயன்படுகிறது என்று எண்ணு கிறாய்! இந்தப் பரிபக்குவம் பெறத்தான்! ஒரே கலத்தில் உண்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளத்தக்க அளவுக்கு உறவு இருந்த இடத்திலிருந்தே. நித்த நித்தம், குறி தவறினா லும் கவலைப்படாமல், ஏசல் பாணங்கள் சரமாரியாகக் கிளம்பு கிறது - துவக்கத்தில் தம்பி,உன் போன்றவர்களுக்குக் கோப மாகக்கூட இருந்தது இப்போது நாலு நாளைக்கு அவ்விதமான மாணம் கிளம்பாவிட்டால், ஐயோ பாவமே; என்ன உடம் புக்கு. என்று கேட்கும் பரிதாப உணர்ச்சி அல்லவா வருகிறது - அந்த தூற்றல் பாணங்களைப் பார்த்துப் பார்த்து பழகி