உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

97 லொலியைக் கேட்கக் சகியாத கணவன், கர்த்தனின் ஆலய மணிச் சத்தத்தைக் கிளப்பி, சிந்தனையை வேறு பக்கம் திருப் பிட முயல்வான். சவுக்கடி ஒரு புறம், சகதியில் வீழ்தல் மற்றோர் புறம், பட்டினிச் சாவு ஒரு பக்கம், பயங்கர நோய் மற்றோர் பகுதியில், என்று இவ்வண்ணம் ஏழை எளியோர் வதைபடுவர். பவனம் அமைக்கிறார்கள், பம்பாயில். திருட்டுப் படகேறியா வந்தாய், திரும்பிப் போ, என்று துரத்துகிறார் கொத்தலாவலை, திரு இடத்தவரை. வடநாட்டினன் என்றால் அவன் அகதியாகட்டும், அன்னிய நாடுகளில் வசிப்பவனாகட்டும், ஆளும் இனத்தவன் என்ற காரணத்தால், மதிப்பும் சலுகையும் பெறுகிறான். அகதிகளுக்காக இந்திய சர்க்கார் அள்ளித் தந்த பணம் கொஞ்சமா? அகதிகளுக்கு இங்கு எல்லாவகையான வியாபாரமும் செய்து கொள்ள, வழியும், வசதியும் தரப்பட்டன. புதிய அங்கரடிகளே அமைக்கப்பட்டன. அலுவலகங்களிலே நுழைவர் அகதிகள்-ஆடவனாக இருந்தால் ஆத்திரத்தோடு சொல்வான், நானோர் அகதி என் சொத்து அத்தனையும் பாகிஸ்தானில் பறிபோய் விட்டது - பத்து ரூபாய் தருவாயா- என்று கேட்பான். இரண்டோ மூன்றோ கிடைக்கும், இவ்வளவு அற்பனா நீ, என்று கேட்பது போல, நம்மை முறைத்துவிட்டு, பணத் தைப் பெற்றுக் கொண்டு போவான் ஆரணங்குக்கோ இதழில் கீதம், கண்ணில் நடனம்,-நம்மவர்களோ, நாலோ ஐந்தோ அதிகம் தர இயலவில்லையே என்ற கவலையுடன் தருவர். ஒரு நமஸ்தே, கிடைக்கும்; ஒரு பெருமூச்சுப் பிறக்கும். அகதிகளுக்காக ஆற்றோரத்தில் அழகு நகர்கள் உண் டாக்கப்பட்டன திராவிடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் தரப்பட்டன. இதோ இலங்கையில் இடர்ப்படுகிறார்கள் திராவிடர்- நாடடற்றவர்கள் என்று நையாண்டி செய்யப்படுகிறார்கள் - யார் அவர்களைக் காப்பாற்றக் கவலை கொள்கிறார்கள்? இந்தப் பிரச்சினையைச் சென்னை சர்க்கார் கவனித்துக் கொள்ளும் என்று தேஷ்முக் தெளிவளிக்கிறார். எவ்வளவு திகைப்பூட்டும் பிரச்சினையையும் மிகச் சாதாரணமாகக் கருதி மிகத் தாராளமாக வாக்களித்துக் கொண்டு வரும் காமராஜரோ, இது ஒரு பிரச்சினையே அல்ல -இலங்கையிலி ருந்து வருபவர்கள், தாங்களாகவே இங்கு வேலைதேடிக்