உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

111 லைக்கு ஒரு போரா? ஏனய்யா தலைவரே!. அதற்காக ஒரு குழு வேலை செய்ய இருக்கிறதே தெரியுமா? என்று கேட்டிருக்கலாம். என்ன இருக்கிறதோ கடிதத்தில், தெரியாது - கடிதம் பெரிய இடத்தது- எனவே விஷயம் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் எண் ணிக்கொள்வார்கள் என்று ம.பொ.சி. நம்புகிறார், மறுத்தீர் களோ, தமிழின்மீது ஆணையிட்டுவிடுவார் ! எப்படியோ ஒன்று, காண்போரும் கேட்போரும் மயிர்க் கூச்செறியும் நிலை பெற இருந்த மகத்தான வாய்ப்புப் போய் விட்டது - ஆகஸ்ட்டுப் போர் நிறுத்தப்பட்டுவிட்டது. இவருடைய போர்ப் பிரகடனம், பிறகு அதை நிறுத்தி விட்டதாகத் தரும் அறிவிப்பு இதைக் கவனிக்கும் போது, தஞ்சையில் மாணவத் தோழர்கள் நடத்திய கிளர்ச்சி என் நினைவிற்கு வருகிறது. மாணவர்கள் அங்கு ஒரு தலைமை ஆசிரியர் சம்பந்தமாகக் கிளம்பிய பிரச்சினைக்காகக் கிளர்ச்சி செய்தனர்; இப்போது கிளர்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது--காரணம், மாணவர்களின் கோரிக்கையைக் கவனித்து, குறையினைக் களைந்துவிடுவதாக ஊர்ப்பெரியவர்கள், பல கட்சிகளிலும் உள்ள பிரமுகர்கள்- கடிதம் கொடுத்து அல்ல- பொதுக்கூட்டம் போட்டு வாக் களித்தனர் தங்கள் கிளர்ச்சி பலன் தந்தது என்று மாணவர் கள் கிளர்ச்சியை நிறுத்தி விட்டனர். ஆகஸ்ட்டுப்போராட்டத்தை அன்பர் சிவஞானம் நிறுத்தி விட்டாரே, அத்துடன், மாணவர்கள் தமது முயற்சியில் வெற்றிபெற்ற தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப் படிப்பட்ட போர் அறிவிப்பாளர்களுடன் கூடி இருப்பதைக் காட்டிலும், மாணவனாக இருப்பது எவ்வளவோ மேலானது என்று உனக்குத் தோன்றுகிறதல்லவா - எனக்கு அவ்விதம் தான் தோன்றுகிறது, தம்பி. தம்பி, இதைவிட மகத்தான முறையிலே அகாலிகள் கிளர்ச்சி நடத்தி வெற்றிபெற்றுள்ளனர் - பதினாயிரம்பேர் சிறை புகுந்தனர் - நாலைந்து M.P. க்கள் பத்துப்பன்னிரண்டு M.L.A.க்கள் -இவர்களை நடத்திச் செல்ல தாராசிங் எனும் முதுபெரும் கிழவர். தடை உத்தரவை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்தப்பட்டது-தடை உத்தரவை சர்க்கார்" 'வாபஸ்' பெற்றனர். கிளர்ச்சி நிறுத்தப்பட்டது- தாராசிங்கோ இன் னும் சிறையிலேதான் இருக்கிறார். அகாலிகள் நடாத்திய இந்த அரும்பெரும் போராட்டம்பற்றி அதிகம் தெரிந்திருக் காது நமது மக்களுக்கு - தாராசிங் பாஞ்சாலத்தில் இருக் கிறார் - அவருடைய போர் குறித்து இங்கு முழக்கம் செய்ய எந்த இதழும் இல்லை!