உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 போர் - (12) நெருக்கடியான சமயம் - இறுதியான தீவிரமான கிளர்ச்சி - இதிலே நாம் ஈடுபடாமலிருக்கலாமா? நாமும் ஒரு கட்சிக்குப் பொறுப்பானவர்கள்! நாமும் பிறர் பார்த்து மெச்சத்தக்க கிளர்ச்சிகளை நடத்தி, கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கிறோம். அப்போது உதவிதர், உபசாரம் கூற, ஒரு சிறு புன்னகை காட்ட யாரும் வரவில்லை! மாறாக, அற்பமான கிளர்ச்சி- பயனற்ற வேலை என்று கேலியும் கண்டனமும் பிறந்தது. மேலும், ஆகஸ்ட்டு கிளர்ச்சியோடு எல்லாப் பிரச்னை களும் முடிந்து விடுகின்றன என்ற பொருள்! எவ்வள வோ கிளர்ச்சிகள் கருவில்! ஒரே நோக்கம் கொண்ட இருவேறு அமைப்புகள் கலந்து பேசி ஒரு திட்டம் தீட்டி. தக்கவிதமான கிளர்ச்சி நடத்தும் காலம் ஒன்று வரத் தான் போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண் டியதுதான். அது வரையில் அந்தந்த அமைப்பும், அதனதன் சக்திக்கும் சுபாவத்துக்கும் ஏற்றவகையான கிளர்ச்சியில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. நாம் துவக்கிய மும்முனைப் போராட்டத்தின் போது 'விடு தலையில் கிளர்ச்சிகள் என்ற அருமையான கட்டுரை யில், இந்தக் கருத்துப்பட பெரியார் எழுதியுமிருக்கிறார். (13) போர்முறை பற்றி என்ன கருதுகிறீர்? கொடி கொளுத்தும் போர் முறைபற்றித் தானே! அதுபற்றி நமது கருத்து என்ன, நமக்கு அது உடன் பாடானதா அல்லவா என்று எங்கே கேட்டார்கள்-எப் போது கேட்டார்கள்? பொதுச் செயலாளரை அழைத்துப் பேசியிருந்தால், அவர், திராவிட முன்னேற்றக் கழகம் இதுபற்றி என்ன கருதுகிறது என்று தெரிவித்திருக் கக்கூடும். பொதுவாக, இந்தி எதிர்ப்பு சம்பந்தமாக நடத்தப்பட்ட கிளர்ச்சிகளை எல்லாம் வடநாட்டுச் சர்க் கார் அலட்சியப்படுத்திவிட்டதால், இப்போது வடநாட்டு சர்க்கார் பரபரப்படையக்கூடிய வகையில், கொடியைக் கொளுத்தப்போகிறோம் என்று அவர்கள் காரணம் காட்டுகிறார்கள் ; இந்தி எதிர்ப்புக்கான கிளர்ச்சியை வடநாட்டுச் சர்க்கார் அலட்சியப் படுத்துவதை நாமும் கண்டிருக்கிறோம்; வடநாட்டுச் சர்க்காருடைய கவனத் தைக் கவரும்படி இருக்க வேண்டுமென்று தான் நாம் இரயில் நிறுத்தக் கிளர்ச்சி நடத்தினோம். நாம் கலந்து பேச அழைக்கப்பட்டிருந்தால், கிளர்ச்சி எப்படி இருக்க வேண்டு மென்றால், இந்தி எதிர்ப்பு விஷயத்தில் அனு தாபம் கொண்ட காங்கிரஸ்காரர்களையும் நமது பக்கம் சேர்க்கும்படியானதாக இருக்க வேண்டும்; கொடி கொளுத்துவது போன்ற முறைமுலம், காங்கிரஸ்காரர்