உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92 விட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாராம் ஏவும் கண்டனக் கணை பிரமாதமானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டராம் கணைவிடுகிறது; நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம் கணைவிடுகிறது!! பொறுமை, அமைதி, கண்ணியம் எனும் அருங்குணத்தையும் பெறவும்; தூற்றுதலைத் தாங்கிக் கொள்ளும் மனத் திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் நிந்தனையைப் பொருட்படுத்தலாகாது என்ற பாங்கையும் நாம் பெற இப்போதும் குருபீடம் அருள் புரிகிறது!! இன்னும் நமக்கென்ன குறை!! வீசும் உள்ளப் குருபீடத்தில் நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறவாமல், நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். என்னைப் பொறுத்த வரையில், தம்பி! நான் அங்கு இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும் பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம-என் உள்ளம், தாங்கும் சக்தியைமிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற் றுக் கட்சிக்காரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல், கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக் கேட் டுக் கொள்ளமுடிகிறது; அண்ணனுக்குக்கிடைத்துள்ள மனப் பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன் தான் இவ் விதம் கூறுகிறேன். 3-7-1955 - அன்புள்ள, Jimmy m